Results for Indian News

அம்பானியை பின்தள்ளி ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான நபர்!

February 09, 2022

ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராக இதுவரை இருந்துவந்த இந்தியாவைச் சேர்ந்த முகேஷ் அம்பானியை பின்தள்ளி அதே நாட்டைச் சேர்ந்த கௌதம் அதானி என்பவர்  அந்த இடத்திற்கு முன்னேறியுள்ளார். 
 

Bloomberg தரப்படுத்தலில் அடிப்படையில் ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் கவுதம் அதானி முதல் இடத்தை பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு 88.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக கணக்கிடப்பட்டுள்ளது.

 

இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்ட ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 87.9 பில்லியன் டொலர்களாகும்.

 

துறைமுகம், பசுமை எரிசக்தி, சுரங்கம் உட்பட பல வர்த்தக குழுமங்களை வைத்துள்ள அதானி, கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்திலும் முதலீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

அம்பானியை பின்தள்ளி ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான நபர்! அம்பானியை பின்தள்ளி ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான நபர்! Reviewed by Irumbu Thirai News on February 09, 2022 Rating: 5

சிவாஜிக்கு Google வழங்கிய கௌரவம்!

October 01, 2021
 

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93வது பிறந்த தினம் இன்றாகும். அவர் மறைந்தாலும் இந்திய சினிமா வரலாற்றில் அவர் தவிர்க்க முடியாத ஒரு ஆளுமை ஆகும். 
 
அவர் தொடர்பான சில முக்கிய குறிப்புகளை கீழே தருகிறோம். 
 
அவர் முதன் முதலில் நடித்த மேடை நாடகம் ராமாயணம். அதில் சீதையாக நடித்தார். 
 
அவரது முதல் திரைப்படம் பராசக்தி. 1952இல் வெளிவந்தது. 
 
சிவாஜி மற்றும் எம்ஜிஆர் இணைந்து நடித்த ஒரே திரைப்படம் கூண்டுக்கிளி. 
 
1962 இல் அமெரிக்காவுக்கு சிறப்பு விருந்தினராக சென்ற போது நயாகரா மாநகரத்தின் ஒரு நாள் மேயராக அறிவிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார். 
 
எகிப்து ஜனாதிபதி கமால் அப்துல் நாசர் இந்தியாவிற்கு வருகை தந்தபோது அவரை வரவேற்று உபசரிக்க இந்திய அரசால் அனுமதிக்கப்பட்ட ஒரே நபர் சிவாஜி. 
 
தமிழக முன்னேற்ற முன்னணி' என்ற கட்சியை சிவாஜி ஆரம்பித்தார். ஆனால் சினிமாவில் வெற்றி கண்ட இவருக்கு அரசியலில் வெற்றி காண முடியவில்லை. 
 
கலைமாமணி விருது, பத்ம பூஷன், பத்ம விபூஷன், செவாலியே விருது, தாதா சாஹிப் பால்கே விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார் சிவாஜி கணேசன். 
 
சிவாஜி நடிக்க விரும்பிய கதாப்பாத்திரம் எது தெரியுமா? இவருக்கு 'சிவாஜி' என்ற பெயர் கொடுத்த தந்தை பெரியாருடைய வேடம்தான் அது. ஆனால், இறுதிவரை அது நடக்கவில்லை. 
 
சென்னையில் இவரது பெயரில் சாலை, அவருக்கு மணிமண்டபம், சிலை ஆகியவை உண்டு. 
 
இந்த நிலையில் இவரது 93வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரை கௌரவிக்கும் முகமாக Google நிறுவனம் டூடுல் (Doodle) வெளியிட்டுள்ளது. இதனை வரைந்தவர் நூபூர் ராஜேஷ் சோக்ஸி என்பவர்.
சிவாஜிக்கு Google வழங்கிய கௌரவம்! சிவாஜிக்கு Google வழங்கிய கௌரவம்! Reviewed by Irumbu Thirai News on October 01, 2021 Rating: 5

தனது பெற்றோருக்கு எதிராக வழக்கு தொடர்ந்த நடிகர் விஜய்! பின்னணி என்ன?

September 19, 2021
 

தென்னிந்திய நடிகர் விஜய் தனது தாய் தந்தை உட்பட 11 பேருக்கு எதிராக சென்னை சிவில் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. 
 
தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 09 மாவட்டங்களுக்கான உள்ளூராட்சி தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 6ஆம் 9ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. 
 
இதில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்களும் 
 
போட்டியிடவுள்ளனர். நீண்ட ஆலோசனைகளுக்கு பின் அதற்கான அனுமதியை விஜய் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
 
அதாவது இந்த தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடவும் தனது பெயரையும் விஜய் மக்கள் மன்ற இயக்கத்தின் கொடியையும் பயன்படுத்தி அரசியலில் ஈடுபட விஜய் அனுமதி அளித்துள்ளார். 
 
விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்பதே எங்கள் ஆசை. ஆனால் அவர் இதுவரை வரவில்லை. எவ்வாறாயினும் அவரது பெயரைச் சொல்லி அரசியலில் ஈடுபட அனுமதி கேட்டோம். அதற்கு அனுமதி தந்தார் என்று விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளில் ஒருவரான விஜய் அன்பன் தெரிவித்துள்ளார். 
 
இதேவேளை நடிகர் விஜய் தனது தாய் மற்றும் தந்தை உட்பட 11 பேருக்கு எதிராக தொடர்ந்த வழக்கு இம்மாதம் 27ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
 
 
ஏன் வழக்கு தொடர்ந்தார்? 
 
இயக்குநரும் நடிகர் விஜயின் தந்தையுமான எஸ். ஏ. சந்திரசேகர் விஜய் ரசிகர்களை இணைத்து "அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்" என்ற கட்சி தொடங்கப்பட உள்ளதாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிவித்தார். மேலும் இந்த கட்சியை முறைப்படி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய இருப்பதாகவும் அறிவித்தார். 
 
இதற்கு கடுமையான ஆட்சேபணை தெரிவித்த நடிகர் விஜய். தனது பெயரில் கட்சி தொடங்கப்படுவதில் தனக்கு விருப்பமில்லை எனக்கூறி தனது பெற்றோர் உட்பட 11 பேருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கின் விசாரணையே இம்மாதம் 27 ஆம் தேதி வருகிறது.
தனது பெற்றோருக்கு எதிராக வழக்கு தொடர்ந்த நடிகர் விஜய்! பின்னணி என்ன? தனது பெற்றோருக்கு எதிராக வழக்கு தொடர்ந்த நடிகர் விஜய்! பின்னணி என்ன? Reviewed by Irumbu Thirai News on September 19, 2021 Rating: 5

தோனியைத் தொடர்ந்து ரய்னா வெளியிட்ட அறிவிப்பு..

August 16, 2020


"உங்களுடன் (தோனி) விளையாடுவதை தவிர வேறு என்ன விரும்பினேன். நெஞ்சம் முழுவதும் பெருமையுடன் நான் உங்களுடன் இணைகிறேன். நன்றி இந்தியா. ஜெய்ஹிந்த்." என தனது இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டு இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தனது ஓய்வை அறிவித்துள்ளார். 
33 வயதான ரெய்னா கடந்த 2005ஆம் ஆண்டில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் முதல்முறையாக இந்தியாவுக்காக விளையாட தொடங்கினார். எம்.எஸ் தோனியை தொடர்ந்து இவரும் தற்போது தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

தோனியைத் தொடர்ந்து ரய்னா வெளியிட்ட அறிவிப்பு.. தோனியைத் தொடர்ந்து ரய்னா வெளியிட்ட அறிவிப்பு.. Reviewed by irumbuthirai on August 16, 2020 Rating: 5

விடைபெறும் M.S. Dhoni.. கிரிக்கெற்றை இப்படித்தான் ஆரம்பித்தார்..

August 16, 2020


"உங்கள் அனைவரின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. இன்று 19.29 மணியிலிருந்து நான் ஓய்வு பெற்றதாக கருதிக் கொள்ளுங்கள்" என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டு ஓய்வை அறிவித்தார் மஹேந்திரசிங் தோனி. 
கடந்த 2014ஆம் ஆண்டு இறுதியிலேயே தோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக ஓய்வு பெற்றுள்ளார். 
 தோனி இறுதியாக விளையாடிய சர்வதேச கிரிக்கெட் போட்டி 2019 நடந்த உலகக் கிண்ண போட்டியில் நியூசிலாந்து அணியுடன் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியேயாகும். 
1981 ஜூலை 7ஆம் தேதி ராஞ்சியில் பிறந்த தோனி இளம் வயதில் அதிகம் விளையாடியது கால்பந்து மற்றும் பேட்மின்டன் ஆகியவையே. தோனி படித்த பாடசாலையின் கிரிக்கெட் அணியில் வழக்கமாக விளையாடும் விக்கெட் கீப்பர் ஒரு போட்டியில் விளையாட முடியாத சூழல் ஏற்பட அந்த போட்டியில் தோனி விக்கெட் கீப்பராக விளையாடினார் அப்படி ஆரம்பித்ததே அவரது கிரிக்கெட் வாழ்க்கை. 
2004 டிசம்பரில் தான் இந்தியாவுக்காக தனது முதல் சர்வதேச போட்டியில் விளையாடினார். 2007 t20 மற்றும் 2011 ஐசிசி உலக கோப்பை தோனியின் தலைமையில் இந்தியா வென்றுள்ளது. 2013 ஐசிசி சம்பியன்ஸ் கோப்பையையும் தோனி தலைமையிலான இந்திய அணி வென்றது. 2010 மற்றும் 2016 ஆகிய இரு முறைகள் இந்தியா ஆசிய கோப்பையை வென்றதும் இவரது தலைமையில்தான். 
அதேபோன்று 2010 2011 மற்றும் 2018 ஆகிய மூன்று ஐபிஎல் தொடர்களில் இவரது தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றது குறிப்பிடத்தக்கது.

விடைபெறும் M.S. Dhoni.. கிரிக்கெற்றை இப்படித்தான் ஆரம்பித்தார்.. விடைபெறும் M.S. Dhoni.. கிரிக்கெற்றை இப்படித்தான் ஆரம்பித்தார்.. Reviewed by irumbuthirai on August 16, 2020 Rating: 5

அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சனைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ராய்க்கும் கொரோனா தொற்றா?

July 12, 2020


பிரபல ஹிந்தி நடிகர் அமிதாப்பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆகியோர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பில் அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகியோர் தமது ட்விட்டர் செய்தியில் உறுதி செய்துள்ளனர். 
இதேவேளை பிந்திக் கிடைத்த தகவல்களின்படி அபிஷேக் பச்சனின் மனைவியான ஐஸ்வர்யா ராய்க்கும் மகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது என தெரிவிக்கப்படுகிறது. 
அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகியோரின் ட்விட்டர் செய்திகளை கீழே காணலாம். (ஐஸ்வர்யாராய் மற்றும் மகளுக்கு தொற்று உறுதிசெய்யப்பட முன் வெளியிடப்பட்ட ட்விட்டர் பதிவுகளே இவை)


அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சனைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ராய்க்கும் கொரோனா தொற்றா? அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சனைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ராய்க்கும் கொரோனா தொற்றா? Reviewed by irumbuthirai on July 12, 2020 Rating: 5

போட்டியின்றி தெரிவுசெய்யப்பட்ட இந்தியா...

June 19, 2020

ஐக்கிய நாடுகள் சபையில் பல்வேறு துணை அமைப்புகள் இருந்தாலும், பாதுகாப்பு பேரவை தான் மிகவும் சக்திவாய்ந்த அமைப்பாக கருதப்படுகிறது. இதில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா, சீனா ஆகிய ஐந்து நாடுகள் நிரந்தர உறுப்பினராக உள்ளன. 
இவை தவிர நிரந்தரமற்ற உறுப்பினர்களாக 10 நாடுகள் இருந்து வருகின்றன. இதற்கான உறுப்பினர் பதவி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் நிரப்பப்பட்டு வருகின்றன. 
அந்த வகையில், தற்போது காலியாக இருந்த 5 நாடுகளுக்கான உறுப்பினர் பதவியை நிரப்புவதற்கான தேர்தல் நேற்று முன்தினம் (17) நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆசிய -பசிபிக் பிராந்தியத்தில் இருந்து இந்தியா போட்டியிட்டது. வேறு எந்த நாடும் போட்டியிடாத நிலையில், இந்தியா போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 
எதிர்வரும் 2 ஆண்டுகளுக்கு இந்தியா ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமற்ற உறுப்பினராக இருக்கும். 193 உறுப்பினர்களை கொண்ட சபையில் 184 நாடுகள் இந்தியாவிற்கு ஆதரவாக வாக்களித்துள்ளன. எட்டாவது முறையாக ஐ.நா. பாதுகாப்பு பேரவையின் நிரந்தரமற்ற உறுப்பினராக இந்தியா தேர்வு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா உறுப்பினராக, உலக நாடுகள் வழங்கிய ஆதரவுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்து உள்ளார். உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்புக்கு உலக நாடுகளுடன் இணைந்து இந்தியா செயல்படும் என பிரதமர் மோடி கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அ.த.தி.

போட்டியின்றி தெரிவுசெய்யப்பட்ட இந்தியா... போட்டியின்றி தெரிவுசெய்யப்பட்ட இந்தியா... Reviewed by irumbuthirai on June 19, 2020 Rating: 5
Powered by Blogger.