பாடசாலை விடுமுறை தொடர்பில் புதிய அறிவிப்பு!

June 03, 2024


நிலவும் சீரற்ற வானிலை நிலைமைகளை கருத்தில் கொண்டு நாளைய தினம் செவ்வாய்க்கிழமையும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பான விபரங்கள் கல்வி அமைச்சினால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் சில அறிவிப்புகள் புதிதாக வெளியிடப்பட்டுள்ளன. 
 
அந்த வகையில் களனி மற்றும் கம்பஹா கல்வி வலயம் மற்றும் கடுவெல கோட்டக்கல்வி பிரதேசத்தில் உள்ள சகல பாடசாலைகளுக்கும் நாளைய தினம் (4) செவ்வாய்க்கிழமை விடுமுறை வழங்கப்படும் என மாகாண கல்வி பணிப்பாளரினால் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள சகல பாடசாலைகளுக்கும் நாளை(4) மற்றும் நாளை மறுதினம்(5) புதன்கிழமையும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
 
முன்னதாக கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிவித்தலில் பின்வரும் பிரதேச பாடசாலைகளுக்கு நாளைய தினம்(4) விடுமுறை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. 
 
1. இரத்தினபுரி மாவட்டத்தின் சகல பாடசாலைகளும் 
 
2. கேகாலை மாவட்டத்தின் சகல பாடசாலைகளும் 
 
3. காலி மாவட்டத்தின் சகல பாடசாலைகளும் 
 
4. மாத்தறை மாவட்டத்தின் சகல பாடசாலைகளும் 
 
5. களுத்துறை மாவட்டத்தின் சகல பாடசாலைகளும் 
 
6. கொழும்பு மாவட்ட ஹோமாகம வலயத்தில் உள்ள சகல பாடசாலைகளும் 
நாளைய தினம் விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
 
 
Previous:

 
 
பாடசாலை விடுமுறை தொடர்பில் புதிய அறிவிப்பு! பாடசாலை விடுமுறை தொடர்பில் புதிய அறிவிப்பு! Reviewed by Irumbu Thirai News on June 03, 2024 Rating: 5

University Admission Handbook - 2023 / 2024

June 03, 2024

 
University Grants Commission 
University Admission Handbook - Academic Year - 2023/2024 
 
No printed book. soft copy only. 
 
Price: Rs. 1000/- 
 
Payment method: Credit card 
 
Application period: 14/6/2024 - 05/07/2024 

Preference order changing period: 5/7/2024 - 19/7/2024 
 
Further details - contact 0112695301, 0112695302 
 
 
Click the link below for download the handbook:
 
 
 
Previous:

 

University Admission Handbook - 2023 / 2024 University Admission Handbook - 2023 / 2024 Reviewed by Irumbu Thirai News on June 03, 2024 Rating: 5

ஜுன் 4 செவ்வாய்க்கிழமை மூடப்படும் பாடசாலைகள்

June 03, 2024


தற்போது நிலவும் சீரற்ற காலநிலையை கருத்தில் கொண்டு பின்வரும் முறையில் அரச பாடசாலைகள் நாளை (4-6-2024) செவ்வாய்க்கிழமை மூடப்படும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது. 

இது தவிர்ந்த ஏனைய பாடசாலைகள் அனைத்தும் நாளை முதல் வழமை போன்று இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
 

நாளைய தினமும் மூடப்படும் பாடசாலைகள்: 
 
1. இரத்தினபுரி மாவட்டத்தின் சகல பாடசாலைகளும்
 
2. கேகாலை மாவட்டத்தின் சகல பாடசாலைகளும் 
 
3. காலி மாவட்டத்தின் சகல பாடசாலைகளும் 
 
4. மாத்தறை மாவட்டத்தின் சகல பாடசாலைகளும் 
 
5. களுத்துறை மாவட்டத்தின் சகல பாடசாலைகளும் 
 
6. கொழும்பு மாவட்ட ஹோமாகம வலயத்தில் உள்ள சகல பாடசாலைகளும் 

இது தவிர்ந்த ஏனைய அனைத்து பாடசாலைகளும் நாளை முதல் வழமை போல் நடைபெறும். 

குறித்த அறிவித்தலை கீழே காணலாம்.





Previous:
 

ஜுன் 4 செவ்வாய்க்கிழமை மூடப்படும் பாடசாலைகள் ஜுன் 4 செவ்வாய்க்கிழமை மூடப்படும் பாடசாலைகள் Reviewed by Irumbu Thirai News on June 03, 2024 Rating: 5

சகல பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை! தொடர்ந்தும் நடாத்துவது தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும்!

June 02, 2024

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சகல பாடசாலைகளுக்கும் நாளைய தினம் (3) விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 

மேலும் பாடசாலைகளை தொடர்ந்து நடத்துவது தொடர்பில் காலநிலையை கருத்தில் கொண்டு பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் இதுவரை 06 பேர் மரணித்துள்ளனர். 

அவிஸாவெல்ல, புவக்பிட்டிய, ஹெலிஸ்டன் தோட்ட பகுதியில் வெள்ளத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 03 பேரும் புவக்பிடிய ஹேவாஹின்ன பகுதியில் மண்சரிவில் சிக்கி 11 வயது சிறுமி ஒருவரும் மாத்தறை தெய்யந்தர பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து இருவரும் மொத்தமாக ஆறு பேர் மரணித்துள்ளனர். 

மேலும் இதுவரை 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி, களுத்துறை, கொழும்பு, காலி, நுவரெலியா, கேகாலை, காலி, மாத்தறை,  அம்பாந்தோட்டை குருநாகல் ஆகிய 10 மாவட்டங்களே அவையாகும்.

சகல பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை! தொடர்ந்தும் நடாத்துவது தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும்! சகல பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை! தொடர்ந்தும் நடாத்துவது தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும்! Reviewed by Irumbu Thirai News on June 02, 2024 Rating: 5
Powered by Blogger.