3/4/2025 - செய்திச் சுருக்கம்



இந்த வருடம் ஜனவரி முதல் மார்ச் வரையிலான 3 மாதங்களில் மாத்திரம் 565 விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் விளைவாக 592 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கொழும்பில் இன்று (3) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பிரதானி, பிரதிப் பொலிஸ்மா அதிபர் இந்திக ஹபுகொட தெரிவித்தார். 7 முதல் 8 பேர் வரை நாளாந்தம் போக்குவரத்து விபத்துகளில் சிக்கி உயிரிழப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 2024 டிசம்பர் மாதம் வரையான நிலவரப்படி, மோட்டார் வாகன ஆணையாளர் காரியாலயத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 84 இலட்சத்து 54,513 ஆகும். இதில் அதிக எண்ணிக்கையிலானவை மோட்டார் சைக்கிள்கள் ஆகும், இது சுமார் 49 இலட்சத்து 22,000 ஆகும். 2வது அதிகமாகப் பதிவுசெய்யப்பட்ட வாகனம் முச்சக்கர வண்டிகள். இது 11 இலட்சத்து 85,000 ஆகும். நாட்டில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாகனங்களில் 72% மானவை மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் என்றும், இதன் விளைவாக, இந்த வாகனங்களே அதிக விபத்துக்களை சந்தித்து வருவதாகவும் சுட்டிக்காட்டினார். 2023 ஆம் ஆண்டில் 2,231 அபாயகரமான வீதி விபத்துகள் நடந்துள்ளன, அவற்றில் 2,341 உயிரிழப்புகள் இடம்பெற்றிருந்தன. 2024 ஆம் ஆண்டில் நிகழ்ந்த 2,403 விபத்துகளில், 2,521 பேர் மரணித்துள்ளனர். 
Xxxxxxxxxxxxxxxxxxx


ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை (04) மாலை இலங்கைக்கு வர உள்ளார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான "நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு" (Friendship Of Centuries Commitment to Prosperous Future) என்ற எண்ணக்கருவை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில்,இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இந்த விஜயத்தில் இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் உள்ளிட்ட உயர்மட்ட இந்தியக் குழுவும் இணைய உள்ளது. இதன்போது எரிசக்தி, டிஜிட்டல் மயமாக்கல், பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் இந்தியாவுடனான கடன் மறுசீரமைப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் ஆகியவை பரிமாறிக்கொள்ளப்படும். இந்திய ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும் சம்பூர் சூரிய மின் உற்பத்தி நிலையத் திட்டம் ஆரம்பிப்பு, வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய 5,000 மெட்ரிக் தொன் தம்புள்ள களஞ்சிய வளாகத்தின் நிர்மானம் (குளிர்பதன திட்டம்), 5,000 மதத் தலங்களின் கூரைகளில் சூரிய மின்களங்களை நிறுவும் திட்டம் என்பன இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஒன்லைன் ஊடாக ஆரம்பித்து வைக்க உள்ளார். அதேபோல், இந்தியப் பிரதமர் அனுராதபுரம் ஸ்ரீ மகா போதிக்கு வழிபாடு மேற்கொள்ள இருப்பதுடன் இந்திய அரசாங்கத்தின் அன்பளிப்புடன் நிறுவப்பட்ட மஹவ-அனுராதபுரம் ரயில் சமிக்ஞை கட்டமைப்பு மற்றும் மறுசீரமைக்கப்பட்ட ரயில் பாதையை திறந்து வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 
Xxxxxxxxxxxxxxxxxxxxxc


அமெரிக்க அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள புதிய பரஸ்பர வரி விதிப்பு தொடர்பாக கலந்துரையாடல்களின் ஊடாக ஏப்ரல் 9ஆம் திகதிக்கு முன்னர் நிவாரணம் பெறுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார். இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44% வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முடிவு செய்ததை அடுத்து, கொழும்பு பங்குச் சந்தை விலைச் சுட்டெண்ணில் இன்று (03) குறிப்பிடத்தக்க சரிவு காணப்பட்டது. 
Xxxxxxxxxxxxxxxxx


தரம் 5 மாணவர்களுக்காக நடத்தப்படும் 2025 புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் 10 ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பரீட்சைக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் ஏப்ரல் 4ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி வரை இணையவழி ஊடாக சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 
Xxxxxxxxxxxxxxxx


எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக சுமார் 700,000 தபால் மூல வாக்கு விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 
3/4/2025 - செய்திச் சுருக்கம் 3/4/2025 - செய்திச் சுருக்கம் Reviewed by Irumbu Thirai News on April 04, 2025 Rating: 5

No comments:

Powered by Blogger.