Annual Teacher Transfer - 2023 (Central Province) / வருடாந்த ஆசிரியர் இடமாற்றம் - 2023 (மத்திய மாகாணம்)
மத்திய மாகாணத்திற்குட்பட்ட பாடசாலைகளில் சேவை புரியும் ஆசிரியர்களிடமிருந்து 2023 ஆம் வருடத்திற்கான ஆசிரியர் சேவை இடமாற்றங்களுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
வலயத்தினுள் இடமாற்றம் மற்றும் வலயங்களுக்கிடையிலான இடமாற்றங்களுக்கு இணையதளத்தின் ஊடாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
மாகாணங்களுக்கிடையிலான இடமாற்றம் மற்றும் தேசிய பாடசாலைக்கான இடமாற்றம் என்பவற்றிற்கு மத்திய மாகாண கல்வி திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தியுள்ள புதிய விண்ணப்ப படிவத்தை மட்டுமே பயன்படுத்தவும். இதை வலயக் கல்வி காரியாலயங்களில் பெறலாம்.
சப்பிரகமுவ மாகாணத்திலும் ஆசிரியர் இடமாற்றத்திற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அதன் விபரம் மற்றும் விண்ணப்பத்தை கீழுள்ள லிங்கில் சென்று பார்வையிடலாம்.
வேறு மாகாணத்தின் மாகாண பாடசாலைகளுக்கு செல்வதாயின் 5 விண்ணப்பங்களும் மாகாண பாடசாலையிலிருந்து தேசிய பாடசாலைக்கு செல்வதாயின் 5 விண்ணப்பங்களும் சமர்ப்பிக்க வேண்டும்.
தேவை கருதியும் நியமன கடிதத்தின் நிபந்தனைகள் பூர்த்தி செய்வதற்காகவும் வேறு கல்வி வலயத்தில் உள்ள கஷ்ட பிரதேச பாடசாலைக்கு தங்களை பதவியில் அமர்த்த முடியும்.
ஒழுக்காற்று நடவடிக்கை காரணமாக இடமாற்றம் பெற்ற ஆசிரியர்கள் இடமாற்றம் தொடர்பாக விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்.
வேறு மாகாணத்திற்கு இடமாற்றம் கோருவதாயின் மத்திய மாகாணத்தில் குறைந்தபட்சம் 5 வருடங்கள் சேவையை பூர்த்தி செய்திருத்தலுடன் நிரந்தரமாக்கப்பட்டிருத்தலும் அவசியமாகும்.
விண்ணப்ப முடிவு திகதி: 30-07-2022.
Online விண்ணப்பத்திற்கு கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்க.
இது தொடர்பான பத்திரிகை அறிவித்தலை கீழே காணலாம்.
Annual Teacher Transfer - 2023 (Central Province) / வருடாந்த ஆசிரியர் இடமாற்றம் - 2023 (மத்திய மாகாணம்)
Reviewed by Irumbu Thirai News
on
July 08, 2022
Rating:

No comments: