இந்த வருடத்திற்கான(2023) இலவச பாட நூல்களை எதிர்வரும் 27 ஆம் திகதிக்குள் விநியோகிக்க எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம்(15) மஹரகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
ஆரம்ப வகுப்பு மற்றும் தரம் 06 முதல் 11 வரையான வகுப்பு பாடநூல்கள் விநியோகிக்கப்படும். மேலும் வழமையாக 4.5 பில்லியன் ரூபாய் இதற்காக செலவிடப்படும் ஆனால் இம்முறை 16 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
பாடநூல்களை அச்சிடுவதற்கு தேவையான மூலப்பொருட்கள் இந்தியாவிடமிருந்து பெறப்பட்டமையால் 45 வீதமான பாடநூல்கள் அரசாங்க அச்சகத்திலும் 55 வீதமான பாடநூல்கள் தனியார் அச்சகங்களிலும் அச்சிடப்பட்டன என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Previous:
இலவச பாடநூல் விநியோகம் தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு!
Reviewed by Irumbu Thirai News
on
February 16, 2023
Rating:
No comments: