ஆரம்ப பிரிவு மற்றும் உயர்தர ஆசிரியர்களுக்கு விசேட வேலைத்திட்டம் - கல்வி அமைச்சர்


எதிர்வரும் ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் மாத விடுமுறை குறைக்கப்பட்டு பாடசாலை நடைபெறும் நாட்களை அதிகரித்து அந்த மேலதிக தினங்களில் பிள்ளைகளுக்கு நிறைவுசெய்ய இயலாமல் போன சகல பாட விதானங்களையும் நிறைவு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 


இன்று இடம்பெற்ற சர்வதேச யோகா தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 


அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

ஆரம்பப் பிரிவு ஆசிரியர்களுக்கு ஜூலை மாதம் முதல் தொடர்ச்சியான பயிற்சி செயலமர்வுகள் இடம்பெறவிருப்பதுடன் உயர்தர ஆசிரியர்களுக்கு பல்கலைக்கழக கட்டமைப்பு மூலமான பயிற்சி செயலமர்வுகள் நடத்தப்பட்டு உயர் தரத்திற்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு வழிகாட்டல் வழங்கப்படும்.


இந்த விசேட வேலைத்திட்டம் ஆகஸ்ட், செப்டம்பர், ஒக்டோபர் ஆகிய மாதங்களில் நடைமுறைக்கு வரும் என்பதுடன் சகல பயிற்சி  நடவடிக்கைகளும் ஜூலை மாதம் நடைபெறுவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


இதனிடையே நாடளாவிய ரீதியில் பிரதான நகரங்கள் தவிர்ந்த ஏனைய பாடசாலைகளில் ஆசிரியர்களும் மாணவர்களும் 70 வீதம் முதல் 80 வீதம் வரையான தொகையினர் வருகை தந்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


ஆரம்ப பிரிவு மற்றும் உயர்தர ஆசிரியர்களுக்கு விசேட வேலைத்திட்டம் - கல்வி அமைச்சர் ஆரம்ப பிரிவு மற்றும் உயர்தர ஆசிரியர்களுக்கு விசேட வேலைத்திட்டம் - கல்வி அமைச்சர் Reviewed by Irumbu Thirai News on June 21, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.