இந்திய பெரும் செல்வந்தரான கௌதம் அதானியின் அதானி குழுமமானது விமான நிலையம், துறைமுகம், எரிசக்தி, தொலைத்தொடர்பு என பல்வேறு துறைகளில் கால் பதித்து வேகமாக முன்னேறி வருகிறது.
வேகமாக முன்னேறி வரும் அதானி இந்தியாவின் செல்வந்தர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த அம்பானியை கடந்த பெப்ரவரி மாதம் பின்தள்ளி இந்தியாவின் செல்வந்தர்கள் பட்டியலில் முதலிடத்தை பெற்றார்.
அதன் பின்னர் ஆசியாவின் பெரும் செல்வந்தர்கள் பட்டியலிலும் முதலிடத்தை அடைந்தார்.
அதன் பின்னர் கடந்த ஜூலை மாதம் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸையும் பின்ள்ளி உலக பணக்காரர்கள் வரிசையில் 4ம் இடத்திற்கு முன்னேறினார்.
இந்நிலையில் அவரது பயணத்தின் மற்றுமொரு மைல் கல்லாக தற்போது 137.4 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் அதானி, பிரான்சை சேர்ந்த பெர்னாட் ஆர்னால்ட் என்பவரை பின்தள்ளி உலக பணக்காரர்கள் வரிசையில் மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
தற்போதைய நிலையில் உலக பணக்காரர்கள் வரிசையில் எலான் மஸ்க் மற்றும் ஜெப் பெசோஸ் ஆகியோர் முறையே முதலாம் மற்றும் இரண்டாம் இடங்களில் உள்ளனர்.
ப்ளூம்பேர்க் பில்லியனர்கள் குறியீட்டுக்கமைய ஆசிய கண்டத்தை சேர்ந்த ஒருவர் உலக பணக்காரர்களின் வரிசையில் முதல் மூன்று இடங்களுக்குள் வந்துள்ளமை இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.
கௌதம் அதானியின் மற்றுமொரு சாதனை!
Reviewed by Irumbu Thirai News
on
August 30, 2022
Rating:
No comments: