குருநாகலை, வெஹர பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் நேற்று (07) இரவு ஏற்பட்ட வெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நான்கு பேர் உயியிரிழந்ததுடன் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
------------------
நேற்று(7) பாடசாலை நிறைவடைந்த பின்னர், ஹட்டனில் இருந்து டிக்கோயா போடைஸ் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த தனியார் பேருந்தில் பயணித்த மாணவி ஒருவரின் கால் அதே பஸ்ஸில் பயணித்த ஆசிரியை ஒருவரின் சேலையில் மிதிபட்டதால் அந்த ஆசிரியை மாணவிக்கு அறைந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது போலீஸ் விசாரணைகள் இடம்பெறுகின்றன.
------------------
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைவாக மட்டக்களப்பில் வைத்து தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான பிள்ளையான என அழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
------------------
பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவதற்கான விசாரணைக் குழுவை நியமிக்கும் பிரேரணை இன்று (08) பாராளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தவறான நடத்தை மற்றும் கடுமையான பதவி துஷ்பிரயோகம் காரணமாக இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
------------------
வைத்தியரின் பரிந்துரையின்றி, அவிசாவளை பகுதியில் உள்ள தனியார் மருந்தகம் ஒன்றிலிருந்து பெறப்பட்ட மருந்தை உட்கொண்டதால், 3 மாத கர்ப்பிணியான பெண் ஹோமாகம அரசு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
------------------
நேற்றைய தின சரிவில் இருந்து கொழும்பு பங்குச்சந்தை சற்று மீண்டு வருவதாக இன்றைய புள்ளி விவரங்கள் பதிவாகியுள்ளன.
------------------
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 109 டிப்போக்களில் 55 டிப்போக்கள் நட்டத்தில் இயங்குவதாகவும், 54 டிப்போக்கள் இலாபம் ஈட்டுவதாகவும் போக்குவரத்து, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
------------------
அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட சம்பளமானது ஏப்ரல் 10 ஆம் தேதி வழங்கப்பட வேண்டும் எனவும் அவ்வாறு முடியாத பட்சத்தில் நிலுவைத் தொகையானது இம்மாதம் 25 ஆம் தேதி வழங்க வேண்டும் என பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு சுற்றறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.
------------------
நானுஓயா முதல் பதுளை வரை சேவையில் ஈடுபடும் கலிப்சோ தொடரூந்து சேவை இன்று ஆரம்பமானது. சுற்றுலா துறையை மேம்படுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட இச்சேவையானது ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையிலும் இடம்பெறும்.
------------------
அரச சேவைக்கு 30,000 பேரை சேர்த்துக் கொள்ளும் திட்டத்தின் ஒரு கட்டமாக 18,853 பேரை இணைத்துக் கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கி உள்ளது.
------------------
அமெரிக்காவின் புதிய வரிக் கொள்கையினால் ஏற்படும் தாக்கம் மற்றும் ஏனைய விளக்கங்களை உள்ளடக்கி கடிதம் ஒன்றை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அணில் ஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
------------------
13,000 ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்த ஒருவகையான ஓநாய் இனத்தின் மூன்று குட்டிகளை மரபணு முறையில் விஞ்ஞானிகள் உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.
------------------
இஸ்ரேலுக்கு AI தொழில்நுட்ப ஆயுதங்களை வழங்கி பல்லாயிரக்கணக்கான மக்களின் அழிவுக்கு உடந்தையாக இருந்ததாக மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு எதிராக குரல் எழுப்பிய அதில் பணிபுரிந்த மென்பொருள் பொறியியலாளரான மொரோக்க நாட்டு பெண்ணுக்கு குவைத் நாட்டு கோடீஸ்வரர் ஒருவர் உயர் சம்பளத்துடன் தொழில் வழங்க முன்வந்துள்ளார்.
Previous:
செய்திச் சுருக்கம் - 8/4/2025 செவ்வாய்க்கிழமை
Reviewed by Irumbu Thirai News
on
April 08, 2025
Rating:

No comments: