HIV அபாயம் உள்ளவர்களுக்கு அந்த அபாயத்தைத் தடுப்பதற்காக "ப்ரெப்" என்ற புதிய சிகிச்சை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய பாலியல் நோய் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் உள்ள பாலியல் நோய் கிளினிக்குகளில் இந்த சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள முடியும் தேசிய பாலியல் நோய் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஜானகி விதானபத்திரன தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில், "தேசிய பாலியல் நோய் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம், எச்.ஐ.வி ஆபத்தில் உள்ளவர்களுக்கு சிகிச்சை முறையைத் தொடங்கியுள்ளது.
இந்த சிகிச்சை முறையை நாடளாவிய ரீதியில் உள்ள 41 தேசிய பாலியல் நோய் மையங்களில் பெறலாம். நீங்கள் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்படும் ஆபத்தில் இருப்பவராக இருந்தால், மருத்துவரைச் சந்தித்து உங்கள் ஆபத்து குறித்துப் பேசித் தேவையான சிகிச்சையைப் பெறுங்கள்.
இதற்காக செய்யப்படும் பரிசோதனைகள் மற்றும் மருந்துகள் இலவசமாகும். எச்.ஐ.வி ஆபத்தில் உள்ளவர்களுக்கு இந்த சிகிச்சைகளை மேற்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்." என்று அவர் தெரிவித்தார்.
இதேவேளை, இந்த வருடத்தின் முதல் காலாண்டில் புதிதாக 165 எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்கள் பதிவாகியுள்ளதாக வைத்தியர் ஜானகி விதானபத்திரன மேலும் குறிப்பிட்டுள்ளார்.
எச்.ஐ.வி அபாயத்தைத் தடுக்க புதிய சிகிச்சை முறை அறிமுகம்
Reviewed by Irumbu Thirai News
on
August 10, 2023
Rating:
No comments: