உயர்தர கணக்கீடு பரீட்சையின் போது மாணவர்களுக்கு அநீதி: பெற்றோர் விசனம்!



2023 ற்கான உயர்தர பரீட்சை தற்போது நடைபெறுகிறது. இதில் கணக்கீடு பகுதி - 1 ற்கான பரீட்சையின் போது மாணவர்கள் கணிப்பான்களை பயன்படுத்துவதில் பிரச்சனைகளை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

காலி பிரதேசத்தில் உள்ள பரீட்சை நிலையம் ஒன்றிலேயே இவ்வாறான நிகழ்வு இடம்பெற்றுள்ளது. 

மாணவர்கள் பரீட்சை எழுதிக் கொண்டிருக்கும்போது பரீட்சை நிலைய பொறுப்பதிகாரி கணிப்பான்களை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.. அதன் பின்னர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு மாணவர்களுக்கு மீண்டும் கணிப்பான்கள் வழங்கப்பட்டுள்ளன.

பரீட்சை மண்டபத்திற்குள் அங்கீகரிக்கப்படாத கணிப்பான் வகைகளை கொண்டு வந்ததாலேயே இவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

கணிப்பான்களை மீண்டும் வழங்கியதன் பின்னர் மாணவர்களுக்கு மேலதிக நேரம் வழங்கப்படவில்லை என மாணவர்களின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். 

எனவே இந்த நிகழ்வினால் தமது பிள்ளைகளுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக குறித்த பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
 
 
 
 
Previous:



உயர்தர கணக்கீடு பரீட்சையின் போது மாணவர்களுக்கு அநீதி: பெற்றோர் விசனம்! உயர்தர கணக்கீடு பரீட்சையின் போது மாணவர்களுக்கு அநீதி: பெற்றோர் விசனம்! Reviewed by Irumbu Thirai News on January 21, 2024 Rating: 5

No comments:

Powered by Blogger.