வாராந்தம் கோட்டா அடிப்படையில் வாகனங்களுக்கு எரிபொருள் வழங்குவதை உறுதிப்படுத்துவதற்கான தேசிய எரிபொருள் அனுமதி பத்திரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும்
வலுசக்தி அமைச்சர் காஞ்சனா விஜயசேகர தெரிவித்துள்ளார்.
ஒரு தேசிய அடையாள அட்டைக்கு ஒரு வாகனத்தை பதிவு செய்யலாம். வாகனத்தின் விவரங்களும் அடிச்சட்ட இலக்கமும் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் வாகனத்திற்கான QR Code ஒதுக்கப்படும். அதன் அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கப்படும்.
வாகன இலக்கத்தகடின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் வாரத்திற்கு இரண்டு நாட்கள் ஒதுக்கப்பட்டு எரிபொருள் விநியோகிக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த அனுமதி பத்திரத்தை பெறுவதற்கான Online விண்ணப்பப் படிவம் மின் சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.
குறித்த Online விண்ணப்பத்திற்கு செல்ல கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
National Fuel Pass Registration/ தேசிய எரிபொருள் அனுமதி பத்திரத்திற்கான விண்ணப்பம்
Reviewed by Irumbu Thirai News
on
July 16, 2022
Rating:
No comments: