அமெரிக்காவின் புதிய வரிக் கொள்கை இலங்கைக்கு எவ்வாறு தாக்கம் செலுத்துகிறது என்பது தொடர்பாகவும் அது தொடர்பில் அமெரிக்க அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான பரிந்துரைகள் குறித்தும் ஆராய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட கட்சித் தலைவர்கள் கூட்டம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
சீனப் பொருட்களுக்கு அமெரிக்கா விதித்த மொத்த வரி விகிதம் 145% என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியன்மார் மக்களுக்கு நிவாரணமாக இலங்கை அரசாங்கம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவிக்கான காசோலையை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, இலங்கைக்கான மியன்மார் தூதுவர் மார்லர் தான் ஹடாயிக்கிடம்( (Marlar Than Htaik) இன்று (10) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து வழங்கினார்.
ஏப்ரல் 15, 16 மற்றும் 17 ஆகிய திகதிகளில் பொதுமக்களுக்கு கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கான மதியம் 12.00 மணி வரை மட்டுமே டோக்கன் வழங்கப்படும் எனவும் ஒருநாள் சேவைக்காக செயல்பட்டு வந்த 24 மணி நேர சேவை மேற்கூறிய நாட்களில் இயங்காது எனவும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உட்பட பொறுப்பானவர்களுக்கு எதிராக சர்வதேச ஆதரவைப் பெற்றேனும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை மீதான முதல் நாள் விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போது தெரிவித்துள்ளார்.
நடப்பு IPL தொடரில் இருந்து சென்னை அணியின் தலைவராக செயற்பட்ட ருத்ராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக விலகியுள்ளார். எனவே அவருக்கு பதிலாக மீண்டும் மகேந்திரசிங் தோனி தலைவராக நியமிக்கபட்டுள்ளதாக அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு வெலிகம பெலேன பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தேசபந்து தென்னகோனை பிணையில் விடுவிக்க மாத்தறை நீதிவான் நீதிமன்றம் இன்று (10) உத்தரவிட்டுள்ளது.
போக்குவரத்து விதிமீறல்களுக்காக பொலிஸாரினால் வழங்கப்படும் அபராதங்களை சாரதிகள் இணைவழி ஊடாக செலுத்தக்கூடிய வகையிலான ஒரு முன்னோடி திட்டத்தை அறிமுகப்படுத்த இலங்கை பொலிஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட GovPay செயலி மூலம் இந்தக் கொடுப்பனவுகளைச் செய்யலாம். இந்த திட்டம் குருநாகல் முதல் அனுராதபுரம் வரையிலான வீதியின் 11 இடங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
பாடசாலைகளுக்கான அதிபர்கள் நியமனத்தின் போது அனைத்துப் பாடசாலைகளுக்கும் ஒரே மாதிரியான கொள்கை மற்றும் வழிமுறை பின்பற்றப்படுவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
ஏப்ரல் 15 ஆம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவிப்பது குறித்து இன்னும் எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளவில்லை என பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.
பொலிஸ் துறைக்கு என தனியான சம்பளக் கட்டமைப்பை வகுப்பதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிப்பதற்காக வங்கி அட்டை மூலம் பணம் செலுத்த அனுமதிக்கும் முன்னோடி திட்டம் இந்த வாரம் தொடங்கப்படும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள் - 10/4/2025 வியாழக்கிழமை
Reviewed by Irumbu Thirai News
on
April 11, 2025
Rating:

No comments: