20 ரூபாய்க்காக 22 வருடம் போராடி வெற்றி பெற்ற நபர்


20 ரூபாய்க்காக 22 வருடம் போராடி நபர் ஒருவர் வெற்றி பெற்ற சம்பவம் இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது. 

துங்கநாத் சதுர்வேதி என்ற குறித்த நபர் 1999 ஆம் ஆண்டு புகையிரத அனுமதி சீட்டை கொள்வனவு செய்துள்ளார். குறித்த அனுமதிச்சீட்டை வழங்கியவர் 70 ரூபாவுக்கு பதிலாக 90 ரூபாய் வசூலித்துள்ளார். 

இதனை எதிர்த்து துங்கநாத் சதுர்வேதி நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கானது 22 வருடங்களாக சுமார் 100 தவணைகளில் அழைக்கப்பட்ட நிலையில் கடந்த வாரம் இதற்கான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

அதாவது மனுதாரருக்கு 20 ரூபாய் பணம் திருப்பி தர வேண்டும். அத்துடன் 1999 முதல் 2022 வரையான காலப்பகுதிக்காக 12 வீத வட்டியையும் சேர்த்து 15,000 ரூபாய் அபராதமாக செலுத்தப்பட வேண்டும். இந்த 15,000 ஆனது 30 நாட்களுக்குள் செலுத்தப்பட வேண்டும். அவ்வாறு செலுத்தப்படாவிட்டால் 15 வீதம் வட்டி அறவிடப்படுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இது தொடர்பில் துங்கநாத் சதுர்வேதி கூறுகையில், இந்த அபராத தொகையானது சிறிய தொகையாக இருந்தாலும் நீதிக்கான போராட்டம் வெற்றி அடைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

குறித்த நபருக்கு தற்போது 66 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

20 ரூபாய்க்காக 22 வருடம் போராடி வெற்றி பெற்ற நபர் 20 ரூபாய்க்காக 22 வருடம் போராடி வெற்றி பெற்ற நபர் Reviewed by Irumbu Thirai News on August 11, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.