ஜனாதிபதியின் விசேட அறிவிப்பு வெளியானது!

July 09, 2022

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறும் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் எடுக்கப்படும் எந்த ஒரு தீர்மானத்திற்கும் தான் உடன்படுவதாக ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

இந்த விடயத்தை ஜனாதிபதி தன்னிடம் தெரிவித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

முன்னதாக கட்சித் தலைவர்களுக்கான அவசர கூட்டத்தை நடத்துமாறும் பாராளுமன்றத்தை அவசரமாக கூட்டுமாறும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதியின் உத்தியோக வாசஸ்தலம் என்பவற்றுக்குள் பொதுமக்கள் நுழைந்து அவற்றை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த நிலையிலேயே பிரதமரின் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

இதேவேளை கடற்படைக்கு சொந்தமான இரண்டு கப்பல்களில் முக்கிய தரப்பினர் சிலர் கொழும்பு துறைமுகத்தில் இருந்து சென்றுள்ளதாக துறைமுக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மேலும் முக்கிய பிரமுகர்களின் வாகனங்கள் சில கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அவசரமாக செல்லும் வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளத்தில் இப்போது வேகமாக பரவி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதியின் விசேட அறிவிப்பு வெளியானது! ஜனாதிபதியின் விசேட அறிவிப்பு வெளியானது! Reviewed by Irumbu Thirai News on July 09, 2022 Rating: 5

Annual Teacher Transfer - 2023 (Central Province) / வருடாந்த ஆசிரியர் இடமாற்றம் - 2023 (மத்திய மாகாணம்)

July 08, 2022

Applications are invited to a annual Teacher Transfer in the Central Province for 2023. 
 
மத்திய மாகாணத்திற்குட்பட்ட பாடசாலைகளில் சேவை புரியும் ஆசிரியர்களிடமிருந்து 2023 ஆம் வருடத்திற்கான ஆசிரியர் சேவை இடமாற்றங்களுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. 
 
வலயத்தினுள் இடமாற்றம் மற்றும் வலயங்களுக்கிடையிலான இடமாற்றங்களுக்கு இணையதளத்தின் ஊடாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 

மாகாணங்களுக்கிடையிலான இடமாற்றம் மற்றும் தேசிய பாடசாலைக்கான இடமாற்றம் என்பவற்றிற்கு மத்திய மாகாண கல்வி திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தியுள்ள புதிய விண்ணப்ப படிவத்தை மட்டுமே பயன்படுத்தவும். இதை வலயக் கல்வி காரியாலயங்களில் பெறலாம். 
 
சப்பிரகமுவ மாகாணத்திலும் ஆசிரியர் இடமாற்றத்திற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அதன் விபரம் மற்றும் விண்ணப்பத்தை கீழுள்ள லிங்கில் சென்று பார்வையிடலாம்.
 
 
வேறு மாகாணத்தின் மாகாண பாடசாலைகளுக்கு செல்வதாயின் 5 விண்ணப்பங்களும் மாகாண பாடசாலையிலிருந்து தேசிய பாடசாலைக்கு செல்வதாயின் 5 விண்ணப்பங்களும் சமர்ப்பிக்க வேண்டும். 
 
தேவை கருதியும் நியமன கடிதத்தின் நிபந்தனைகள் பூர்த்தி செய்வதற்காகவும் வேறு கல்வி வலயத்தில் உள்ள கஷ்ட பிரதேச பாடசாலைக்கு தங்களை பதவியில் அமர்த்த முடியும். 
 
ஒழுக்காற்று நடவடிக்கை காரணமாக இடமாற்றம் பெற்ற ஆசிரியர்கள் இடமாற்றம் தொடர்பாக விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள். 
 
வேறு மாகாணத்திற்கு இடமாற்றம் கோருவதாயின் மத்திய மாகாணத்தில் குறைந்தபட்சம் 5 வருடங்கள் சேவையை பூர்த்தி செய்திருத்தலுடன் நிரந்தரமாக்கப்பட்டிருத்தலும் அவசியமாகும். 
 
விண்ணப்ப முடிவு திகதி: 30-07-2022. 
 
Online விண்ணப்பத்திற்கு கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
இது தொடர்பான பத்திரிகை அறிவித்தலை கீழே காணலாம். 
 

Annual Teacher Transfer - 2023 (Central Province) / வருடாந்த ஆசிரியர் இடமாற்றம் - 2023 (மத்திய மாகாணம்) Annual Teacher Transfer - 2023 (Central Province) / வருடாந்த ஆசிரியர் இடமாற்றம் - 2023 (மத்திய மாகாணம்) Reviewed by Irumbu Thirai News on July 08, 2022 Rating: 5

08-07-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 08-07-2022

July 07, 2022

08-07-2022 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
 
குறிப்பு: தற்போதைய நிலையில் (07-07-2022: 11:30 PM) தமிழ் மொழி மூல வர்த்தமானி மாத்திரமே பதிவேற்றப்பட்டுள்ளது. ஆனால் ஆங்கிலம், சிங்களம் என்பவற்றுக்கான லிங்குகளையும் இங்கு தந்துள்ளோம். அரச அச்சக திணைக்களத்தால் பதிவேற்றம் செய்யப்பட்டதும் இந்த லிங்குகளில் சென்று பார்வையிடலாம். எனவே மீண்டும் மீண்டும் முயற்சி செய்து பாருங்கள். 
 
தமிழில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
சிங்களத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
 
முன்னைய வர்த்தமானி அறிவித்தலுக்கு செல்ல...
 
 
08-07-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 08-07-2022 08-07-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 08-07-2022 Reviewed by Irumbu Thirai News on July 07, 2022 Rating: 5

01-07-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 01-07-2022

July 07, 2022

01-07-2022 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
 
குறிப்பு: தற்போதைய நிலையில் (07-07-2022: 11:15 PM) தமிழ் மொழி மூல வர்த்தமானி மாத்திரமே பதிவேற்றப்பட்டுள்ளது. ஆனால் ஆங்கிலம், சிங்களம் என்பவற்றுக்கான லிங்குகளையும் இங்கு தந்துள்ளோம். அரச அச்சக திணைக்களத்தால் பதிவேற்றம் செய்யப்பட்டதும் இந்த லிங்குகளில் சென்று பார்வையிடலாம். எனவே மீண்டும் மீண்டும் முயற்சி செய்து பாருங்கள். 
 
தமிழில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
சிங்களத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
 
முன்னைய வர்த்தமானி அறிவித்தலுக்கு செல்ல...
 
 
01-07-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 01-07-2022 01-07-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 01-07-2022 Reviewed by Irumbu Thirai News on July 07, 2022 Rating: 5

புதிய வகையான முகக் கவசம் கண்டுபிடிப்பு!

July 07, 2022


புதிய வகையான N95 முகக் கவசத்தை அமெரிக்காவின் ரென்சீலர் பொலிடெக்னிக் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 

இந்த முக கவசமானது கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி அதை அழிக்கவும் செய்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதற்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட முகக் கவசத்தால் வைரஸ் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் அது அழிக்கப்படவில்லை. 


இந்த புதிய முக கவசத்தை நீண்ட காலம் பாவிக்கலாம். மேலும் காற்றின் மூலம் பொதுவாக பரவக்கூடிய கிருமிகளில் இருந்தும் பாதுகாப்பு வழங்குகிறது. 


ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள N95 முகக் கவசத்தில் காணப்படும் வடிகட்டுவதற்காக உள்ள அடுக்குகள் இரசாயண செயற்பாடுகளால் பாதிப்படைய கூடியவை. ஆனால் இந்த முக கவசத்தின் அடுக்குகள் பாலிபுரப்பலின் நார்கள் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதால் அவை வைரஸ் மற்றும் பாக்டீரியாவின் செல் சுவரை பாதிப்படையச் செய்து அவற்றை அழிக்கவும் செய்கின்றது.


புதிய வகையான முகக் கவசம் கண்டுபிடிப்பு! புதிய வகையான முகக் கவசம் கண்டுபிடிப்பு! Reviewed by Irumbu Thirai News on July 07, 2022 Rating: 5

Short course in Professional web development using Joomla and WordPress

July 06, 2022

The Open University of Sri Lanka 
 
Short course in Professional web development using Joomla and WordPress 
 
Duration: 03 Months. 
 
Medium: English/Sinhala 
 
Course fee: Rs. 25,000 /= (Per head) 
 
Closing Date: 15th July 2022.
 
Click the link below for online application:

Click the link below for full details:
 
 
Related:

 

 
 
Short course in Professional web development using Joomla and WordPress Short course in Professional web development using Joomla and WordPress Reviewed by Irumbu Thirai News on July 06, 2022 Rating: 5

04-07-2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்

July 05, 2022

04-07-2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். இதில், பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
 
முன்னைய அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்களைப் பார்வையிட...
 
04-07-2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் 04-07-2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் Reviewed by Irumbu Thirai News on July 05, 2022 Rating: 5

ஆசிரியர் சேவைக்குள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை இணைத்தல்: கல்வி அமைச்சரின் அறிவிப்பு!

July 04, 2022


அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக இருக்கும் பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்குள் இணைப்பதற்கு தடையாக உள்ள வயது வரம்பை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 


அரச சேவைக்குள் இணைத்துக் கொள்வதற்கான உச்ச வயதெல்லை 45 ஆகும். ஆனால் ஆசிரியர் சேவைக்குள் இணைத்துக் கொள்வதற்கான உச்ச வயதெல்லை 35 ஆகும். 


எனவே இந்த 35 வயதெல்லையை நீக்கி அவர்களை ஆசிரியர் சேவைக்குள் இணைத்துக் கொள்ள கல்வி அமைச்சு தயாராக உள்ளது. 


ஆனால் இது தொடர்பில் தொழிற்சங்கங்களோடு கலந்துரையாடியே முடிவெடுக்கப்படும். தொழிற்சங்கங்களின் இணக்கம் இருந்தாலே இந்த வயது தொடர்பான நியதி நீக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

ஆசிரியர் சேவைக்குள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை இணைத்தல்: கல்வி அமைச்சரின் அறிவிப்பு! ஆசிரியர் சேவைக்குள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை இணைத்தல்: கல்வி அமைச்சரின் அறிவிப்பு! Reviewed by Irumbu Thirai News on July 04, 2022 Rating: 5
Powered by Blogger.