இந்த கோர தாக்குதலின் 21 வருட நினைவு நாள் இன்று.
இந்த தாக்குதல்களுக்கு அல்கொய்தா அமைப்பு உரிமை கோரியதாக தெரிவிக்கப்படுகிறது.
அன்றைய தினம் அமெரிக்கா மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு மொத்தம் 04 பயணிகள் விமானம் கடத்தப்பட்டது. அதில் இரண்டு விமானங்கள் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்திருந்த உலக வர்த்தக மைய இரட்டை கோபுரங்கள் மீது மோதியதில் சுமார் 110 அடுக்குமாடிகள் கீழே விழுந்து தரைமட்டமாகின. அதன் புகை மண்டலம் பல கிலோமீட்டருக்கு பரவியது.
மற்றுமொரு விமானம் அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பெண்டகன் மீது தாக்குதல் நடத்தியது.
பிளைட் 93 என்ற மற்றுமொரு விமானம் அமெரிக்க பென்சில்வேனியாவில் உள்ள வயல் பகுதி ஒன்றில் விழுந்து நொறுங்கியது. அந்த விமானத்தில் இருந்த பயணிகள் குறித்த தாக்குதல்தாரர்களை எதிர்த்து போராடியதில் விமானம் உரிய இலக்கை அடைய தவறி வயல் பகுதியில் விழுந்து நொறுங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதல்களில் மொத்தமாக சுமார் 3000 பேர வரை கொல்லப்பட்டனர். அமெரிக்க வரலாற்றிலேயே மறக்க முடியாத ஒரு நாளாக இது பதிவானது.
அல்கொய்தாவின் தலைவர் ஒசாமா பின்லேடன் ஆப்கானிஸ்தானில் மறைந்துள்ளதாக கூறி ஆப்கான் மீது அமெரிக்கா படையெடுத்தது. அங்கு பல வருடங்கள் யுத்தம் நடந்தது. பின்னர் ஒசாமா பின்லேடன் அமெரிக்க படைகளால் பாகிஸ்தானில் வைத்து கொல்லப்பட்டார்.
ஆப்கானை விட்டு அண்மையில் அமெரிக்க வெளியேறியது. இருந்தாலும் ஆப்கானில் அமெரிக்கா சந்தித்த இழப்புகளை ஒப்பீடு செய்த பாதுகாப்பு நிபுணர்கள் அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் தோல்வியை சந்தித்ததாகவே பொதுவாக கருத்து வெளியிட்டனர்.
இதேபோன்று ஈராக்கில் ரசாயன ஆயுதங்கள் இருப்பதாக ஈராக் மீது அமெரிக்கா படையெடுத்திருந்தது. பின்னர் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டார். ஆனால் அங்கு எவ்வித ரசாயன ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டதாக அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை.
அப்பாவி மக்களை கொள்ளும் எந்த ஒரு செயலும் மன்னிக்க முடியாத பயங்கரவாத தாக்குதலாகும். இது யார் செய்தாலும் மன்னிக்க முடியாத குற்றமாகும்.
ஏனைய செய்திகள்:
உலகை உலுக்கிய அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலின் நினைவு நாள் இன்று!
Reviewed by Irumbu Thirai News
on
September 11, 2022
Rating:
No comments: