நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக உயர்தரப் பரீட்சை மேலும் 03 நாட்கள் பிற்போடப்படுவதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
அந்தவகையில் 2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 4ஆம் திகதி புதன்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் நிலவிய மோசமான வானிலை காரணமாக 27, 28 மற்றும் 29 ஆகிய நாட்களில் உயர்தரப் பரீட்சையை நடத்துவதில்லை என முன்னதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது.
சீரற்ற வானிலை தணிந்து வரும் போதிலும் பாதிக்கப்பட்ட மாணவர்களின் நலன் கருதி இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், “நவம்பர் 27 முதல் டிசம்பர் 3 வரை பரீட்சையை நடத்த மாட்டோம்.
எனவே 6 நாட்களுக்கு பரீட்சை இல்லை. பின்னர் மீண்டும் டிசம்பர் 4ஆம் திகதி புதன்கிழமை பரீட்சை நடைபெறும்.
அத்தோடு, டிசம்பர் 4-ம் திகதிக்கான பரீட்சையே அன்று இடம்பெறும்.
ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகள் மீண்டும் இடம்பெறும் திகதிகள் பின்வருமாறு
* நவம்பர் 27 நடைபெறவிருந்த பாடங்கள் - டிசம்பர் 21
* நவம்பர் 28 நடைபெறவிருந்த பாடங்கள் - டிசம்பர் 23
* நவம்பர் 29 நடைபெறவிருந்த பாடங்கள் - டிசம்பர் 27
* நவம்பர் 30 நடைபெறவிருந்த பாடங்கள் - டிசம்பர் 28
* டிசம்பர் 2 நடைபெறவிருந்த பாடங்கள் - டிசம்பர் 30
* டிசம்பர் 3 நடைபெறவிருந்த பாடங்கள் - டிசம்பர் 31
இதேவேளை, பொது அறிவுப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 7ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறும் எனவும், அன்றைய தினம் புதிய நேர அட்டவணை வேறு நிறத்தில் அச்சிடப்பட்டு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பரீட்சை ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.
பிற்போடப்பட்ட A/L பரீட்சைக்கான புதிய திகதிகள்
Reviewed by Irumbu Thirai News
on
November 28, 2024
Rating:
No comments: