Career Guide Tests for School Students (Online - NIE)



பாடசாலை மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல் பரிசோதனையை தேசிய கல்வி நிறுவகம்(NIE) Online முறை மூலம் அறிமுகம் செய்துள்ளது. 

பின்வரும் 03 பரிசோதனைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

(01) தொழில் ஆர்வப் பரீட்சை (Career Interest Test) 
இந்த சோதனையானது மாணவர்களின் விருப்பு வெறுப்புகளை அறிந்து கொள்ள உதவும். இது மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ற ஏதேனும் தொழிலை நோக்கி அவர்களது கவனத்தை செலுத்த செய்யும். 

மேலும் இச்சோதனையானது ஆஸ்திரேலியாவின் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜேம்ஸ் அதென்சவின் அனுமதியுடன் திறன் மேம்பாட்டு திட்டத்தால் தயாரிக்கப்பட்டதுடன் தேசிய கல்வி நிறுவகத்தால் 2022 இல் மேலும் அபிவிருத்தி செய்யப்பட்டது. 

Career interest test ற்கு செல்ல கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 



(02) தொழில் திறவுகோல் பரீட்சை (Career Key Test) 
இந்த பரிசோதனையானது அமெரிக்க உளவியலாளர் பேராசிரியர் ஜான் லூயிஸ் ஹாலன்ட் என்பவரால் உருவாக்கப்பட்டதுடன் தேசிய கல்வி நிறுவகத்தால் 2022 மேலும் அபிவிருத்தி செய்யப்பட்டது. 

வேலை/தொழில் சார் மற்றும் அதனுடன் தொடர்புடைய பணிச் சூழலுடன் இணக்கமான தனிப்பட்ட நடத்தையை அடையாளம் காணவும் பொருத்தமான தொழில் அல்லது தொழில் துறையின் தேர்வு மற்றும் திருப்திகரமான தொழில் வெற்றியை அடையவும் இந்த சோதனை உதவுகிறது. 

தங்களுக்கு பொருத்தமான வேலை தொடர்பான சரியான கல்வி மற்றும் பயிற்சி வாய்ப்புகளை தேர்வு செய்யவும் இந்த பரிசோதனை பயன்படும். 

Career Key Test ற்கு செல்ல கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 




(03) பல்திறன் நுண்ணறிவு சோதனை (Multiple Intelligence Test) 
இந்த சோதனையானது அமெரிக்க தேசிய அபிவிருத்தி உளவியலாளர் பேராசிரியர் ஹவார்ட் அல் காட்னர் அவர்களினால் தயாரிக்கப்பட்டதுடன் தேசிய கல்வி நிறுவகத்தால் 2022 இல் மேலும் அபிவிருத்தி செய்யப்பட்டது. 

நுண்ணறிவானது உங்களுடைய பலம் (Strength) மற்றும் உங்களுடைய பாங்கு(Style) மேலும் உங்கள் புத்திசாலித்தனம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். 

இயற்கை நுண்மதியின் ஆற்றலை எந்தளவுக்கு பயன்படுத்துகிறீர்கள்? அதனை எந்தளவு வளர்த்துக் கொள்கிறீர்கள் என்பதை பொறுத்து உங்களது வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் எதிர்கால வெற்றி என்பன தீர்மானிக்கப்படுகிறது. 

பாடசாலையிலே உங்களது திறன்கள் விருப்பு வெறுப்புகள் மற்றும் ஆர்வங்களின்படி பாடங்களை தெரிவு செய்துகொள்வதற்கும் கற்றல் பாங்கை இனங்கண்டு கொள்வதற்கும் எதிர்காலத்தில் தொழில் வாண்மை இலக்குகளை உருவாக்கிக் கொள்வதற்கும் இச்சோதனையை துணையாக எடுக்கலாம். 

Multiple Intelligence Test ற்கு செல்ல கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.





Previous:


Career Guide Tests for School Students (Online - NIE) Career Guide Tests for School Students (Online - NIE) Reviewed by Irumbu Thirai News on June 18, 2023 Rating: 5

No comments:

Powered by Blogger.