உலகில் முதன்முறையாக மனித மூளையில் மூன்று அங்குல புழு கண்டுபிடிப்பு



உலகில் முதன்முறையாக மனித மூளையில் உயிருடன் காணப்பட்ட 3 அங்குல அதாவது சுமார் 8 CM புழு கண்டறியப்பட்டுள்ளது. 

அவுஸ்த்ரேலிய பெண் ஒருவருக்கு இருமல், வயிற்று வலி, இரவில் வியர்த்தல், வயிற்றுப்போக்கு போன்ற நிலைமைகள் காணப்பட்டுள்ளன. அது மாத்திரமன்றி மறதி நிலைமை அதிகரித்து மன அழுத்தமும் ஏற்பட்டது. 

இதனைத் தொடர்ந்து 2021 ஜனவரி மாத பிற்பகுதியில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவரை ஸ்கேன் செய்து பார்த்ததில் மூளையின் வலது பக்க முன் மடலில் காயம் போன்ற ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. 
பின்னர் 2022 ஜூன் மாதத்தில் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதன் பின்னரே அந்த விடயம் புழு என கண்டறியப்பட்டது. இதைப் பார்த்த சத்திர சிகிச்சை கூடத்தில் இருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மூளையில் இவ்வளவு காலமும் அந்த புழு உயிருடன் இருந்துள்ளது. தற்போது அந்தப் பெண் குணமடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த பெண் தான் வாழ்ந்த இடத்திற்கு அருகில் உள்ள ஏரிக்கரையில் கீரைகளை சேகரித்த பொழுது இந்த புழு தொற்றி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. 

எவ்வாறாயினும் விலங்குகளிலிருந்து மக்களுக்கு ஏற்படும் ஆபத்துக்கள், தொற்று நோய்கள் போன்றவை தொடர்பில் அவதானம் செலுத்துவதற்கு இந்த சம்பவம் ஓர் எடுத்துக்காட்டு என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Previous:

உலகில் முதன்முறையாக மனித மூளையில் மூன்று அங்குல புழு கண்டுபிடிப்பு உலகில் முதன்முறையாக மனித மூளையில் மூன்று அங்குல புழு கண்டுபிடிப்பு Reviewed by Irumbu Thirai News on August 29, 2023 Rating: 5

No comments:

Powered by Blogger.