பாடசாலை மாணவர்களுக்கு பகுதி நேரமாக தனியார் துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்பை பெறும் வகையில் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது
16 தொடக்கம் 20 வயதுக்கு உட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு இவ்வாறு பகுதிநேர தொழில் வாய்ப்பை பெறும் வகையில் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாணவர்கள் தொழில் செய்யும் சூழலுக்கு பழக்கப்படாததன் காரணமாக வேலை உலகில் பல்வேறு பிரச்சனைகள் எழுகின்றன.
மாதாந்தம் 20 மணித்தியாலங்கள் வேலை செய்யக்கூடிய வகையில் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும். இவ்வாறு தொழில் புரிபவர்களுக்கான கொடுப்பனவை வழங்கவும் தனியார் துறை நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படும்.
இதேவேளை பெண்களை மாலை 6 மணிக்கு பின்னர் வரையறுக்கப்பட்ட சில தொழில்களில் மாத்திரமே ஈடுபடுத்தலாம் என்ற சட்ட விதிமுறைகளிலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவுள்ளது. இதற்காக அமைச்சரவை அனுமதியும் கிடைத்துள்ளது.
இந்த திருத்தங்களை மேற்கொள்வதற்காக 1954 ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க கடைக்காரியாலய ஊழியர் சட்டம் திருத்தப்படவுள்ளது. இதற்காக அமைச்சரவை அனுமதியும் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாடசாலை மாணவர்களுக்கு பகுதிநேர வேலை வாய்ப்பு: அரசாங்கம் நடவடிக்கை!
Reviewed by Irumbu Thirai News
on
August 09, 2022
Rating:
No comments: