நாடளாவிய ரீதியில் உள்ள சுமார் 16 லட்சம் மாணவர்களுக்கு நாளை முதல் போஷக்கு உணவு வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தெரிவித்துள்ளார்.
தரம் 1 முதல் 5 வரையான மாணவர்களுக்கும் அதே போன்று 100க்கும் குறைவான மாணவர்களை கொண்ட பாடசாலையின் சகலருக்கும் இந்த உணவு வழங்கப்படும்.
இதற்காக 16.6 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஊட்டச்சத்து நிபுணர்களின் பரிந்துரைகளை கவனத்தில் கொண்டு இவ்வாறு காலை உணவு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் போஷாக்கு மற்றும் சுகாதாரம் என்பவற்றில் உணவு முறையை உயர்மட்டத்தில் பேணுவதற்கும் கல்வி அமைச்சானது அதிக கவனம் செலுத்தியுள்ளது. இந்த உணவு காலை 7:30 முதல் 8:30 வரை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Previous:
மாணவர்களுக்கு நாளை முதல் போஷாக்கு உணவு
Reviewed by Irumbu Thirai News
on
March 24, 2024
Rating:
No comments: