2024 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் நாட்டின் மக்கள் தொகை 21,763,170 என தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 28.1% என்ற மிகப்பெரிய மக்கள் தொகை மேல் மாகாணத்தில் வசிக்கும் அதே நேரத்தில் மிகக் குறைந்த மக்கள் தொகையான 5.3% வடக்கு மாகாணத்தில் என்பதுடன் அதிக மக்கள் தொகை கம்பஹா மாவட்டத்தில் 2,433,685 பேரும் இரண்டாவது இடத்தில் உள்ள கொழும்பு மாவட்டத்தில் 2,374,461 பேர் வசிக்கின்றனர். ஆகக் குறைந்த மக்கள் தொகை முல்லைத்தீவில் 122,542 பேராகும். அதிகபட்ச சராசரி வளர்ச்சி விகிதம் முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளது, இது 2.23 ஆகவும் மிகக் குறைந்த சராசரி ஆண்டு வளர்ச்சி விகிதம் வவுனியா மாவட்டத்தில் 0.001 ஆக பதிவாகியுள்ளது. ஒரு சதுர கிலோமீட்டருக்கு 3,549 பேர் என்ற அதிகபட்ச மக்கள் தொகை அடர்த்தி கொழும்பு மாவட்டத்திலும் மிகக் குறைந்த மக்கள் தொகை அடர்த்தி முல்லைத்தீவு மாவட்டத்தில் 50 பேராகும். குடிசன தொகைமதிப்பு வரலாற்றில் முதல் முறையாக, டெப்லெட் கணினிகள் மற்றும் கைபேசிகளைப் பயன்படுத்தி தரவு சேகரிப்பு மேற்கொள்ளப்பட்டது விசேட அம்சமாகும்.
-------------------
இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 2025 மார்ச் மாதத்தில் 7.1% உயர்ந்து 6.51 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது.
-------------------
இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிகர் ஒட்டியமைக்காக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த முஹம்மத் ருஷ்டி என்பவர் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டார். குறித்த கைதுக்கு எதிராக பரவலாக எதிர்ப்புகள் அதிகரித்தமை குறிப்பிடத்தக்கது.
-------------------
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் நிறைவடைந்து, தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சக பணிப்பாளர் பிரதீப் புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
-------------------
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ஜனாதிபதி நிதியத்தின் நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய அரசியல்வாதிகள் மற்றும் தனிநபர்கள் குறித்து நடத்தப்படும் விசாரணைகள் தொடர்பாக அவர் இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கினார்.
-------------------
நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் குறித்த வேட்புமனுக்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என்று கூறி, வேட்புமனுக்களை நிராகரிக்க தேர்தல் அதிகாரிகள் எடுத்த முடிவை சட்டவிரோதமானது என்று அறிவிக்கக் கோரி, அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களால் தாக்கல் செய்த ரிட் மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம் கொழும்பு மாநகர சபை உட்பட பல உள்ளூராட்சி நிறுவனங்களில் உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்துவது தொடர்பாக அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுப்பதைத் தடுக்கும் வகையில் இன்று (07) இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
-------------------
இலங்கை சென்ற பிரதமர் மீனவர் பிரச்சனை தொடர்பாக எந்த முன்னெடுப்பும் எடுத்ததாக தெரியவில்லை தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-------------------
பொதுமக்கள் பாதுகாப்பு குழுவை செயல்படுத்துவதற்கான சுற்றறிக்கையை விரைவில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார். "Clean Sri Lanka" திட்டத்திற்கு இணங்க, அனைத்து கிராம சேவையாளர் பிரிவுகளையும் அடிப்படையாகக் கொண்டு மேற்படி பொதுமக்கள் பாதுகாப்பு குழுக்கள் செயல்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
-------------------
உலக சுகாதார தினம் இன்று (07) அனுஷ்டிக்கப்படுகிறது. 'ஆரோக்கியமான தொடக்கம், நம்பிக்கையான எதிர்காலம்' எனும் தொனிப்பொருளில் இம்முறை உலக சுகாதார தினம் நினைவுகூறப்படுகிறது.
-------------------
இந்தியாவில் எதிர்க்கட்சிகள் மற்றும் பல இஸ்லாமிய அமைப்புகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வக்ஃப் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் சட்டமாக அமலுக்கு வந்துள்ளது.
செய்திச் சுருக்கம் - 7/4/2025 திங்கட்கிழமை
Reviewed by Irumbu Thirai News
on
April 07, 2025
Rating:

No comments: