அரச ஊழியர்கள் 05 வருடங்களுக்கு உள்நாட்டிலோ வெளிநாட்டிலலோ சம்பளமற்ற விடுமுறை பெறுவது தொடர்பான சுற்றறிக்கை பாடசாலை ஆசிரியர்கள், சுகாதாரத் துறையினர் மற்றும் தொழில்நுட்ப சேவை நிபுணர்கள் என்பவர்களுக்கு பொருந்தாது என பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர்
M.M.P.K. மாயாதுன்னே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான சுற்றறிக்கை தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த விடுமுறையானது ஏனைய அரச நிறுவனங்களில் உள்ள மேலதிக ஊழியர்களை விடுவிப்பதற்காக அறிமுகப்படுத்தபட்டதாகும். மாறாக நாட்டுக்கு தேவையான அத்தியாவசிய சேவையில் உள்ளவர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது எனவும் அவர் தெரிவித்தார்.
Related:
ஐந்து வருட சம்பளமற்ற விடுமுறை ஆசிரியர்கள், சுகாதாரத் துறையினருக்கும் பொருந்தாது!
Reviewed by Irumbu Thirai News
on
September 14, 2022
Rating:
No comments: