Results for Health

எச்.ஐ.வி அபாயத்தைத் தடுக்க புதிய சிகிச்சை முறை அறிமுகம்

August 10, 2023


HIV அபாயம் உள்ளவர்களுக்கு அந்த அபாயத்தைத் தடுப்பதற்காக "ப்ரெப்" என்ற புதிய சிகிச்சை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய பாலியல் நோய் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் தெரிவித்துள்ளது. 

 நாடளாவிய ரீதியில் உள்ள பாலியல் நோய் கிளினிக்குகளில் இந்த சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள முடியும் தேசிய பாலியல் நோய் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஜானகி விதானபத்திரன தெரிவித்துள்ளார். 

அவர் இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில், "தேசிய பாலியல் நோய் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம், எச்.ஐ.வி ஆபத்தில் உள்ளவர்களுக்கு சிகிச்சை முறையைத் தொடங்கியுள்ளது. 

இந்த சிகிச்சை முறையை நாடளாவிய ரீதியில் உள்ள 41 தேசிய பாலியல் நோய் மையங்களில் பெறலாம். நீங்கள் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்படும் ஆபத்தில் இருப்பவராக இருந்தால், மருத்துவரைச் சந்தித்து உங்கள் ஆபத்து குறித்துப் பேசித் தேவையான சிகிச்சையைப் பெறுங்கள். 

இதற்காக செய்யப்படும் பரிசோதனைகள் மற்றும் மருந்துகள் இலவசமாகும். எச்.ஐ.வி ஆபத்தில் உள்ளவர்களுக்கு இந்த சிகிச்சைகளை மேற்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்." என்று அவர் தெரிவித்தார். 

இதேவேளை, இந்த வருடத்தின் முதல் காலாண்டில் புதிதாக 165 எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்கள் பதிவாகியுள்ளதாக வைத்தியர் ஜானகி விதானபத்திரன மேலும் குறிப்பிட்டுள்ளார்.




எச்.ஐ.வி அபாயத்தைத் தடுக்க புதிய சிகிச்சை முறை அறிமுகம் எச்.ஐ.வி அபாயத்தைத் தடுக்க புதிய சிகிச்சை முறை அறிமுகம் Reviewed by Irumbu Thirai News on August 10, 2023 Rating: 5

இங்கிலாந்தில் பரவும் புதிய வகை கொரோனா! 7 பேரில் ஒருவருக்கு பாதிப்பு!

August 06, 2023


இங்கிலாந்து முழுவதும் வேகமாக பரவி வருகின்ற Eris என்ற குறியீட்டுப் பெயருடன் EG.5.1 என அழைக்கப்படும் புதியவகை கொரோனா மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

தற்போது இங்கிலாந்தில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக அங்கு அதிகமானோர்க்கு தலைவலி, காய்ச்சல், மூக்கில் நீர்வடிதல் போன்ற அறிகுறிகள் காணப்படுகின்றன. இந்நிலைமை பெருமளவான மக்களிடம் வேகமாக பரவி வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 

 இது தொடர்பாக இங்கிலாந்தின் சுகாதார பாதுகாப்பு முகவரகம் ஆராய்ந்த போது இது ஒமிக்ரோனின் மாறுபாடு அடைந்த வைரஸ் கிருமி என கண்டறியப்பட்டுள்ளது. 

 இந்த வைரஸானது இங்கிலாந்தில் 07 பேரில் ஒருவருக்குப் பரவியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. Eris என்பது கிரேக்க தெய்வத்தின் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது.



Previous:


இங்கிலாந்தில் பரவும் புதிய வகை கொரோனா! 7 பேரில் ஒருவருக்கு பாதிப்பு! இங்கிலாந்தில் பரவும் புதிய வகை  கொரோனா! 7 பேரில் ஒருவருக்கு பாதிப்பு! Reviewed by Irumbu Thirai News on August 06, 2023 Rating: 5

மேல் மாகாண பாடசாலை மாணவர்களின் சீருடையில் மாற்றம்

June 20, 2023


சமீபகாலமாக பாடசாலை மாணவர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்படும் தன்மை அதிகரித்துள்ளமையினால் டெங்கு நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக மேல் மாகாணப் பாடசாலைகளின் மாணவா்கள், பாடசாலைச் சீருடைக்கு மேலதிகமாக உடலுக்கு பொருந்தக்கூடியவாறு வெளிர் நிற ஆடைகளை அணியுமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு கோாியுள்ளது. 

டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் தலைவர் வைத்தியா் நளின் ஆரியரத்ன இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் மேலும் கருத்து தொிவித்த அவா், 

மேல் மாகாணத்திலுள்ள பாடசாலை மாணவர்கள் பாடசாலைக்கு வரும்போது சீருடைக்கு மேலதிகமாக உடலை மறைக்கும் வகையில் வெளிர் நிற ஆடைகளை அணிந்து வெப்பநிலைக்கு ஏற்ற ஆடைகளுடன் வருமாறு நாம் சம்பந்தப்பட்ட பிாிவுகளுக்கு யோசனை முன்வைத்துள்ளோம். 

ஆளுநா், பிரதான செயலாளா், கல்வித்துறை செயலாளா் போன்றோரின் அனுமதியும் இதற்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேேலும் குறிப்பிட்டுள்ளாா்.


Previous:


மேல் மாகாண பாடசாலை மாணவர்களின் சீருடையில் மாற்றம் மேல் மாகாண பாடசாலை மாணவர்களின் சீருடையில் மாற்றம் Reviewed by Irumbu Thirai News on June 20, 2023 Rating: 5

பாடசாலை மாணவர்களிடையே தொழுநோய் அதிகரிப்பு!

November 20, 2022

தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிய பாடசாலை மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட நாடு தழுவிய திட்டத்தைத் தொடர்ந்து தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை தெரியவந்துள்ளதுடன் தொழுநோயானது பாடசாலை மாணவர்களிடையே பரவக்கூடிய அபாயமும் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சின் தொழுநோய் எதிர்ப்பு பிரசார பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.   

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையம் (CDC) வெளியிட்டுள்ள தகவல்களின் படி 95% ஆன மனிதர்கள் தொழுநோயை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை எதிர்க்கும் நோயெதிர்ப்பு தன்மையை இயற்கையாகவே கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் “இலங்கையில் 02 வகையான தொழுநோய்கள் பரவுகின்றன. அவை தொற்றக்கூடியவை மற்றும் தொற்றாதவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன. துரதிஷ்டவசமாக, இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட தொற்றாளர்களில் 60% ஆனோர் தொற்றக் கூடிய நோய்த்தன்மையை கொண்டுள்ளமை வருந்தத்தக்கது” என்று மருத்துவர் பிரசாத் ரணவீர சுட்டிக்காட்டியுள்ளார். 

இந்த வருடத்தில் மாத்திரம் இலங்கையில் 500க்கும் மேற்பட்ட தொழுநோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

பாடசாலை மாணவர்களிடையே தொழுநோய் அதிகரிப்பு! பாடசாலை மாணவர்களிடையே தொழுநோய் அதிகரிப்பு! Reviewed by Irumbu Thirai News on November 20, 2022 Rating: 5

வைரஸை கண்டறிந்து SMSஅனுப்பும் முக கவசம் கண்டுபிடிப்பு

September 23, 2022

வைரஸை கண்டறிந்து குறுஞ்செய்தி (SMS) அனுப்பும் முகக் கவசத்தை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 

சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டின் கடைசியில் தோன்றிய கொரோனா வைரஸ் 2 ஆண்டுகளை கடந்தும் இன்னும் முற்றாக ஒழியாமல் உலக மக்களை பாதித்துக் கொண்டிருக்கிறது. 

இந்த கொரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து மக்களை பாதுகாக்கும் கவசமாக முக கவசம் முக்கிய பங்கு வகிக்கிறது. 

இந்நிலையில் வைரஸ் காற்றில் கலந்திருந்தால் அதை குறுஞ்செய்தி ((SMS) மூலம் அணிந்திருப்பவருக்கு காட்டிக் கொடுக்கும் வகையில் நவீன முக கவசத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 

சீனாவின் ஷாங்காய் நகரிலுள்ள டோங்ஜி பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த புதிய முக கவசம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இந்த நவீன முககவசத்தை ஒருவர் அணிந்து கொண்டு வெளியில் செல்லும் போது, அவரைச் சுற்றிலும் இருக்கும் காற்றில் சாதாரண வைரஸ் முதல் கொரோனா வைரஸ் என எந்த வகையான வைரஸ் கலந்திருந்தாலும், அதனை கண்டறிந்து, அணிந்திருப்பவரின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பி, முககவசம் அணிந்திருப்பவரை எச்சரிக்கும் வகையில் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. 

இதுபற்றி, முகக் கவசத்தை கண்டுபிடித்த விஞ்ஞானிகளில் ஒருவரான யின் பாங் தெரிவிக்கையில், 
முகக் கவசம் அணிவது நோய் பரவும் அபாயத்தை குறைக்கும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. எனவே, காற்றில் வைரஸ் இருப்பதைக் கண்டறிந்து, அணிபவரை எச்சரிக்கும் முக கவசத்தை உருவாக்க விரும்பினோம். எங்கள் முக கவசமானது காற்றோட்டம் குறைவாக உள்ள இடங்களில், அதாவது 'லிப்ட்' அல்லது மூடிய அறைகள் போன்றவற்றில் நோய் தொற்று ஏற்படும் அபாயம் அதிகம் உள்ள இடங்களில் நன்றாக வேலை செய்யும்' என தெரிவித்துள்ளார்.
Source: அரசாங்க தகவல் திணைக்களம்.


வைரஸை கண்டறிந்து SMSஅனுப்பும் முக கவசம் கண்டுபிடிப்பு வைரஸை கண்டறிந்து SMSஅனுப்பும் முக கவசம் கண்டுபிடிப்பு Reviewed by Irumbu Thirai News on September 23, 2022 Rating: 5

குரல் பதிவைக் கொண்டு கொரோனாவை கண்டறியும் செயலி (App)

September 15, 2022

உலக நாடுகளை பாதித்து வரும் கொரோனா(Covid-19) நோய்த் தொற்றை எளிமையாக கண்டறிய தொலைபேசி செயலி (Mobile App) ஒன்றை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். 
 
செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence) மூலம் செயல்படும் இந்த செயலியானது நோயாளிகளின் குரல் பதிவு மூலம் தொற்றை உறுதி செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதாவது குறித்த நபருடைய மருத்துவ குணங்கள், அவரது புகைபிடிக்கும் நிலை போன்ற சில அடிப்படை தகவல்களை அதில் பதிவு செய்து, பின்னர் அவர்களின் சில சுவாச ஒலிகளையும் அதில் பதிவு செய்ய வேண்டும். 

அதன்படி 03 முறை இருமல், 03 - 05 முறை வாய் வழியாக ஆழமாக சுவாசித்தல் மற்றும் திரையில் ஒரு சிறிய வாக்கியத்தை 03 முறை வாசிப்பது என்பன இதில் அடங்கும். 

இந்த விடயங்களைக் கொண்டு குறிப்பிட்ட அந்த நபருக்கு தொற்று இருக்கிறதா? என்பதை துல்லியமாக இந்த செயலி தெரிவிக்கும் என நெதர்லாந்தை சேர்ந்த ஆய்வாளர் தெரிவித்துள்ளார். 

இந்த செயலியானது 89% அளவுக்கு துல்லியமாக முடிவை காட்டும் என தெரிவித்த விஞ்ஞானிகள், ஏனைய பரிசோதனை முறைகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் மலிவானது என்றும், குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் இவற்றை எளிதாக பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
Source: அரசாங்க தகவல் திணைக்களம்.
குரல் பதிவைக் கொண்டு கொரோனாவை கண்டறியும் செயலி (App) குரல் பதிவைக் கொண்டு கொரோனாவை கண்டறியும் செயலி (App) Reviewed by Irumbu Thirai News on September 15, 2022 Rating: 5

புதிய வகையான முகக் கவசம் கண்டுபிடிப்பு!

July 07, 2022


புதிய வகையான N95 முகக் கவசத்தை அமெரிக்காவின் ரென்சீலர் பொலிடெக்னிக் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 

இந்த முக கவசமானது கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி அதை அழிக்கவும் செய்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதற்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட முகக் கவசத்தால் வைரஸ் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் அது அழிக்கப்படவில்லை. 


இந்த புதிய முக கவசத்தை நீண்ட காலம் பாவிக்கலாம். மேலும் காற்றின் மூலம் பொதுவாக பரவக்கூடிய கிருமிகளில் இருந்தும் பாதுகாப்பு வழங்குகிறது. 


ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள N95 முகக் கவசத்தில் காணப்படும் வடிகட்டுவதற்காக உள்ள அடுக்குகள் இரசாயண செயற்பாடுகளால் பாதிப்படைய கூடியவை. ஆனால் இந்த முக கவசத்தின் அடுக்குகள் பாலிபுரப்பலின் நார்கள் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதால் அவை வைரஸ் மற்றும் பாக்டீரியாவின் செல் சுவரை பாதிப்படையச் செய்து அவற்றை அழிக்கவும் செய்கின்றது.


புதிய வகையான முகக் கவசம் கண்டுபிடிப்பு! புதிய வகையான முகக் கவசம் கண்டுபிடிப்பு! Reviewed by Irumbu Thirai News on July 07, 2022 Rating: 5
Powered by Blogger.