Results for Health Tips

குடும்ப உறுப்பினருக்கு மனநலப் பிரச்சனைகள் இருப்பதை எப்படி கண்டு பிடிப்பது?

August 30, 2021
 

வாழ்க்கையில் எல்லோருக்கும் பிரச்னைகளும் தேவைகளும் உண்டு. ஆனால் இவை எல்லை தாண்டிப் போகும்போது அது நம் வாழ்வை பாதிக்கிறது. 
 
அதை சரியான நேரத்தில் நாம் கவனிக்க வேண்டும். மனதில் ஏற்படும் குழப்பத்தைத் தயங்காமல் ஆலோசகரிடமோ மனநல மருத்துவரிடமோ தெரிவிக்க வேண்டும். 
 
எல்லா நேரத்திலும் மருத்துவர் மருந்து தர மாட்டார். ஆரம்ப கட்டப் பிரச்னைகளாக இருந்தால் ஆலோசனை மூலமாகவும் நடத்தையை 
 
மாற்றிகொள்வதன் மூலமாகவும் அதிலிருந்து மீண்டுவிடலாம். சரியான நேரத்தில் மனநல பாதிப்பைக் கண்டறிந்தால் விரைவிலேயே நலம் பெறலாம். உதவி பெறாமல் தட்டிக்கழிக்கும்போது அது மனநலத்தை இன்னும் ஆழமாக பாதிக்கிறது. 
 
அப்படிப்பட்ட சூழ்நிலையில் நலம் பெறுவதற்குக் கூடுதல் முயற்சியும் நேரமும் தேவைப்படும். சரியான நேரத்தில் சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டியது அவசியம். அதுவே மனநலத்துக்கான முதல் படி. 
 
"குடும்ப உறுப்பினர்களின் அன்றாட செயல்பாடுகளை கவனிக்க வேண்டும், அதைப் பொறுத்து மனநல உதவி தேவையா இல்லையா என்பதை முடிவெடுக்கலாம்" என்கிறார் மனநல மருத்துவர் ராஜேந்திர பார்வே. 
 
"தினசரி வேலைகள், வெளியிலிருக்கும் வேலைகள், குளிப்பது, கழிவறைக்குச் செல்வது போன்றவற்றில் பிரச்னை இருந்தால் அதை கவனிக்கவேண்டும். அதுவே அறிகுறி அல்ல, அதைக் கூடுதலாகக் கவனிக்கவேண்டும். 
 
அன்றாட வாழ்வின் மகிழ்ச்சியை அவர்கள் இழந்துவிட்டார்களா? இயந்திரத்தைப் போல நடந்துகொள்கிறார்களா? பசி, உடல் கழிவை வெளியேற்றுதல், தூக்கம், பாலியல் செயல்பாடு ஆகியவற்றில் தொந்தரவு இருக்கிறதா?, எல்லாவற்றையும் கவனிக்க வேண்டும்" என்கிறார். 
 

எப்படி உரையாடுவது? 


நம் குடும்பத்தில் ஒருவருக்கு இதுபோன்ற பிரச்னைகள் இருந்தால் நாம் அவர்களுடன் பேசலாம், கேள்வி கேட்கலாம், ஆனால் அதைப் பேசும்போது அக்கறையாகவும் அன்பாகவும் இருக்கவேண்டும். 
 
இந்தப் பிரச்னைகளுக்குப் பின்னால் உள்ள காரணம் என்ன? பிரச்னைகள் தீவிரமாக இருக்கின்றனவா? இவை எப்போதாவது வருகின்றவா அடிக்கடி வருகின்றவா? எவ்வளவு நாட்களுக்கு ஒரு முறை வருகின்றன? போன்ற கேள்விகளைக் கேட்டு குடும்பத்தினரின் மனநலத்தைப் புரிந்துகொள்ளலாம். 
 
ஆனால் இவற்றை எடுத்த எடுப்பில் போட்டு உடைத்துவிட முடியாது. சம்பந்தப்பட்டவரின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து நடந்துகொள்ள வேண்டும். இதற்கு எதிர்மறையாகவும் பதில் வரலாம், எல்லாம் நன்றாக இருக்கிறது என்று அவர்கள் சொல்லலாம். அந்த சூழலில் பொறுமையாக இருந்து அவர்களைக் கூடுதல் அக்கறையோடு கவனித்துக் கொள்ள வேண்டும். 
 
குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு அடிக்கடி மனத்தொய்வு, பதற்றம், கோபம், பொறாமை போன்றவை வரும்போது அவர்களுக்கு நாம் உதவி செய்ய சில முயற்சிகள் எடுக்க வேண்டும். 
 
 

தவறான நம்பிக்கைகளிலிருந்து எப்படி விடுபடுவது? 

 
பொதுவாக எந்த மனநலப் பிரச்னையையும் "பைத்தியம் பிடிப்பது" என்றோ மனத்தொய்வு என்றோ மக்கள் நினைப்பார்கள். ஆனால் தடுக்க முடியாத எண்ண ஓட்டம், பதற்றம், ஓசிடி, மனத்தொய்வு போன்ற பல பிரச்னைகளும் வரலாம். 
 
மனநல மருத்துவரையோ ஆலோசகரையோ சந்தித்தாலே அவர்களுக்கு மனநோய் வந்துவிட்டது என்ற தவறான புரிதலில் இருந்து நாம் விடுபடவேண்டும். இதுபோன்ற எண்ணங்களோடு வீட்டிலும் விவாதிக்ககூடாது. 
 
மின் அதிர்ச்சி சிகிச்சை மூலமாக மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கிறார்கள் என்பதும் ஒரு தவறான புரிதல். இது 'Electro Conclusive Therapy' (ECT) என்று அழைக்கப்படுகிறது. நோயுற்ற எல்லாருக்கும் இது தேவைப்படுவதில்லை. இந்த சிகிச்சையைப் பெறுபவர்கள்கூட வீட்டுக்குத் திரும்பிவிடலாம். இது அனைவருக்கும் தரப்படுவதும் இல்லை. 
 

மனநலப் பிரச்னைகள் குறித்து தெரிந்தபின்பு என்ன செய்வது? 

 
நமக்கு மனநலப் பிரச்னை இருப்பது தெரிந்தபின்னும்கூட நாமாக எதுவும் செய்யக்கூடாது. மனநல மருத்துவர்கள், ஆலோசர்களிடம் பேசவேண்டும். மனநல பாதிப்பு எப்படிப்பட்டது என்று அவர்கள்தான் முடிவு செய்வார்கள். 
 
இணையத்தில் அறிகுறிகளைத் தேடி நாமாக நோயை முடிவு செய்து மருந்துகள் எடுத்துக்கொள்வது ஆபத்தானது. "கூகுளில் தேடக்கூடாது. உங்களது எல்லா அறிகுறிகளையும் கேட்டபின்பே மருத்துவர்கள் சிகிச்சையை முடிவு செய்வார்கள். 
 
யாருக்கு மருந்து தேவை, யாருக்கு ஆலோசனை தேவை, யாருக்கு இரண்டுமே தேவை என்பதையெல்லாம் முடிவெடுக்க ஒரு முறை உள்ளது. கூகுளால் இதை செய்ய முடியாது" என்கிறார் மருத்துவர் ராஜேந்திர பார்வே. 
 

குடும்பம் மற்றும் ஆதரவுக் குழுக்கள் 

"யாராக இருந்தாலும் அவர்கள் மனநலம் சீராவதற்குக் குடும்பத்தின் பங்களிப்பு முக்கியம்" என்கிறார் பொதுநலக் கழகத்தைச் சேர்ந்த ஆலோசகர் வைதேஹி பிடே. 
 
"ஆலோசகர், மருத்துவர்களின் உதவியோடு மனநலத்தை சரிசெய்வது இயல்புதான். மருந்துகளை எடுத்தால்தான் எல்லாம் சரியாகும் என்றும் மருந்துகள் எடுத்தால் அதுவே பழகிவிடும் என்றும் ஒரு தவறான நம்பிக்கை உள்ளது. அதிலிருந்து மக்கள் விடுபடவேண்டும். 
 
மருத்துவர்கள் சம்பந்தப்பட்டவர்களிடம் பேசி, சோதனைகள் செய்த பிறகு சிகிச்சை பற்றி முடிவெடுப்பார்கள். குடும்பத்தினருடன் ஆதரவுக் குழுக்களும் மனநலம் மேம்பட உதவுகின்றன. 
 
