இங்கிலாந்து முழுவதும் வேகமாக பரவி வருகின்ற Eris என்ற குறியீட்டுப் பெயருடன் EG.5.1 என அழைக்கப்படும் புதியவகை கொரோனா மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது இங்கிலாந்தில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக அங்கு அதிகமானோர்க்கு தலைவலி, காய்ச்சல், மூக்கில் நீர்வடிதல் போன்ற அறிகுறிகள் காணப்படுகின்றன.
இந்நிலைமை பெருமளவான மக்களிடம் வேகமாக பரவி வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக இங்கிலாந்தின் சுகாதார பாதுகாப்பு முகவரகம் ஆராய்ந்த போது இது ஒமிக்ரோனின் மாறுபாடு அடைந்த வைரஸ் கிருமி என கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வைரஸானது இங்கிலாந்தில் 07 பேரில் ஒருவருக்குப் பரவியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. Eris என்பது கிரேக்க தெய்வத்தின் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது.
Previous:
இங்கிலாந்தில் பரவும் புதிய வகை கொரோனா! 7 பேரில் ஒருவருக்கு பாதிப்பு!
Reviewed by Irumbu Thirai News
on
August 06, 2023
Rating:
No comments: