2021 ற்குரிய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இந்த வருடம் ஜனவரி 22ஆம் திகதி நடைபெற்றது. இதன் பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியிடப்பட்டன.
இந்நிலையில் இதற்கான மாவட்ட ரீதியிலான வெட்டுப்புள்ளிகள் தற்போது பரீட்சைத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளன.
சிங்கள மொழி மூலம், தமிழ் மொழி மூலம் என்பன வெவ்வேறாக வெளியிடப்பட்டுள்ளன.
தமிழ் மொழிமூல மாவட்ட ரீதியிலான வெட்டுப்புள்ளிகளில் ஆகக்கூடிய புள்ளியாக 149 ம் ஆகக்குறைந்த புள்ளியாக 145 ம் காணப்படுகின்றது.
ஆகக்குறைந்த வெட்டுப்புள்ளி இரத்தினபுரி மாவட்டத்திற்குரியதாகும்.
மாவட்ட ரீதியாக தமிழ் மொழி மூல வெட்டுப்புள்ளிகள் விபரம் பின்வருமாறு.
கொழும்பு - 149
கம்பஹா - 149
களுத்துறை - 149
கண்டி - 149
மாத்தளை - 149
நுவரெலியா - 146
காலி - 149
மாத்தறை - 149
அம்பாந்தோட்டை - 147
யாழ்ப்பாணம் - 148
கிளிநொச்சி - 148
மன்னார் - 148
வவுனியா - 147
முல்லைத்தீவு -147
மட்டக்களப்பு - 147
அம்பாறை -147
திருகோணமலை - 147
குருநாகல் - 149
புத்தளம்- 146
அனுராதபுரம் - 147
பொலன்நறுவை - 147
பதுளை -147
மொனராகலை - 146
இரத்தினபுரி - 145
கேகாலை - 149
பரீட்சைத் திணைக்களத்தினால் மாவட்ட ரீதியாக வெளியிடப்பட்ட வெட்டுப்புள்ளிகளின் விபரத்தை கீழே காணலாம்.
புலமைப்பரிசில் பரீட்சை: மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளிகள் வெளியாகின!
Reviewed by Irumbu Thirai News
on
March 14, 2022
Rating:
No comments: