இஸ்லாம் பாட புத்தக விவகாரம் தொடர்பில் கல்வி அமைச்சரின் எச்சரிக்கை!



இஸ்லாம் பாட புத்தக விவகாரம் தொடர்பில் தன் மீது போலியான குற்றச்சாட்டுகளை சுமத்துவது தொடர்பாக கல்வி அமைச்சர் நேற்று பாராளுமன்றத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இது தொடர்பில் உரையாற்றிய கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த, 

2022 ம் வருடத்திற்குரிய இஸ்லாம் பாட நூல்களின் திருத்தப்பட்ட பதிப்புகள் தரம் 06 தொடக்கம் 11 வரையான வகுப்புகளுக்கு தற்போது விநியோகிக்கப்பட்டு வருகின்றன. 

இந்தப் பாட நூல்களில் ஏற்கனவே முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு அது தொடர்பில் முழுமையாக ஆராய்ந்து பரிந்துரைகளை முன்வைத்தது. அந்தப் பரிந்துரைகளின் அடிப்படையில் திருத்தப்பட்ட பாடநூல்கள் தற்போது அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

ஆனால் மத அடிப்படை வாதம் கொண்ட புத்தகங்கள் விநியோகிக்கப்படுவதாக சில இணையதளங்களில் என் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என தெரிவிக்கின்றேன். 

இந்த புத்தகங்களானது சகல மதத்தினரின் உடன்பாட்டுடனேயே விநியோகிக்கப்படுகிறது. சகல மாணவர்களுக்கும் சமமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அந்த மாணவர்கள் எதிர்வரும் மே மாதம் சாதாரண தர பரீட்சைக்கு தோற்ற உள்ளனர். அவர்களுக்கும் நியாயம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கிலேயே இதைச் செய்தேன். 

குறித்த இணையதளங்கள் பொய்யான பிரசாரங்களை பரப்பி வருகின்றன. இதை இவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் இவர்களுக்கு எதிராக சிறப்புரிமை பிரச்சினை முன்னெடுக்கப்படும் என கல்வி அமைச்சர் எச்சரிக்கை விடுத்தார்.


இஸ்லாம் பாட புத்தக விவகாரம் தொடர்பில் கல்வி அமைச்சரின் எச்சரிக்கை! இஸ்லாம் பாட புத்தக விவகாரம் தொடர்பில் கல்வி அமைச்சரின் எச்சரிக்கை! Reviewed by Irumbu Thirai News on November 18, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.