நாட்டில் உள்ள அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் ஆகஸ்ட் 1 முதல் 5 வரையான வாரத்தில் மூன்று நாட்கள் மாத்திரமே நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்தது.
அதாவது திங்கள், செவ்வாய், வியாழன் ஆகிய மூன்று தினங்கள் பாடசாலைகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இதற்கு மாற்றமாக தென் மாகாண பாடசாலைகள் வாரத்தில் ஐந்து நாட்களும் நடைபெறும் என தென்மாகாணம் அறிவித்துள்ளது.
அதாவது குறித்த வாரத்தில் ஐந்து நாட்களும் மாணவர்கள் வருகை தர வேண்டும்.
ஆனால் ஆசிரியர்கள் இரண்டு நாட்கள் விடுமுறை எடுக்கலாம். அந்த விடுமுறை தனிப்பட்ட விடுமுறையாக கருதப்பட மாட்டாது. இந்த விடுமுறையானது முன்னரே அறிவித்து எடுக்கப்பட வேண்டும்.
இதே வேளை நாளாந்தம் போதுமான சமமான எண்ணிக்கையில் ஆசிரியர்களின் வருகையை உறுதிப்படுத்துவதோடு நெகிழ்வு தன்மையான நேரசூசி முறையும் பின்பற்றப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு 05 நாட்கள், ஆசிரியர்களுக்கு 03 நாட்கள்: தென் மாகாணத்தின் தீர்மானம்!
Reviewed by Irumbu Thirai News
on
July 31, 2022
Rating:
No comments: