உயர்தர பெறுபேறு தொடர்பில் அமைச்சரின் அறிவிப்பு!



ஆசிரியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் தாமதமாகின்றன. எனவே உயர்தர பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவது மேலும் தாமதமாகலாம் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.. 

மேலும் இந்த தொழிற்சங்க நடவடிக்கை தொடருமானால் இந்த வருடத்தில்(2023) உயர்தர பரீட்சைக்கு தோற்றுபவர்களின் பரீட்சை திகதியிலும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியேற்படும் என அவர் தெரிவித்தார். 

உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளுக்கான கொடுப்பனவு அதிகரிக்கப்பட்ட போதும் அந்தத் தொகை போதாது என ஆசிரியர் சங்கம் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
உயர்தர பெறுபேறு தொடர்பில் அமைச்சரின் அறிவிப்பு! உயர்தர பெறுபேறு தொடர்பில் அமைச்சரின் அறிவிப்பு! Reviewed by Irumbu Thirai News on March 09, 2023 Rating: 5

No comments:

Powered by Blogger.