இம்ரான் கான்: நம்பிக்கையில்லா பிரேரணையில் நடந்தது என்ன?


பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை அந்நாட்டு எதிர்க்கட்சிகள் கொண்டு வந்தன. 
 
இந்த நம்பிக்கையில்லா பிரேரணையானது அரசியல் யாப்புக்கு முரணானது எனக் கூறி அந்நாட்டின் பிரதி சபாநாயகர் அதனை நிராகரித்தார். 
 
இதனைத் தொடர்ந்து பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலுக்கு செல்வதாக இம்ரான்கான் அறிவித்தார். இவரின் இந்த பரிந்துரையை ஏற்று அந்நாட்டு ஜனாதிபதியும் பாராளுமன்றத்தை கலைப்பதற்கு உத்தரவிட்டார். 

இந்நிலையில் இது தொடர்பான வழக்கை கடந்த வியாழக்கிழமை விசாரித்த உயர் நீதிமன்றம் நம்பிக்கை இல்லா பிரேரணையை ரத்து செய்த பிரதி சபாநாயகரின் முடிவு செல்லாது எனவும் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது எனவும் நம்பிக்கை இல்லா பிரேரணை மீண்டும் நடத்தப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டது. 
 
இதனை தொடர்ந்து நேற்றைய தினம் நம்பிக்கையில்லா பிரேரணை நடைபெற்றது. இந்தப் பிரேரணை நிறைவேற்றுவதற்கு ஆகக்குறைந்தது 172 வாக்குகள் தேவை. 
 
இந்நிலையில் நேற்று நடைபெற்ற நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் இம்ரான் கானுக்கு எதிராக 

174 வாக்குகள் கிடைத்துள்ளன. அந்த வகையில் அவர் தற்போது பிரதமர் பதவியை இழந்துள்ளார். 
 
எனவே தற்போது வேறு ஒரு பிரதமர் தெரிவு செய்யப்பட வேண்டும். அவர் 2023 ஒக்ரோபர் மாதம் நடைபெறும் தேர்தல் வரை பதவியில் இருப்பார். 
 
பாகிஸ்தானில் எந்தவொரு பிரதமரும் ஆட்சி காலம் முடியும் வரை பதவியில் இருந்ததில்லை. மேலும் நம்பிக்கை இல்லா பிரேரணை மூலம் பதவி கவிழ்க்கப்பட்ட பாகிஸ்தானின் முதலாவது பிரதமர் இம்ரான் கான் ஆவார். 
 
இம்ரான் கான்: நம்பிக்கையில்லா பிரேரணையில் நடந்தது என்ன? இம்ரான் கான்: நம்பிக்கையில்லா பிரேரணையில் நடந்தது என்ன? Reviewed by Irumbu Thirai News on April 10, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.