நாட்டின் அரச நிறுவன கட்டமைப்பின் கௌரவம் மற்றும் பெறுமதிகளை அழித்து, இலஞ்சம் மற்றும் ஊழல் ஆட்சி செய்வதாகவும் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த 6 மாதங்களில் அரச சேவையில் எந்தவொரு பகுதியும் சரிவதற்கு இடமளிக்கவில்லை என்றும் அதிகாரிகள் பொறிமுறை இனியும் மாறத் தயாராக இல்லையெனில், மே மாதத்திற்குப் பிறகு அதிகாரிகள் மாற்றப்படுவார்கள் என்றும் ஜனாதிபதி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (09) நடைபெற்ற “தேசிய ஊழல் எதிர்ப்பு செயல் திட்டம் 2025-2029” வெளியீட்டு நிகழ்வில் தெரிவித்தார்.
-----------------
உலகம் முழுவதும் சுமார் 115 நாடுகளுக்கு பரவியுள்ள "சிக்குன்குனியா" நோய் தற்போது இலங்கையிலும் பரவி வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். நாட்டில் 190 சிக்குன்குனியா நோயாளர்கள் பதிவாகியுள்ளனர், அவற்றில் 65 பேர் மருத்துவ ரீதியாக சிக்குன்குனியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
-----------------
கால்நடை வளர்ப்பில் ஈடுபடுவதற்காக விவசாயிகளை அதிகளவில் ஊக்குவிக்கும் நோக்கில், பசுக்கள் மற்றும் ஆடுகளுக்கான காப்பீட்டு செயல்முறையை தொடர்ந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபையின் தலைவர் பேமசிறி ஜாசிங்ஆராச்சி தெரிவித்துள்ளார். மேற்படி, விலங்குகள் இறந்தாலோ அல்லது முழுமையாக ஊனமுற்றாலோ காப்பீட்டுத் தொகை வழங்கப்படும். இது தொடர்பான கூடுதல் தகவல்களை நாடு முழுவதும் அமைந்துள்ள மாவட்ட அலுவலகங்களைத் தொடர்பு கொள்வதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
-----------------
அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது சீனா 84% வரி விதித்துள்ளது. 34% வீதமாக இருந்த வரியையே சீனா இவ்வாறு 84% ஆக அதிகரித்துள்ளது. சீனப் பொருட்கள் மீது அமெரிக்க ஜனாதிபதி, 104% வரிகளை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-----------------
கிரிபத்கொடை பகுதியில் அரசாங்கத்திற்குச் சொந்தமான காணியை போலி ஆவணங்களைத் தயாரித்து விற்பனை செய்த சம்பவம் தொடர்பாக, அண்மையில் கைது செய்யப்பட்ட மேர்வின் சில்வா மீண்டும் இம்மாதம் 21 ஆம் தேதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
-----------------
கோசல நுவன் ஜயவீர காலமானதால் வெற்றிடமான தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சமந்த ரணசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
-----------------
2024 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் தரம் ஆறுக்கான விண்ணப்பங்களை இணையவழியாக மேற்கொள்ள முடியும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. விண்ணப்பங்களை இன்று (09) முதல் ஏப்ரல் 30 திகதி வரை http://g6application.moe.gov.lk என்ற இணையத்தளம் மூலம் சமர்ப்பிக்கலாம். அதிகபட்சமாக 3 பாடசாலைகளுக்கு மேன்முறையீடுகளை சமர்ப்பிக்க முடியும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
-----------------
பராட்டே சட்டம் தொடர்பில் வழங்கப்பட்ட சலுகை காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 25 மில்லியன் ரூபாவிற்கும் குறைவான கடனுக்கு 2025-12-31 வரையும் 25- 50 மில்லியனுக்கு 2025-09-30 ம் 50 மில்லியனுக்கும் அதிகளவான கடனை பெற்றுவர்களுக்கு 2025 ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
செய்திச் சுருக்கம் - 9/4/2025 புதன்கிழமை
Reviewed by Irumbu Thirai News
on
April 09, 2025
Rating:

No comments: