Results for Corona Virus

இங்கிலாந்தில் பரவும் புதிய வகை கொரோனா! 7 பேரில் ஒருவருக்கு பாதிப்பு!

August 06, 2023


இங்கிலாந்து முழுவதும் வேகமாக பரவி வருகின்ற Eris என்ற குறியீட்டுப் பெயருடன் EG.5.1 என அழைக்கப்படும் புதியவகை கொரோனா மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

தற்போது இங்கிலாந்தில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக அங்கு அதிகமானோர்க்கு தலைவலி, காய்ச்சல், மூக்கில் நீர்வடிதல் போன்ற அறிகுறிகள் காணப்படுகின்றன. இந்நிலைமை பெருமளவான மக்களிடம் வேகமாக பரவி வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 

 இது தொடர்பாக இங்கிலாந்தின் சுகாதார பாதுகாப்பு முகவரகம் ஆராய்ந்த போது இது ஒமிக்ரோனின் மாறுபாடு அடைந்த வைரஸ் கிருமி என கண்டறியப்பட்டுள்ளது. 

 இந்த வைரஸானது இங்கிலாந்தில் 07 பேரில் ஒருவருக்குப் பரவியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. Eris என்பது கிரேக்க தெய்வத்தின் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது.



Previous:


இங்கிலாந்தில் பரவும் புதிய வகை கொரோனா! 7 பேரில் ஒருவருக்கு பாதிப்பு! இங்கிலாந்தில் பரவும் புதிய வகை  கொரோனா! 7 பேரில் ஒருவருக்கு பாதிப்பு! Reviewed by Irumbu Thirai News on August 06, 2023 Rating: 5

புதிய வகையான முகக் கவசம் கண்டுபிடிப்பு!

July 07, 2022


புதிய வகையான N95 முகக் கவசத்தை அமெரிக்காவின் ரென்சீலர் பொலிடெக்னிக் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 

இந்த முக கவசமானது கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி அதை அழிக்கவும் செய்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதற்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட முகக் கவசத்தால் வைரஸ் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் அது அழிக்கப்படவில்லை. 


இந்த புதிய முக கவசத்தை நீண்ட காலம் பாவிக்கலாம். மேலும் காற்றின் மூலம் பொதுவாக பரவக்கூடிய கிருமிகளில் இருந்தும் பாதுகாப்பு வழங்குகிறது. 


ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள N95 முகக் கவசத்தில் காணப்படும் வடிகட்டுவதற்காக உள்ள அடுக்குகள் இரசாயண செயற்பாடுகளால் பாதிப்படைய கூடியவை. ஆனால் இந்த முக கவசத்தின் அடுக்குகள் பாலிபுரப்பலின் நார்கள் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதால் அவை வைரஸ் மற்றும் பாக்டீரியாவின் செல் சுவரை பாதிப்படையச் செய்து அவற்றை அழிக்கவும் செய்கின்றது.


புதிய வகையான முகக் கவசம் கண்டுபிடிப்பு! புதிய வகையான முகக் கவசம் கண்டுபிடிப்பு! Reviewed by Irumbu Thirai News on July 07, 2022 Rating: 5

பாடசாலைகளில் சிற்றுண்டிச்சாலைகளைத் திறக்க அனுமதி: ஒருவரே எல்லோருக்கும் வாங்க வேண்டும்!

March 06, 2022

பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளை மீண்டும் திறக்க சுகாதார அமைச்சால் கல்வியமைச்சுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
 
இது தொடர்பில் பின்பற்றப்பட வேண்டிய சுகாதார வழிமுறைகள் தொடர்பாக, சுகாதார அமைச்சினால் கல்வி அமைச்சின் செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பப்பட்டுள்ளது. 
 
இதற்கமைய சிற்றுண்டிச்சாலையை பயன்படுத்துவதற்கு ஒவ்வொரு வகுப்புக்கும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்படுவதுடன், வகுப்பில் ஒரு மாணவரே ஏனைய சகல மாணவர்களுக்கும் தேவையான உணவுப் பொருட்களை சுகாதார பாதுகாப்புடன் கொண்டுவந்து கொடுக்க  வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
பாடசாலைகளில் சிற்றுண்டிச்சாலைகளைத் திறக்க அனுமதி: ஒருவரே எல்லோருக்கும் வாங்க வேண்டும்! பாடசாலைகளில் சிற்றுண்டிச்சாலைகளைத் திறக்க அனுமதி: ஒருவரே எல்லோருக்கும் வாங்க வேண்டும்! Reviewed by Irumbu Thirai News on March 06, 2022 Rating: 5

A/L பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்!

February 23, 2022

இம்முறை உயர்தர பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 
 
அதாவது தமது துறைக்குரிய அனைத்து பாடங்களுக்கான பரீட்சைகளும் நிறைவடைந்திருந்தால் குறித்த மாணவர்கள் உடனடியாக கொவிட் தடுப்பூசியின் இரண்டாவது டோசைப் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 
 
இது தொடர்பில் தொற்றுநோயியல் பிரிவின் பிரதானி விசேட வைத்திய நிபுணர் சமித்த கினிகே தெரிவிக்கையில், 
 
தடுப்பூசி வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி சிறந்த முறையில் வழங்கப்பட்டு வருகின்றது. 12 - 16 வயதுக்குட்பட்ட 745,000 மாணவர்களுக்கும் 16 - 19 வயதுக்குட்பட்ட 11 இலட்சம் மாணவர்களுக்கும் தடுப்பூசி எவ்வித பாதிப்பும் இல்லாமல் வழங்கப்பட்டுள்ளது. 
 
இம்முறை நடைபெறும் உயர்தரப் பரீட்சையில் பல பிரிவுகளுக்கான பரீட்சைகள் நிறைவடைந்துள்ளன. எனவே அவ்வாறு பரீட்சைகள் நிறைவடைந்த மாணவர்கள் எந்தவொரு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திலும் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்தார்.
A/L பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்! A/L பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்! Reviewed by Irumbu Thirai News on February 23, 2022 Rating: 5

கொரோனாவின் தீவிரம் எப்போது குறையும்? WHO வின் அறிவிப்பு!

February 12, 2022

கொரோனா தொற்றின் தீவிரத்தன்மை எப்போது முடிவுக்கு வரும் என்ற விடயத்தை உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் பெட்ரஸ் அதனோம் கெப்ரேயஸ் கூறியுள்ளார். 
 
அதாவது மொத்த உலக மக்கள் தொகையில் 70 சதவீதமான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுமாயின் கொரோனாவின் தீவிரத்தன்மை குறையும் என அவர் தெரிவித்துள்ளார். 
 
எதிர்வரும் ஜூன் அல்லது ஜூலை மாதத்திற்குள் இந்த இலக்கை அடைய எதிர்பார்ப்பதாகவும் அவ்வாறு அது அடையப்பட்டால் கொரோனா பரவலின் தீவிரத்தன்மை நிச்சயம் முடிவுக்கு வரும் எனவும் இது எங்கள் கைகளிலேயே உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
கொரோனாவின் தீவிரம் எப்போது குறையும்? WHO வின் அறிவிப்பு! கொரோனாவின் தீவிரம் எப்போது குறையும்? WHO வின் அறிவிப்பு! Reviewed by Irumbu Thirai News on February 12, 2022 Rating: 5

கொரோனா வைரஸின் ஆயுட்காலம் தொடர்பில் வெளியான ஆய்வு!

February 10, 2022

கொரோனா வைரஸ் ஆரம்பமானதிலிருந்து அதன் ஒவ்வொரு பிரிவுகள் மற்றும் அதன் தன்மைகள் ஆயுட்காலம் போன்ற பல விடயங்கள் பல்வேறு மட்டங்களில் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. 
 
எனவே அந்த வகையில் அண்மையில் வெளியான ஆய்வு ஒன்று தொடர்பாக சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். 
 
அதாவது கொரோனா பாதிப்புக்குள்ளான ஒருவரின் உடலில் 05 நாட்களுக்கு மட்டுமே வைரஸ் தொழிற்பாட்டில் இருக்கும் என இது தொடர்பாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவு தெரிவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸின் ஆயுட்காலம் தொடர்பில் வெளியான ஆய்வு! கொரோனா வைரஸின் ஆயுட்காலம் தொடர்பில் வெளியான ஆய்வு! Reviewed by Irumbu Thirai News on February 10, 2022 Rating: 5

நோய் நிலைமை காணப்பட்டால் உரிய பரீட்சை நிலையத்துக்கு அனுப்ப வேண்டாம்!

February 08, 2022

இம்முறை உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்கள் யாருக்காவது நோய் நிலைமைகள் காணப்பட்டால் அவர்கள் அவர்களுக்கு உரித்தான பரீட்சை நிலையங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் L.M.D. தர்மசேன தெரிவித்துள்ளார். 
 
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
 
தொற்றுறுதியானவர்களுடன் தொடர்புடையவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் பரீட்சை நிலையங்களுக்கு செல்லலாம். ஆனால் தொற்றுறுதியானவர்கள் வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள விஷேட பரீட்சை நிலையத்திற்கே செல்ல வேண்டும் என அவர் தெரிவித்தார். 
 
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நோய் நிலைமை காணப்பட்டால் உரிய பரீட்சை நிலையத்துக்கு அனுப்ப வேண்டாம்! நோய் நிலைமை காணப்பட்டால் உரிய பரீட்சை நிலையத்துக்கு அனுப்ப வேண்டாம்! Reviewed by Irumbu Thirai News on February 08, 2022 Rating: 5
Powered by Blogger.