தன்னைப் போலவே பலருக்குப் பிரச்னை இருக்கிறது, அதிலிருந்து அவர்கள் மீண்டிருக்கிறார்கள் என்பதை நோயுற்றவர் 
 
உணர்வார். தாங்கள் மட்டும் தனியாக இல்லை, மற்றவர்களுக்கும் இந்தப் பிரச்னை இருக்கிறது என்ற உணர்வே அவர்களுக்கு ஆறுதலைத் தரும்" என்கிறார். 
 
 

தவிர்க்க வேண்டியவை 

குடும்ப உறுப்பினர்களுக்கு இந்த பாதிப்பு இருந்தால் சில விஷயங்களைத் தவிர்க்க வேண்டும். 
 
முதலில் குற்றம் சொல்லி பழி போடக்கூடாது. விதியைக் காரணம் காட்டக்கூடாது, நேரம் சரியில்லை, போன ஜென்மப் பாவம் என்றெல்லாம் சொல்லக்கூடாது. தீர்க்கமுடியாத ஒரு பரம்பரை வியாதி என்று சொல்லக்கூடாது. நோயுற்றவருக்கு ஆதரவு தர முயற்சி செய்யவேண்டும். 
 
நாம் கூட இருக்கும் உணர்வைத் தந்து அவர்கள் வலியைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். அவர்கள் நமக்குத் தொல்லை தரவில்லை என்பதை உணரவேண்டும். 
 
அவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், 
 
இதை அவர்கள் தெரிந்து செய்வதில்லை, அவர்களது மனநலப் பிரச்னைகள் இப்படி நடந்துகொள்ள வைக்கின்றன. ஆகவே மேலும் மேலும் கேள்வி கேட்டு அவர்களைக் கஷ்டப்படுத்தக்கூடாது.
Source: https://www.bbc.com/tamil/science-58360371
நன்றி: BBC.COM
குடும்ப உறுப்பினருக்கு மனநலப் பிரச்சனைகள் இருப்பதை எப்படி கண்டு பிடிப்பது? குடும்ப உறுப்பினருக்கு மனநலப் பிரச்சனைகள் இருப்பதை எப்படி கண்டு பிடிப்பது? Reviewed by irumbuthirai on August 30, 2021 Rating: 5

சிறுவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதைக் கண்டறிவது எப்படி?

August 28, 2021
 

சிறுவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிவது எப்படி? என்பது தொடர்பாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்திய நிபுணர் ஜி. எஸ். விஜேசூரிய விளக்கம் அளித்துள்ளார். 
 
குழந்தையின் வழக்கமான நடவடிக்கைகளை தொடர்ந்து அவதானிப்பதன் மூலம் கொவிட் - 19 தொற்று அறிகுறிகளை அடையாளம் காண முடியும் என்று வைத்தியர் தெரிவித்துள்ளார். 
 
இதற்கமைவாக, பின்வரும் விடயங்களில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 
 
சிறுவர்கள் நடக்கும்போது வழக்கத்தை விட கடினமான சோர்வுடன் காணப்படுகின்றனரா? மிகக் குறைந்த தூரம் நடக்கும்போது நிற்கின்றனரா ? உட்காருகின்றனரா ? சுவாசிக்கும் தன்மை அதிகரிக்கின்றதா? சிறுவர்களின் உதடுகள் கருப்பு நிறமாக மாறுகின்றதா? கண் நிறத்தில் மாற்றம் ஏற்படுகின்றதா? சருமத்தில் மாற்றத்தைக் காணக்கூடியதாகவுள்ளதா ? 
 
இத்தகைய அறிகுறிகள் காணப்படும் சிறுவர்களின் ஒக்ஸிஜன் அளவு குறைந்துள்ளதையே எடுத்துக்காட்டும் அறிகுறியாகும் என்று வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார். 
 
இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகள் மத்தியில் இத்தகைய அறிகுறிகளைக் கவனிப்பது மிகவும் கடினம் என்று அவர் மேலும் கூறினார்.
Source: அரசாங்க தகவல் திணைக்களம்.
சிறுவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதைக் கண்டறிவது எப்படி? சிறுவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதைக் கண்டறிவது எப்படி? Reviewed by irumbuthirai on August 28, 2021 Rating: 5

கொரோனாவைக் குணப்படுத்தும் தேங்காய் எண்ணெய்: எப்படி பாவிக்க வேண்டும்? வெளியான புதிய ஆய்வு!

May 27, 2021

தேங்காய் எண்ணெய் கொரோனாவைக் குணப்படுத்துமா என்பது தொடர்பில் புதிய ஆய்வு ஒன்று வெளியாகியுள்ளது. 
அதாவது தூய்மையான தேங்காய் எண்ணெயிலுள்ள சேர்மங்கள் கொரோனா அறிகுறி உள்ளவர்களின் உடலில் வைரஸின் அளவை 
60 – 90% வரை குறைக்க முடியும் என பிலிப்பைன்ஸின் அட்டெனியோ டி மணிலா பல்கலைக்கழகத்தின் இரசாயனவியல் பேராசிரியரும் பிலிப்பைன்ஸ் சங்கத்தின் ஒருங்கிணைந்த இரசாயனவியலாளர்கள் சங்கத்தின் தலைவருமான ஃபேபியன் டெரிட் கூறியுள்ளார். 
எனினும் லேசான அறிகுறிகளைக் உள்ள நோயாளிகளுக்கு மட்டுமே இதைச் செய்ய முடியும். 
கொரோனா சிகிச்சை நிலையம் மற்றும் பொது வைத்தியசாலையில் 57 நோயாளிகளிடம் மேற்கொண்ட ஆய்வில் இந்த விடயம் உறுதியாகியுள்ளது எனவும் அவர் தெரிவித்தார். 
இதேவேளை சுத்தமான தேங்காய் எண்ணெயை எவ்வாறு பாவிக்க வேண்டும் என்றும் கூறினார். அதாவது ஒரு நாளைக்கு மூன்று முறை உணவுக்குப் பின் 02 தேக்கரண்டி சுத்தமான எண்ணையை எடுக்க வேண்டும் என்றார். 
எவ்வாறாயினும் இந்த அளவு தற்போதைய நிலையில் பரிந்துரைக்கப்பட்டாலும் அது தொடர்பில் ஆராய்ச்சிகள் தொடர்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கொரோனாவைக் குணப்படுத்தும் தேங்காய் எண்ணெய்: எப்படி பாவிக்க வேண்டும்? வெளியான புதிய ஆய்வு! கொரோனாவைக் குணப்படுத்தும் தேங்காய் எண்ணெய்: எப்படி பாவிக்க வேண்டும்? வெளியான புதிய ஆய்வு! Reviewed by irumbuthirai on May 27, 2021 Rating: 5

கொரோனாவுக்காக அறிமுகமாகியது புதிய App... உறுதிப்படுத்தப்பட்ட பாதுகாப்பான தரவுகளுடன்...

April 11, 2020

கொரோனா தொடர்பான சகல Update களையும் அறிந்திட புதிய App ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. MyHealth என்ற புதிய கைத்தொலைபேசி செயலியை சுகாதார மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைச்சுடன் இணைந்து இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் (ICTA) அறிமுகப்படுத்தியுள்ளது. 
இதன் மூலம் கோவிட்-19 வைரஸ் பரவுவது குறித்த தகவல்களை பெற்றுக்கொள்ளலாம். உலகளாவிய கோவிட்-19 வைரஸ் இலங்கையில் பரவத் தொடங்கியவுடன், பாதிக்கப்பட்ட குடிமக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தவேளையில் ஒரு வலுவான கைத்தொலைபேசி செயலியின் தேவை உணரப்பட்டது. 
அதனடிப்படையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அவர்களின் மேலான அறிவுறுத்தலின் கீழ் இவ் செயலியை இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் அறிமுகப்படுத்தியது. 
இந்த App மூலம் வைரஸ் குறித்த தேவையான தரவு, தகவல் மற்றும் கருத்துக்களை மருத்துவ அதிகாரிகளுக்கும், அவற்றுடன் தொடர்புடைய துறைசார் நிறுவனங்களுக்கும் வழங்குகிறது. 
இவ் கைத்தொலைபேசி செயலியை கூகிள் பிளேஸ்டோர், ஹூவாய் ஆப்ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப்ஸ்டோர் மூலம் பதிவிறக்கம் செய்து, இருப்பிடத்தைப் பதிவு செய்யுமாறு கேட்கப்படுகின்றீர்கள். இந்தப் பயன்பாட்டின் முக்கிய அம்சங்களில் ஒன்று, 
வைரஸ் கண்டறியப்பட்டால் அதை எல்லா பயனர்களுடனும் பகிரலாம். அதே நேரத்தில், பாதிக்கப்பட்ட நபர் இருந்த இடத்தை உங்கள் இருப்பிடத்துடன் வரைபடமாகக் காண்பிக்கிறது. வைரஸ் தொற்று ஏற்பட்ட நபர் சென்றுவந்த இடங்களின் தரவுகளை அறிந்துகொள்ள முடியும். மேலும், கடந்த 14 நாட்களில் அவர்கள் குடும்பத்தினரையும், அவர்கள் இணைந்த நண்பர்களையும் பாதுகாக்கும் நோக்கில் கைத்தொலைபேசி செயலியில் பயனர்களின் பதிவுசெய்யப்பட்ட இருப்பிடத் தரவுகள் அனைத்தும் கைத்தொலைபேசிக்குள் பாதுகாப்பாக வைக்கப்படுகின்றன. இந்த கைத்தொலைபேசி செயலில் பதிவுசெய்யப்படும் பயனரின் தகவல்கள் அனுமதியின்றி எந்த வெளி அமைப்புகளுக்கும் அனுப்பப்படாது. மேலும், பாதிக்கப்பட்ட நபருடன் உங்களுக்கு நெருங்கிய தொடர்பு இருந்தால், நீங்கள் தானாகவே தேசிய நோய் கண்காணிப்பு அமைப்பில் பதிவு செய்யலாம். இது கோவிட்-19 வைரஸ் தொற்றலை அடையாளம் காணவும், பரவலைக் கட்டுப்படுத்தவும் மற்றும் பிற நபர்களை தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது. இவ்வாறு பல அம்சங்களுடன் வெளிவந்திருக்கின்றது இந்த App.
(அ.த.தி)
கொரோனாவுக்காக அறிமுகமாகியது புதிய App... உறுதிப்படுத்தப்பட்ட பாதுகாப்பான தரவுகளுடன்... கொரோனாவுக்காக அறிமுகமாகியது புதிய App... உறுதிப்படுத்தப்பட்ட பாதுகாப்பான தரவுகளுடன்... Reviewed by irumbuthirai on April 11, 2020 Rating: 5

உலளாவிய ரீதியில் கொரோனா பற்றிய தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்ள...

March 24, 2020


கொரோனா பற்றிய தகவல்களை ஒவ்வொரு நாடு ரீதியாக இலகுவில் அறியும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேவையான நாட்டை கிளிக் செய்தவுடன் அங்கு பாதிக்கப்ட்டோர், குணமடைந்தோர், மரணமடைந்தோர் தொடர்பான விபரங்களை அறியலாம். 
கீழுள்ள லிங்கை கிளிக் செய்து குறித்த தளத்திற்கு சென்று தேவையான நாட்டை கிளிக் செய்க.


உலளாவிய ரீதியில் கொரோனா பற்றிய தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்ள... உலளாவிய ரீதியில் கொரோனா பற்றிய தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்ள... Reviewed by irumbuthirai on March 24, 2020 Rating: 5

கொரோனா.... முழு விபரங்களுடன் 21-03-2020 அன்று வெளியான ஊடக அறிக்கை

March 21, 2020


கொரோனா தொடர்பில் முழு விபரங்களுடன் 21-03-2020 அன்று வெளியான ஊடக அறிக்கையை இங்கு தருகிறோம். 
இதில், 

இதுவரையுள்ள நிலைமைகளும் மேற்கொண்டு எடுக்கப்படும் நடவடிக்கைகளும் தரப்பட்டுள்ளன. 
இதன் முழு செய்தியைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


கொரோனா.... முழு விபரங்களுடன் 21-03-2020 அன்று வெளியான ஊடக அறிக்கை கொரோனா.... முழு விபரங்களுடன் 21-03-2020 அன்று வெளியான ஊடக அறிக்கை Reviewed by irumbuthirai on March 21, 2020 Rating: 5

கொரோனா வைரஸ் தொடர்பில் 23 பேர் கைது

March 15, 2020


கொரோனா வைரஸ் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் உண்மைக்குப் புறம்பான தகவல்களை மேற்கொள்வோருக்கும் உடன் தண்டனை வழங்கப்படும். இது தொடர்பாக ஏற்கனவே 23 பேர் கைது செய்யப்பட்டுள்னனர் என்று பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
(அ.த.தி)

கொரோனா வைரஸ் தொடர்பில் 23 பேர் கைது கொரோனா வைரஸ் தொடர்பில் 23 பேர் கைது Reviewed by irumbuthirai on March 15, 2020 Rating: 5
Powered by Blogger.