Presidential scholarship program awarded by the president's fund for the students of grade 1 to grade 11 with financial difficulties for educational purposes - 2024/2025
-------------------
கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பொருளாதார வசதியற்ற தரம் 1 முதல் தரம் 11 வரை கல்வி கற்கும் மாணவ மாணவிகளுக்காக ஜனாதிபதி நிதியம் மூலம் வழங்கப்படும் புலமைப் பரிசில் நிகழ்ச்சித் திட்டம் - 2024/2025
தகைமைகள்:
1) தரம் 01 தொடக்கம் தரம் 05 வரையுள்ள விருப்ப கல்வி அடைவு மட்டம் 50% அல்லது அதற்கு கூடிய மாணவன் / மாணவியாக இருத்தல்.
2) தரம் 06 தொடக்கம் தரம் 11 வரை கல்வி கற்கும் தரங்களிலுள்ள, 2023 ஆண்டு நடைபெற்ற இறுதி தவணை பரீட்சைக்கேற்ப வகுப்பில் 1 - 20 வரையான நிலைகளைப் பெற்ற மாணவன் / மாணவியாக இருத்தல்.
கவனிக்க: 2024 ஆம் ஆண்டு 1ஆம் தரத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள மாணவ / மாணவிகள் மற்றும் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 2023 க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவ / மாணவிகள் இங்கு விண்ணப்பிக்க முடியாது.
3) அரச பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவன் / மாணவியாக இருத்தல்.
4) விண்ணப்பதாரரின் குடும்ப மாதாந்த வருமானம் 100,000.00 ரூபாவிற்கு மேற்படாது இருத்தல்.
முக்கிய விடயங்கள்:
- மாணவ, மாணவியரின் குடும்பம் பற்றிய தகவல்கள், செயற்றிறன் அடைவு, இணைப்பாடவிதான செயல்பாடுகள், தலைமைத்துவம், அறநெறி பாடசாலை கல்வி போன்ற பல்வேறு விடயங்களுக்காக புள்ளிகள் வழங்கப்படும்.
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தனது பாடசாலை அதிபரிடம் மாத்திரம் சமர்ப்பித்தல் வேண்டும்.
--------------------------------
----------------------------------
Clicks the links below for....
Official Website Click here
Previous:
Grade: 1 - 11 Presidential Scholarship Programme - 2024/2025
Reviewed by Irumbu Thirai News
on
March 02, 2024
Rating:
No comments: