பாடசாலைகளை எவ்வாறு நடத்துவது? கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட முழுமையான அறிக்கை!


கல்வி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் மாகாண கல்வி அதிகாரிகளுக்கிடையில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை கல்வியமச்சு வெளியிட்டுள்ளது. 
 
கல்வியமைச்சின் இந்த அறிவித்தலை முழுமையாக தமிழில் தருகிறோம். 

 
2022 ஜூன் 20 - 24 வாரத்தில் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளல். 
 
கல்வி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் மாகாண கல்வி அதிகாரிகளுக்கிடையில் 2022-6-18 அன்று இணைய வழியில் நடைபெற்ற கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்ட தகவல்களை அடிப்படையாக வைத்து 2022-6-20 முதல் 2022-6-24 வரை உள்ள ஒரு வாரத்தில் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை கீழே உளள முறைகளில் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. வலயக் கல்விப் பணிப்பாளர்கள் கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள் பாடசாலை அதிபர்கள் என்பவர்களின் கருத்துக்கள் மாகாண கல்விப் பணிப்பாளர் ஊடாகப் பெறப்பட்டு அவையும் இந்த தீர்மானம் மேற்கொள்ளலின் போது கவனத்தில் கொள்ளப்பட்டன. 
 
1. பிரதேச மட்டத்தில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள பாடசாலைகளில் உள்ள மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் போக்குவரத்து சிரமங்களை ஏற்படுத்தாத வகையில் பாடசாலைகளை ஆரம்பித்து நடாத்திச் செல்ல மாகாண கல்வி அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
 
2. அதேபோன்று குறித்த பாடசாலைக்கு வர முடியாத மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு அந்த நிலையிலும் குறித்த பாடசாலையை நடாத்திச் செல்ல முடியுமான நிலை காணப்பட்டால் அது தொடர்பாக அதிபர்கள் வலயக்கல்வி பணிப்பாளருடன் கலந்துரையாடி பொருத்தமான நடைமுறைகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
 
3. பாடசாலை நடைபெற்றும் குறித்த மாணவர் குழுவுக்கு வர முடியாவிட்டால் அந்த மாணவர் தொடர்பாக இணையவழியில் கற்பிப்பதற்கான வசதி காணப்பட்டால் அந்த முறையை பயன்படுத்த முடியும். 
 
4. மேல் மாகாணத்தில் கொழும்பு வலயம் மற்றும் அண்மைய நகர பாடசாலைகள் மற்றும் ஏனைய மாகாணத்தின் பிரதான நகரங்களில் உள்ள பாடசாலைகள் இந்த வாரம் நடத்தாமலிருக்க தீர்மானிக்கப்பட்ட நிலையில் பிரதான நகரங்கள் அல்லாத பிரதேசங்களில் காணப்படும் பாடசாலைகள் தொடர்பாக பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மேல் மாகாணம் உட்பட ஏனைய மாகாணங்களின் கல்வி அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

5. வாரநாட்களில் இணைய வழியில் கற்பிக்க வசதியான முறையில் காலை 8 மணி முதல் பகல் 1 மணிவரை மின் துண்டிப்பை மேற்கொள்ளாதிருக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு உடன்பட்டுள்ளது. 
 
இந்த காலப்பகுதியினுள் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் மூலம் சுயமாக செய்யப்படும் வேலைகளை கல்வி அமைச்சு பாராட்டும் அதேவேளை,  இதை கருத்திற் கொண்டு செயற்படுமாறு மாகாண கல்வி அதிகாரிகளுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. 
 
இந்த வாரத்தில் இடம்பெறும் செயற்பாடுகளை அவதானித்து எதிர்வரும் சனிக்கிழமை அதாவது 2022-6-25ஆம் திகதி மாகாண கல்வி அதிகாரிகளுடன் நடைபெறவுள்ள கலந்துரையாடலின் பின்னர் ஜூன் 27 ஆரம்பமாகும் வாரம் தொடர்பாக தீர்மானங்கள் வெளியிடப்படும். 
 
ஊடகப்பிரிவு. 
கல்வி அமைச்சு. 
 
இது தொடர்பாக கல்வியமைச்சு வெளியிட்ட ஊடக அறிக்கையைக் கீழே காணலாம்.
 


பாடசாலைகளை எவ்வாறு நடத்துவது? கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட முழுமையான அறிக்கை! பாடசாலைகளை எவ்வாறு நடத்துவது? கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட முழுமையான அறிக்கை! Reviewed by Irumbu Thirai News on June 18, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.