தென் மாகாண பாடசாலைகள் ஜூலை 25 முதல் 29 வரையான 5 நாட்களும் நடைபெறும் என மாகாண கல்வி அமைச்சின் செயலாளரின் கையொப்பத்துடன் வெளியான அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய(22) தினம் இது தொடர்பில் ஆளுநரின் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதம செயலாளர், மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மாகாண கல்வி பணிப்பாளர் மற்றும் வலய கல்வி பணிப்பாளர்கள் உட்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதே வேளை தற்போதைய போக்குவரத்து நெருக்கடி காரணமாக பாடசாலைக்கு வருவதில் சிக்கல்களை எதிர்கொண்ட அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
இவ்வாறு பாடசாலைக்கு வர முடியாத தினங்கள் தொடர்பில் அதிபர்கள் வலய கல்விப் பணிப்பாளரிடம் அல்லது உதவி / மேலதிக கல்வி பணிப்பாளரிடம் அனுமதி பெறுவதோடு ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் அதிபரிடம் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும்.
அவ்வாறு அனுமதி பெறப்பட்ட தினங்களில் வராத பட்சத்தில் விசேட விடுமுறையாக கணிக்கப்படுவதோடு அவர்களின் தனிப்பட்ட விடுமுறையில் பதியப்பட மாட்டாது.
நிலவும் நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அதிபர்கள், ஆசிரியர்கள் கல்வி சாரா ஊழியர்கள் மாகாணத்தின் கல்வி தொடர்பாக காட்டும் அர்ப்பணிப்பை வரவேற்பதோடு எதிர்காலத்திலும் தென் மாகாண மாணவ, மாணவிகளின் கல்வியை மேம்படுத்துவதற்கு உங்கள் அனைவரின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம் என அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் மாகாண பாடசாலைகள் ஐந்து நாட்களும் நடைபெறும்!
Reviewed by Irumbu Thirai News
on
July 23, 2022
Rating:
No comments: