Samsung இன் 12 வருட ஒட்டத்தை பின் தள்ளிய Apple!
Irumbu Thirai News
January 18, 2024
உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் விற்பனையாளரான Samsung நிறுவனத்தை Apple பின்னுக்குத் தள்ளியுள்ளது.
அமெரிக்காவின் iPhone அதன் தென் கொரிய போட்டியாளரான Samsung இன் 12 வருட சாதனையை முறியடித்து உலகில் அதிக விற்பனையாகும் Smart Phone என்ற நாமத்தை பெற்றுள்ளது.
இந்த வாரம் வெளியிடப்பட்ட இன்டர்நேஷனல் டேட்டா கார்ப்பரேஷனின் தரவுகளின்படி, தென் கொரிய நிறுவனத்தின் 226.6 மில்லியன் யூனிட்களுடன் ஒப்பிடும்போது, ஐபோன் 2023 இல் 234.6 மில்லியன் யூனிட்டுகளுடன் முன்னணியில் காணப்படுகிறது.
Samsung 19.4% சந்தைப் பங்கையும் iPhone 20.1% சந்தைப் பங்கையும் பெற்றுள்ளது என்று IDC தெரிவித்துள்ளது.
Samsung இன் அண்மைய வெளியீடுகள் தொடர்பான அறிமுகத்திற்கு முன்னரே இந்த தரவுகள் வெளியானமை குறிப்பிடத்தக்கது.
Previous:
Samsung இன் 12 வருட ஒட்டத்தை பின் தள்ளிய Apple!
Reviewed by Irumbu Thirai News
on
January 18, 2024
Rating: