Results for Common News And Cinema

Vacancies (University of Jaffna)

April 05, 2024

 
Applications are invited by University of Jaffna. 
 
Posts: 
Senior lecturer Grade 1 
 
Senior lecturer Grade 11 
 
Lecturer (Unconfirmed) 
 
Lecturer (Probationary) 
 
 
Closing date: 2024-05-02. 
 
 
Click the links below for... 
 
 
 
 
 
 
 
 
Previous:
 
 
Vacancies (University of Jaffna) Vacancies (University of Jaffna) Reviewed by Irumbu Thirai News on April 05, 2024 Rating: 5

என்னை இனிமேல் "தல" என்று அழைக்க வேண்டாம்: - நடிகர் அஜித்குமார்

December 01, 2021
 

தன்னை இனிமேல் யாரும் தல என்று அழைக்க வேண்டாம் என தென்னிந்திய நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார். 
 
இன்றைய தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டே அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். 
 
என்னை அஜித் என்றோ அஜித்குமார் என்றோ அல்லது AK என்றோ அழைப்பதையே நான் விரும்புகிறேன். மாறாக தல என்றோ அல்லது வேறு அடைமொழிகளை கொண்டோ அழைப்பதை விரும்பவில்லை. உங்கள் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி, வெற்றி, மன அமைதி மற்றும் மனநிறைவு நிறைந்த ஒரு அழகான வாழ்க்கையை நான் மனதார வாழ்த்துகிறேன். 
 
என்று அவர் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

2001 இல் 'தீனா (Dheena)' என்ற திரைப்படம் வெளியானதிலிருந்து அஜித் குமாருக்கு 

தல என்ற அடைமொழி மிகப் பிரபலமடைந்தது. அன்றிலிருந்து இன்றுவரை அஜித்குமாருக்கு இந்த அடைமொழி பயன்படுத்தப்பட்டு வருகிறது. 
 
நடிகர் விஜய்யை தளபதி என்றும் அஜீத் குமாரை தல என்றும் அவரவர் ரசிகர்கள் கொண்டாடி வருவது வழமை. அடிக்கடி இந்த இரு தரப்பினரும் சமூக வலைதளங்களில் கருத்து மோதலில் ஈடுபடுவதும் வழமை. 
 
வலிமை என்ற படத்தில் தற்போது நடித்து வரும் நிலையிலேயே அஜித்குமாரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

என்னை இனிமேல் "தல" என்று அழைக்க வேண்டாம்: - நடிகர் அஜித்குமார் என்னை இனிமேல் "தல" என்று அழைக்க வேண்டாம்: - நடிகர் அஜித்குமார் Reviewed by Irumbu Thirai News on December 01, 2021 Rating: 5

சிவாஜிக்கு Google வழங்கிய கௌரவம்!

October 01, 2021
 

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93வது பிறந்த தினம் இன்றாகும். அவர் மறைந்தாலும் இந்திய சினிமா வரலாற்றில் அவர் தவிர்க்க முடியாத ஒரு ஆளுமை ஆகும். 
 
அவர் தொடர்பான சில முக்கிய குறிப்புகளை கீழே தருகிறோம். 
 
அவர் முதன் முதலில் நடித்த மேடை நாடகம் ராமாயணம். அதில் சீதையாக நடித்தார். 
 
அவரது முதல் திரைப்படம் பராசக்தி. 1952இல் வெளிவந்தது. 
 
சிவாஜி மற்றும் எம்ஜிஆர் இணைந்து நடித்த ஒரே திரைப்படம் கூண்டுக்கிளி. 
 
1962 இல் அமெரிக்காவுக்கு சிறப்பு விருந்தினராக சென்ற போது நயாகரா மாநகரத்தின் ஒரு நாள் மேயராக அறிவிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார். 
 
எகிப்து ஜனாதிபதி கமால் அப்துல் நாசர் இந்தியாவிற்கு வருகை தந்தபோது அவரை வரவேற்று உபசரிக்க இந்திய அரசால் அனுமதிக்கப்பட்ட ஒரே நபர் சிவாஜி. 
 
தமிழக முன்னேற்ற முன்னணி' என்ற கட்சியை சிவாஜி ஆரம்பித்தார். ஆனால் சினிமாவில் வெற்றி கண்ட இவருக்கு அரசியலில் வெற்றி காண முடியவில்லை. 
 
கலைமாமணி விருது, பத்ம பூஷன், பத்ம விபூஷன், செவாலியே விருது, தாதா சாஹிப் பால்கே விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார் சிவாஜி கணேசன். 
 
சிவாஜி நடிக்க விரும்பிய கதாப்பாத்திரம் எது தெரியுமா? இவருக்கு 'சிவாஜி' என்ற பெயர் கொடுத்த தந்தை பெரியாருடைய வேடம்தான் அது. ஆனால், இறுதிவரை அது நடக்கவில்லை. 
 
சென்னையில் இவரது பெயரில் சாலை, அவருக்கு மணிமண்டபம், சிலை ஆகியவை உண்டு. 
 
இந்த நிலையில் இவரது 93வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரை கௌரவிக்கும் முகமாக Google நிறுவனம் டூடுல் (Doodle) வெளியிட்டுள்ளது. இதனை வரைந்தவர் நூபூர் ராஜேஷ் சோக்ஸி என்பவர்.
சிவாஜிக்கு Google வழங்கிய கௌரவம்! சிவாஜிக்கு Google வழங்கிய கௌரவம்! Reviewed by Irumbu Thirai News on October 01, 2021 Rating: 5

"மெனிக்கே மகே ஹிதே" யொஹானிக்கு கிடைத்த பதவி

September 21, 2021
 

மெனிக்கே மகே ஹிதே.. என்ற பாடல் மூலம் குறுகிய காலத்திற்குள் உலகம் பூராவும் புகழ்பெற்றவர் இலங்கையைச் சேர்ந்த யொஹானி சில்வா (Yohani Silva). 
 
குறித்த பாடலை கடந்த மே மாதம் தனது யூடியூப் தளத்தில் பதிவிட்டார். இதுவரை அந்தப் பாடல் 118 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை (views) பெற்றுள்ளதோடு 
 
அவரது யூடியுப் தளம் 2.39 மில்லியன் Subscribers ஐயும் பெற்றுள்ளது விஷேட அம்சமாகும். 
 
இவரின் இந்த பாடல் இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் தற்பொழுது பலராலும் பாடப்பட்டு வருகிறது. 
 
விசேடமாக திரை நட்சத்திரங்கள் பலரும் தமது சமூக வலைத்தளத்தில் இந்த பாடலை பகிர்ந்துள்ளனர். 
 
இந்நிலையில் இந்த யோஹானியை கௌரவிக்கும் முகமாக அவருக்கு புதிய பதவி ஒன்று கிடைத்துள்ளது. அதாவது இந்தியா மற்றும் 
 
இலங்கைக்கு இடையிலான கலாசாரா தூதுவராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். 
 
இதற்காக இலங்கை அரசு, இந்திய தூதரகம் உட்பட பல தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். 
 
இந்நிலையில் இந்தியா செல்லவிருக்கும் யோஹானி ஹைதராபாத் மற்றும் குருகிராம் ஆகிய இடங்களில் நடைபெறவிருக்கும் 
 
நிகழ்ச்சிகளில் பாட இருக்கிறார். மேலும் இந்திய தேசிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள இருக்கிறார்.
 
மேலும் அவரது இந்திய விஜயத்திற்கு  இந்திய ரசிகர்களிடையே எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
"மெனிக்கே மகே ஹிதே" யொஹானிக்கு கிடைத்த பதவி "மெனிக்கே மகே ஹிதே" யொஹானிக்கு கிடைத்த பதவி Reviewed by Irumbu Thirai News on September 21, 2021 Rating: 5

உங்கள் தனிப்பட்ட தரவுகள் இணையத்தில் திருடப்படாமலிருக்க என்ன செய்ய வேண்டும்?

September 20, 2021
 

தற்போதைய டிஜிட்டல் பொருளாதார உலகில் தரவுகள் என்பது முக்கியமான ஒரு விடயமாக காணப்படுகிறது. ஒவ்வொருவரினதும் இப்படிப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டு ஒரு பெரிய சந்தையே இயங்கிக்கொண்டிருக்கிறது. 
 
எனவே பொருளாதார கருமங்களுக்கு இப்படிப்பட்ட சகல தரவுகள், தகவல்கள் முக்கியமாக தேவைப்படுவதால் தற்போது இது தகவல் பொருளாதாரம் என்ற அடிப்படையில் செயல்படுகிறது. 
 
 
எது தனிப்பட்ட தரவுகள்? 

நாம் எந்த இணையத்தளத்திற்கு சென்றாலும் எம்மைப் பற்றி ஏதோ ஒரு சில தரவுகளை அவை பெற்றுக் கொள்கின்றன. சில தளங்கள் நாம் எவ்வளவு நேரம் இணையத்தில் செலவழிக்கிறோம்? எந்த நேரத்தில் இணையத்தை பயன்படுத்துகிறோம்? எப்படிப்பட்ட தகவல்களைத் தேடுகிறோம்? என்ற பொதுவான விடயங்களை பெற்றுக் கொள்கின்றன. 
 
இன்னும் சில இணையதளங்கள் இதற்கு மேலதிகமாக எமது பெயர், முகவரி, வயது, இமெயில், தொலைபேசி இலக்கம் போன்ற விடயங்களையும் பெற்றுக் கொள்கின்றன. 
 
பொதுவான தரவுகளை பெற்றுக்கொள்வது பிரச்சினை அல்ல. ஆனால் குறித்த தரவுகளை வைத்து நபர் யார் என்பதை அடையாளம் காண முடியும் என்றால் அவை தனிப்பட்ட தரவுகளாக கருதப்படும். இவ்வாறான தகவல்களை பெறுவது தனிநபர் உரிமை மீறலாகும். 
 
 
கவனமாக இருப்பது எப்படி? 
மிக முக்கியமான விடயம் என்னவென்றால் தேவைக்கு அதிகமான தகவல்களை வழங்க கூடாது. இதனால் இரு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஒன்று, எம்மைப் பற்றிய அதிக தகவல்கள் மூன்றாம் நபருக்கு செல்கின்றன. மற்றையது, எம்மை அவர்களது தளத்தில் அதிக நேரம் செலவழிக்க வைப்பதற்கான வாய்ப்பை நாமே அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கிறோம். உதாரணமாக, குறித்த தளம் ஒன்றில் மின்னஞ்சல் முகவரி கேட்கப்படாவிட்டால் நாம் அதை வழங்கக்கூடாது. ஆனால் கட்டாயம் மின்னஞ்சல் வழங்க வேண்டுமென்றால் 

இப்படிப்பட்ட பொதுவான விடயங்களுக்காக வேறு ஒரு மின்னஞ்சல் முகவரியை நாம் வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு தனிப்பட்ட எமது மின்னஞ்சல் முகவரியை வழங்கக்கூடாது. எனவே பொதுவான விடையங்களுக்கு ஒன்றும் தனிப்பட்ட விடயங்களுக்கு ஒன்றும் என குறைந்தது இரு மின்னஞ்சல் முகவரிகளை பேணுவது சிறந்தது. 
 
 
VPN பாவிப்பவர்கள் நினைப்பதுண்டு எம்மைப் பற்றிய தரவுகளை வலைத்தளங்களுக்கு பெறமுடியாது என்று. ஆனால் உண்மை அதுவல்ல. நாம் விபிஎன் பாவிக்கும் போது எமக்கு இணைய சேவை வசதி வழங்கும் நிறுவனங்களுக்குதான் அது தெரியாமல் போகும். ஆனால் நாம் செல்லும் வலைத்தளங்கள் எமது தரவுகளை பெற்றுக் கொள்கின்றன. எனவே விபிஎன் பயன்படுத்தும் போதும் கவனமாக செயல்பட வேண்டும். 
 
 
சில மென்பொருள்கள் அல்லது செயலிகளை நாம் குறிப்பிட்ட காலம் வரை தான் பயன்படுத்துகிறோம் என்றால் அதற்கென தற்காலிகமான தரவுகளை மட்டும் நாம் வழங்குவது போதுமாகும். 
 
சமூக ஊடக மென்பொருள் அல்லது செயலிகளை பதிவிறக்கம்(Download) செய்யும் போது நம்பகமான தளத்திலிருந்து மட்டுமே அதை பதிவிறக்கம் செய்ய வேண்டும். 
 
 
சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும்போது மிகக்கவனமாக இருக்கவேண்டும். தேவையில்லாமல் புகைப்படங்கள் மற்றும் எமது தனிப்பட்ட தரவுகளை அதில் பகிர்வதை தவிர்க்க வேண்டும். 
 
 
ஒரு மென்பொருள் அல்லது செயலியை நாம் பயன்படுத்த விரும்பினால் அது தொடர்பான தனிநபர் கொள்கை (Privacy Policy) விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் (Terms and Conditions) மூன்றாம் தரப்பு மதிப்பாய்வு (Review) போன்றவற்றை அவசியம் பரிசோதித்தே முடிவெடுக்க வேண்டும். 
 
 
எமது தரவுகளை வழங்குவதால் என்ன நேர்ந்து விடப்போகிறது என்ற அலட்சியத்தை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அது வணிகர்களால் தகவலாகவும் பயன்படுத்தப்படலாம். தவறாகவும் பயன்படுத்தப்படலாம். எமது தனிநபர் உரிமை குறித்து முதலில் நாமே கவனம் செலுத்த வேண்டும்.
உங்கள் தனிப்பட்ட தரவுகள் இணையத்தில் திருடப்படாமலிருக்க என்ன செய்ய வேண்டும்? உங்கள் தனிப்பட்ட தரவுகள் இணையத்தில் திருடப்படாமலிருக்க என்ன செய்ய வேண்டும்? Reviewed by Irumbu Thirai News on September 20, 2021 Rating: 5

தனது பெற்றோருக்கு எதிராக வழக்கு தொடர்ந்த நடிகர் விஜய்! பின்னணி என்ன?

September 19, 2021
 

தென்னிந்திய நடிகர் விஜய் தனது தாய் தந்தை உட்பட 11 பேருக்கு எதிராக சென்னை சிவில் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. 
 
தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 09 மாவட்டங்களுக்கான உள்ளூராட்சி தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 6ஆம் 9ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. 
 
இதில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்களும் 
 
போட்டியிடவுள்ளனர். நீண்ட ஆலோசனைகளுக்கு பின் அதற்கான அனுமதியை விஜய் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
 
அதாவது இந்த தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடவும் தனது பெயரையும் விஜய் மக்கள் மன்ற இயக்கத்தின் கொடியையும் பயன்படுத்தி அரசியலில் ஈடுபட விஜய் அனுமதி அளித்துள்ளார். 
 
விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்பதே எங்கள் ஆசை. ஆனால் அவர் இதுவரை வரவில்லை. எவ்வாறாயினும் அவரது பெயரைச் சொல்லி அரசியலில் ஈடுபட அனுமதி கேட்டோம். அதற்கு அனுமதி தந்தார் என்று விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளில் ஒருவரான விஜய் அன்பன் தெரிவித்துள்ளார். 
 
இதேவேளை நடிகர் விஜய் தனது தாய் மற்றும் தந்தை உட்பட 11 பேருக்கு எதிராக தொடர்ந்த வழக்கு இம்மாதம் 27ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
 
 
ஏன் வழக்கு தொடர்ந்தார்? 
 
இயக்குநரும் நடிகர் விஜயின் தந்தையுமான எஸ். ஏ. சந்திரசேகர் விஜய் ரசிகர்களை இணைத்து "அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்" என்ற கட்சி தொடங்கப்பட உள்ளதாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிவித்தார். மேலும் இந்த கட்சியை முறைப்படி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய இருப்பதாகவும் அறிவித்தார். 
 
இதற்கு கடுமையான ஆட்சேபணை தெரிவித்த நடிகர் விஜய். தனது பெயரில் கட்சி தொடங்கப்படுவதில் தனக்கு விருப்பமில்லை எனக்கூறி தனது பெற்றோர் உட்பட 11 பேருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கின் விசாரணையே இம்மாதம் 27 ஆம் தேதி வருகிறது.
தனது பெற்றோருக்கு எதிராக வழக்கு தொடர்ந்த நடிகர் விஜய்! பின்னணி என்ன? தனது பெற்றோருக்கு எதிராக வழக்கு தொடர்ந்த நடிகர் விஜய்! பின்னணி என்ன? Reviewed by Irumbu Thirai News on September 19, 2021 Rating: 5

விஜய்க்கு அபராதம் விதித்த நீதிமன்றம்: உண்மையான கதாநாயகர்களாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தல்:

July 14, 2021

புகழ்பெற்ற தென்னிந்திய நடிகர் விஜய்க்கு 1 இலட்சம் ரூபா அபராதத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு 2 வாரங்களில் செலுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce) காருக்கு 
நுழைவு வரி விதிக்க தடை கோரி நடிகர் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நேற்று(13) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிமன்றம், நடிகர் விஜய்க்கு ரூபா: 1 இலட்சம் அபராதமும் விதித்தது. 
சமூக நீதிக்கு பாடுபடுவதாக பிரதிபலிக்கும் நடிகர்கள் இவ்வாறு வரி ஏய்ப்பு செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ள நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், நடிகர்கள் உண்மையான கதாநாயகர்களாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். 
இதேவேளை குறித்த Rolls Royce காரின் வகைககள் இந்திய மதிப்பில் 7 கோடி ரூபா முதல் 11 கோடி ரூபா வரை விற்பனையாகின்றமை குறிப்பிடத்தக்கது.
விஜய்க்கு அபராதம் விதித்த நீதிமன்றம்: உண்மையான கதாநாயகர்களாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தல்: விஜய்க்கு அபராதம் விதித்த நீதிமன்றம்: உண்மையான கதாநாயகர்களாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தல்: Reviewed by irumbuthirai on July 14, 2021 Rating: 5
Powered by Blogger.