இந்த வருடத்திற்கான (2023) உயர்தரப் பரீட்சையின் திருத்தப்பட்ட திகதிகள் குறித்து பரீட்சைகள் ஆணையாளர் எதிர்வரும் வாரத்தில் அறிவிப்பார் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (21) விசேட உரையொன்றை ஆற்றிய போதே கல்வி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையை 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைப்பதால் ஏற்படக்கூடிய சூழ்நிலைகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால்,
2024 மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள 2023 ஆம் ஆண்டுக்கான சாதரண தரப் பரீட்சையை 2024 மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு ஒத்திவைக்க நேரிடும்.
2023 ஆம் ஆண்டுக்கான உயர் தர பரீட்சையின் பெறபேறுகள் 2024 ஜூலை இல் வெளியிடப்பட்டால். ஜூலை இல் பெறுபேறுகள் வெளியான பிறகு, 2024 ஆம் ஆண்டுக்கான உயர் பரீட்சைக்குத் தோற்றும் விண்ணப்பதாரர்களுக்கு இது போன்ற கூடுதல் காலம் வழங்கப்பட வேண்டும். அப்படியானால், 2024 உயர் தரப் பரீட்சையை 2024 டிசம்பர் அல்லது 2025 ஜனவரி வரை தாமதமாகும்.
அதற்கேற்ப, தற்போதைய கல்விமுறையின் பின்தங்கிய நிலையை சரிசெய்வது மேலும் தாமதமாகும்.
பாடசாலை பரீட்சைகள் மாற்றப்பட்டால் பாடசாலை அட்டவணைகளும் தாமதப்படுத்தப்படலாம்.
அதன்படி, முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைப்பது காலதாமதமாகலாம்.
உயர் தர பரீட்சை தாமதமாவதால் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் இரண்டு குழுக்கள் சிறிது காலம் காத்திருக்க வேண்டி வரும். இதனால் வகுப்பறைகளில் இடப் பிரச்சினைகள் ஏற்படும்.
அத்துடன் உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிடுவதில் காலதாமதம் ஏற்படுவதால் பல்கலைக்கழக அனுமதியும் தாமதமாகிறது என்றார்.
Source: adaderana.
Previous:
உயர்தரப் பரீட்சை குறித்த திகதியில் நடைபெறாது - கல்வி அமைச்சர்
Reviewed by Irumbu Thirai News
on
September 21, 2023
Rating:
No comments: