54 தேசிய பாடசாலைகளுக்கு அதிபர்களை நியமிப்பதில் சிக்கல் - கல்வி அமைச்சர்



அரச சேவைகள் ஆணைக்குழுவின் செயற்பாடு காரணமாக 54 தேசிய பாடசாலைகளுக்கு அதிபர்களை நியமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தெரிவித்துள்ளார். 

ஓய்வு பெற்ற நபர்களை சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு நியமிப்பதன் மூலம் அதன் பணி வினைத்திறனற்றதாக மாறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது, 

54 அதிபர் நியமனம் தொடர்பாக நாம் 06 மாதங்களாக முயற்சித்து வருகிறோம். ஆனால் பொதுச்சேவை ஆணைக்குழு அதற்கு இன்னமும் அங்கீகாரம் வழங்கவில்லை. இந்த சுயாதீன ஆணைக் குழுக்கள் உருவாக்கப்பட்டாலும் ஓய்வு பெற்றவர்களை அதற்கு நியமிப்பதன் மூலம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. இது தொடர்பாக விரைவில் பாராளுமன்றத்தில் விசேட உரை ஒன்றை ஆற்றவுள்ளேன். நாம் அனுமதி கேட்டு ஆறு மாதங்கள் ஆகிறது. ஒவ்வொரு வாரமும் அனுமதி தருகிறோம் என கூறுகின்றனர். ஆனால் அனுமதி தருவதில்லை. இப்படியான சுயாதீன ஆணை குழுக்கள் எவ்வளவு தோல்வியில் இருக்கின்றன என்பதை பாருங்கள் என்று தெரிவித்தார். 

இதே வேளை உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பிலும் கருத்துக்களை வெளியிட்டார். 

அதாவது, சாதாரண தர பரீட்சை ஆரம்பிப்பதற்கு முன்னர் உயர்தர பரீட்சை பெறுபேறுகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும். உயர்தர வினாத்தாள்கள் இன்னும் மதிப்பீடு செய்யப்படுகிறது. பெப்ரவரி இறுதிக்குள் அந்தப் பணிகள் நிறைவடையும். பிரயோக பரீட்சைகளும் இடம்பெற உள்ளன. இவை அனைத்தும் நிறைவடைந்ததன் பின்னர் உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் என அவர் தெரிவித்தார்.
 
 
 
Previous:


54 தேசிய பாடசாலைகளுக்கு அதிபர்களை நியமிப்பதில் சிக்கல் - கல்வி அமைச்சர் 54 தேசிய பாடசாலைகளுக்கு அதிபர்களை நியமிப்பதில் சிக்கல் - கல்வி அமைச்சர் Reviewed by Irumbu Thirai News on February 14, 2024 Rating: 5

No comments:

Powered by Blogger.