அண்மையில் வெளியிடப்பட்ட 2021 ஆம் வருடத்திற்குரிய உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கு எந்த விதத்திலும் பாதிப்புகள் ஏற்படவில்லை என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தை காலி பிரதேசத்தில் வசிக்கும் பாடசாலை மாணவர் ஒருவர் ஹேக் செய்து பெறுபேறுகளை மாற்றியதாக வெளியான தகவல்களில் உண்மை இல்லை எனவும் அந்த மாணவர் பரீட்சை திணைக்களத்தில் வெளியிடப்பட்ட முடிவுகளை பெற்று தனது இணையதளத்தின் மூலம் வழங்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளார் எனவும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 5000 உறுப்பினர்களைக் கொண்ட டெலிகிராம்(Telegram) குழுவில் இணைந்துள்ள இந்த குறித்த மாணவன் அங்கு பகிரப்பட்ட ஹேக்கிங் குறித்த நுட்ப முறைகளை எடுத்து அந்த வழிமுறைகளை பின்பற்றி பரீட்சை திணைக்களத்தின் இணையதளத்தை ஹேக் செய்து அதிலிருந்து சுமார் 270,000 பேரின் பெறுபேறுகளை எடுத்து அது போன்று வேறொரு இணைய தளத்தில் காட்சிப்படுத்தியுள்ளதாக குறித்த மாணவன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டதாக அண்மையில் செய்திகள் வெளியாகின.
காலியில் உள்ள முன்னணி பாடசாலை ஒன்றில் தகவல் தொழில்நுட்பம் கற்கும் குறித்த மாணவர் இந்த வேலையை செய்துள்ளதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
குறித்த டெலிகிராம் குழுவிற்குள் நுட்பமான முறையில் இணைந்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் சைபர் குற்றப்புலனாய்வு பிரிவு இவர்களின் நடவடிக்கைகளை அவதானித்து விசாரணைகளை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த அடிப்படையிலேயே குறித்த மாணவன் இம்மாதம் 7ம் தேதி புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் அண்மையில் வெளிவந்தது.
இந்த செய்தியை தொடர்ந்து, உயர்தர பெறுபேறுகள் மாற்றப்பட்டதா என்ற பல கருத்துக்கள் வெளிவந்த நிலையில் பரீட்சை திணைக்களம் தற்போது இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை - பரீட்சைகள் திணைக்களம்
Reviewed by Irumbu Thirai News
on
September 10, 2022
Rating:
No comments: