Results for Technology

Mobile App for Teachers

February 08, 2024

 
NEMIS – THRM App இலங்கையில் உள்ள ஆசிரியர்களுக்கு தேசிய கல்வி முகாமைத்துவ முறைமையின் (National Education Management System - NEMIS) கீழ் ஆசிரியர் மனித வள முகாமைத்துவ (Teacher Human Resource Management - THRM) அமைப்பு என பெயரிடப்பட்ட தகவல் அமைப்பை அமைப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. 
 
அரசாங்கப் பாடசாலைகள், விசேட கல்விப் பாடசாலைகள், தனியார் பாடசாலைகள் மற்றும் பிரிவேனாக்களில் இலங்கை ஆசிரியர்களுக்கு சேவையை வழங்குவதே இந்த முறைமையாகும். 
 
ஒவ்வொரு ஆசிரியரின் தரவு உள்ளீடு ஆசிரியர்களின் தனிப்பட்ட கோப்புகளின் தகவல்களின் அடிப்படையில் ஆசிரியர் பணியாற்றும் அந்தந்த வலயக் கல்வி அலுவலகத்தால் செய்யப்படுகிறது. பணியாளர் தர அதிகாரியின் மேற்பார்வையின் கீழ், வலயங்களில் உள்ள ஆசிரியர்களின் தனிப்பட்ட கோப்புகளை கையாளும் அந்தந்த அதிகாரிகளால் பதிவேற்றம் செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்ட தரவாகும். 
 
பயன்பாட்டில் காட்டப்பட்டுள்ள எந்த தகவலும் துல்லியமாக இல்லாவிட்டால் அல்லது புதுப்பிக்கப்பட வேண்டியிருந்தால், இந்த பயன்பாட்டில் உள்ள ஒருங்கிணைப்பாளர்கள் பட்டியலில் உள்ள விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ள அந்தந்த வலய NEMIS ஒருங்கிணைப்பாளரைத் தொடர்பு கொள்ளவும். கணினியில் புதுப்பித்த தகவலை வைத்திருப்பதும் ஆசிரியரின் பொறுப்பாகும்.

Click the link below for App.
 
 
 
Previous:

Mobile App for Teachers Mobile App for Teachers Reviewed by Irumbu Thirai News on February 08, 2024 Rating: 5

Samsung இன் 12 வருட ஒட்டத்தை பின் தள்ளிய Apple!

January 18, 2024


உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் விற்பனையாளரான Samsung நிறுவனத்தை Apple பின்னுக்குத் தள்ளியுள்ளது. 

அமெரிக்காவின் iPhone அதன் தென் கொரிய போட்டியாளரான Samsung இன் 12 வருட சாதனையை முறியடித்து உலகில் அதிக விற்பனையாகும் Smart Phone என்ற நாமத்தை பெற்றுள்ளது.

இந்த வாரம் வெளியிடப்பட்ட இன்டர்நேஷனல் டேட்டா கார்ப்பரேஷனின் தரவுகளின்படி, தென் கொரிய நிறுவனத்தின் 226.6 மில்லியன் யூனிட்களுடன் ஒப்பிடும்போது, ஐபோன் 2023 இல் 234.6 மில்லியன் யூனிட்டுகளுடன் முன்னணியில் காணப்படுகிறது. 

Samsung  19.4% சந்தைப் பங்கையும் iPhone 20.1% சந்தைப் பங்கையும் பெற்றுள்ளது என்று IDC தெரிவித்துள்ளது. 

Samsung இன் அண்மைய வெளியீடுகள் தொடர்பான அறிமுகத்திற்கு முன்னரே இந்த தரவுகள் வெளியானமை குறிப்பிடத்தக்கது.
 
 
Previous:

Samsung இன் 12 வருட ஒட்டத்தை பின் தள்ளிய Apple! Samsung இன் 12 வருட ஒட்டத்தை பின் தள்ளிய Apple! Reviewed by Irumbu Thirai News on January 18, 2024 Rating: 5

சந்திரயான்-3 மூலம் வரலாற்றில் இடம்பிடித்த இந்தியா! கடந்து வந்த பாதையும் இனி செய்யப்போகும் வேலையும்!

August 23, 2023


சந்திராயன் - 3 மூலம் வரலாற்றில் இடம்பிடித்துள்ளது இந்தியா. நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) அனுப்பியுள்ள சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் இன்று (23) 40 நாட்கள் பயணத்தின் பின்னர் மாலை 6.04 மணிக்கு நிலவின் தரைப் பரப்பில் விக்ரம் லேண்டர் தரையிறங்கியது.

சந்திரயான்-3 விண்கலத்திலிருந்து பிரிந்த விக்ரம் லேண்டரின் சுற்றுவட்டப்பாதையின் உயரம் படிப்படியாக குறைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தரையிறங்குவதற்கான கட்டளை பிறப்பிக்கப்பட்டதையடுத்து விக்ரம் லேண்டர் இன்று மாலை 6.04 க்கு வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது 

சந்திராயன்-3 ஆனது தனது நோக்கத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தமையின் ஊடாக, அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவிற்கு பின்னர், நிலவு தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு சாதனைகளைப் படைத்த உலகின் 4வது நாடாக இந்தியா பதிவாகியுள்ளது. 

தென் துருவத்தை தொட்ட முதல் நாடு:
நிலவின் தென் துருவத்தைத் தொட்ட முதல் நாடு என்ற அழியாத சாதனையையும் இந்தியா படைத்துள்ளது. இது தொடர்பான காட்சிகள் அனைத்தும் பொதுமக்களுக்காக இஸ்ரோவின் உத்தியோகபூர்வ YOUTUBE தளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டமை சிறப்பம்சமாகும்.  

சந்திரயான் 3 கடந்து வந்த பாதை
இந்தியாவின் முதல் நிலவு திட்டமான சந்திரயான் -1 கடந்த 2008 இல் 386 கோடி இந்திய ரூபா செலவில் நிறைவேற்றப்பட்டது. சந்திரயான் - 2 திட்டத்திற்கு 978 கோடி இந்திய ரூபா செலவிடப்பட்டது. சந்திரயான்-3 திட்டத்திற்கான செலவு 615 கோடி இந்திய ரூபா. 

சந்திரயான் -3 விண்கலத்தை சுமந்துகொண்டு LVM3 M4 ஏவுகணை கடந்த ஜூலை மாதம் 14 ஆம் திகதி நண்பகல் 2:35 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. 

பின்னர், சந்திரயான்-3 விண்கலத்தின் பாதை உயரத்தை உயர்த்தும் (Orbit Raising) நடவடிக்கை 5 முறை மேற்கொள்ளப்பட்டது. புவியின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றிவந்த சந்திரயான்-3 விண்கலம் திட்டமிட்டப்படி ஆகஸ்ட் 1ஆம் திகதி நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 1 மணி இடையிலான நேரத்தில் நிலவை நோக்கிய பயணத்தை தொடங்கியது. 

 ஆகஸ்ட் 17 ஆம் திகதி சந்திரயான்-3 உந்து சக்தி கலனில் இருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிந்தது. 

 ஆகஸ்ட் 23: விக்ரம் லேண்டர் நிலவின் நிலப்பரப்பில் தரையிறங்கியது 


 விக்ரம் லேண்டர் நிலவில் என்ன செய்யப் போகிறது? 
 நிலவின் தென் துருவப் பகுதியில் 70 டிகிரி அட்சரேகையில் லேண்டர் தரையிறங்கி, அங்கு சந்திரயான்-3 தனது ஆய்வுகளைச் செய்யவுள்ளது. 

 நிலவில் வெப்பம் அதிகமாக இருக்கும் மண் பகுதியில் நடக்கும் மாற்றங்களை அறிவது, அங்குள்ள பொருட்கள் என்ன நிலையில் உள்ளன, அங்குள்ள வெப்பம் தாங்கும் தன்மை கொண்டதா போன்ற பல தரவுகளை சந்திரயான்-3 கண்டறியவுள்ளது. 

 தகவல்களை கண்டறிவது ஆகிய பணிகள் மேற்கொள்ளபடவுள்ளன. இதேபோல், பூமியைப் போலவே நிலாவிலும் நில அதிர்வுகள் உள்ளனவா, இப்போது இல்லையென்றால் முன்பு இருந்தனவா என்பன போன்ற தரவுகள் சேகரிக்கப்படவுள்ளன. 

 விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கியதும், அதன் உள்ளே இருக்கும் ரோவர் (Rover) எனப்படும் ஊர்திக்கலன் வெளியே வரும். 

இந்த ஊர்திக்கலன் நிலவின் மண் மாதிரிகளை ஆய்வு செய்து, தரைப்பரப்பின் தன்மை என்ன, வெப்பம் எந்த அளவிற்கு உள்ளது, தண்ணீர் உள்ளதா என்பன போன்ற தகவல்களை சேகரித்து அனுப்பும்.
Source: newsfirst.
சந்திரயான்-3 மூலம் வரலாற்றில் இடம்பிடித்த இந்தியா! கடந்து வந்த பாதையும் இனி செய்யப்போகும் வேலையும்! சந்திரயான்-3 மூலம் வரலாற்றில் இடம்பிடித்த இந்தியா! கடந்து வந்த பாதையும் இனி செய்யப்போகும் வேலையும்! Reviewed by Irumbu Thirai News on August 23, 2023 Rating: 5

குரல் பதிவைக் கொண்டு கொரோனாவை கண்டறியும் செயலி (App)

September 15, 2022

உலக நாடுகளை பாதித்து வரும் கொரோனா(Covid-19) நோய்த் தொற்றை எளிமையாக கண்டறிய தொலைபேசி செயலி (Mobile App) ஒன்றை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். 
 
செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence) மூலம் செயல்படும் இந்த செயலியானது நோயாளிகளின் குரல் பதிவு மூலம் தொற்றை உறுதி செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதாவது குறித்த நபருடைய மருத்துவ குணங்கள், அவரது புகைபிடிக்கும் நிலை போன்ற சில அடிப்படை தகவல்களை அதில் பதிவு செய்து, பின்னர் அவர்களின் சில சுவாச ஒலிகளையும் அதில் பதிவு செய்ய வேண்டும். 

அதன்படி 03 முறை இருமல், 03 - 05 முறை வாய் வழியாக ஆழமாக சுவாசித்தல் மற்றும் திரையில் ஒரு சிறிய வாக்கியத்தை 03 முறை வாசிப்பது என்பன இதில் அடங்கும். 

இந்த விடயங்களைக் கொண்டு குறிப்பிட்ட அந்த நபருக்கு தொற்று இருக்கிறதா? என்பதை துல்லியமாக இந்த செயலி தெரிவிக்கும் என நெதர்லாந்தை சேர்ந்த ஆய்வாளர் தெரிவித்துள்ளார். 

இந்த செயலியானது 89% அளவுக்கு துல்லியமாக முடிவை காட்டும் என தெரிவித்த விஞ்ஞானிகள், ஏனைய பரிசோதனை முறைகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் மலிவானது என்றும், குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் இவற்றை எளிதாக பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
Source: அரசாங்க தகவல் திணைக்களம்.
குரல் பதிவைக் கொண்டு கொரோனாவை கண்டறியும் செயலி (App) குரல் பதிவைக் கொண்டு கொரோனாவை கண்டறியும் செயலி (App) Reviewed by Irumbu Thirai News on September 15, 2022 Rating: 5

ஃபேஸ்புக்கில் இடம்பெற்ற மற்றுமொரு மாற்றம்!

November 03, 2021

பேஸ்புக்கானது அதன் கூட்டு நிறுவனத்தின் பெயரை META என்று அண்மையில் மாற்றியது. தற்போது பேஸ்புக்கில் மற்றுமொரு மாற்றம் இடம்பெற்றுள்ளது. 
 
அதாவது  பேஸ்புக்கில் உள்ள Facial Recognition என்ற வசதியை தடை செய்வதற்கு META நிறுவனம் தீர்மானித்துள்ளது. 

META வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

FB யில் உள்ள Facial Recognition தொழில்நுட்பம் காரணமாக பயனர்களின் பிரத்தியேக பாதுகாப்பு தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்ததோடு குறித்த நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் அண்மைக்காலமாக எடுக்கப்பட்டிருந்தன.   

எனவே குறித்த குற்றச்சாட்டுகளுக்கு தீர்வு காணும் நோக்கிலேயே இந்த வசதி நீக்கப்படுவதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக்கில் இடம்பெற்ற மற்றுமொரு மாற்றம்!  ஃபேஸ்புக்கில் இடம்பெற்ற மற்றுமொரு மாற்றம்! Reviewed by Irumbu Thirai News on November 03, 2021 Rating: 5

நாடளாவிய சேவை உத்தியோகத்தர்களுக்கான இணைய வழி தகவல் தொழில்நுட்பத் தளம் (Online IT system) ஒன்றை அறிமுகப்படுத்தல் - 2021

October 10, 2021
 

தற்போதைய கொவிட் 19 தொற்றுநோய் நிலைமைக்கு மத்தியில் நாடளாவிய சேவைகளிலுள்ள உத்தியோகத்தர்களின் நிர்வாக செயற்பாடுகளை மிகவும் சரியாகவும் வினைத்திறனுடனும் மேற்கொள்வதற்காக புதிய இணையவழி தகவல் தொழில்நுட்ப தொகுதி (Online IT system) ஒன்றை பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. 
 
இத்திட்டத்தின் முதல் கட்டமாக, 

இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தர்களின் நிர்வாக செயற்பாடுகளுக்கான இணைய வழித் தகவல் தொழில்நுட்ப முறையொன்றை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 
 
இதுதொடர்பாக 2021-10-07 திகதி இடப்பட்டு அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிவித்தலை கீழே காணலாம்.

நாடளாவிய சேவை உத்தியோகத்தர்களுக்கான இணைய வழி தகவல் தொழில்நுட்பத் தளம் (Online IT system) ஒன்றை அறிமுகப்படுத்தல் - 2021 நாடளாவிய சேவை உத்தியோகத்தர்களுக்கான இணைய வழி தகவல் தொழில்நுட்பத் தளம் (Online IT system) ஒன்றை அறிமுகப்படுத்தல் - 2021 Reviewed by Irumbu Thirai News on October 10, 2021 Rating: 5

இன்றுடன் Google ற்கு 23 வயது: Google பற்றி 23 சுவாரஸ்ய தகவல்கள்...

September 27, 2021
 

கூகுள் தொடங்கி இன்றுடன்(27/9/2021) 23 வருடங்களாகின்றன. எனவே இதை முன்னிட்டு கூகுள் தொடர்பாக 23 சுவாரஸ்ய தகவல்களை இங்கே பகிர்ந்து கொள்கிறோம். 

(1) அதிகம் தேடப்படும் மற்றும் பார்க்கப்படும் இணையதளம் இதுவாகும். 
 
(2) கல்லூரி மாணவர்கள் இருவரால் உருவாக்கப்பட்டதே Google. லேரி பேஜ் மற்றும் செர்கே ப்ரின் என்பவர்களாலேயே உருவாக்கப்பட்டது. இணையதளங்களை தரவரிசைப்படுத்தும் ஓர் தளமாகவே இதை உருவாக்க விரும்பினர். அதாவது ஒரு குறிப்பிட்ட இணையதளத்தின் இணைப்பை எத்தனை இணைய தளங்கள் பகிர்கின்றன என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்த தரவரிசை உருவாக்கப்பட்டது. 
 
(3) Google என்ற சொல் கூகொல் (Googol) என்ற சொல்லிலிருந்து வந்தது. அதாவது ஒன்றுக்கு பக்கத்தில் 100 பூச்சியங்களைப் போடுவதால் வரும் எண்ணைக் குறிக்கவே இந்த கூகொல் என்ற சொல் பயன்படுகிறது. எவ்வளவு தகவல்களை இதில் தேட விரும்புகிறோம் என்பதை குறிக்கவே இந்த வார்த்தையைப் பயன்படுத்தினர். 
 
(4) 1998 இல் முதல் கூகுள் டூடுல் உருவாக்கப்பட்டது.'burning man' என்ற நிகழ்வுக்காக இது உருவாக்கப்பட்டது. 
 
(5) முதல் வீடியோ டூடுல் ஜோன் லெனனின் 70 வது பிறந்த நாளுக்காக உருவாக்கப்பட்டது. 
 
(6) கூகுளின் தலைமை அலுவலகம் கலிபோர்னியாவில் உள்ள சிலிகான் வேலியில் அமைந்துள்ளது. இந்த தலைமை அலுவலகம் கூகுள் ப்ளக்ஸ் என அழைக்கப்படுகிறது. 

(7) தலைமை அலுவலகத்தில் டி-ரெக்ஸ் டைனோசரின் பெரிய சிலை காணப்படுகிறது. இந்த சிலை அடிக்கடி பிளமிங்கோ பறவையால் முழுமையாக மறைக்கப்படும். கூகுள் எப்போதுமே அழிந்து விடக்கூடாது என்பதை ஊழியர்களுக்கு உணர்த்துவதற்காகவே இவ்வாறு செய்யப்படுவதாக ஒரு வதந்தி இருக்கிறது. 
 
(8) கூகுளின் முதல் சேர்வர் (Server) லெகோ என்ற பிளாஸ்டிக் பொம்மை பாகங்களால் தயாரிக்கப்பட்ட பெட்டியில் தான் அமைந்திருந்தது. 

(9) கூகுளின் தலைமை அலுவலகம் மிகவும் பசுமையாக இருக்கும். அங்குள்ள புற்களை சீர் செய்வதற்கு ஊழியர்களுக்கு பதிலாக ஆடுகளே இருக்கும். 
 
(10) தமது செல்லப் பிராணியான நாய்களை கொண்டு வருவதற்கு Google இன் ஊழியர்களுக்கு அனுமதி உண்டு. 
 
(11) கூகுளில் இமேஜ் தேடுதல் முறை 2001 இல் ஆரம்பிக்கப்பட்டது. 
 
(12) Google தனது இமெயில் சேவையை Gmail என்ற பெயரில் 1-4-2004 இல் ஆரம்பித்தது. 
(13) கூகுள் என்ற வார்த்தை 2006 இல் முதன்முதல் அகராதியில் சேர்க்கப்பட்டது. அதன் பொருளாக "கூகுளை பயன்படுத்தி தகவலைத் தேடிப் பெறுதல்" என குறிப்பிடப்பட்டிருந்தது. 
 
(14) 2006இல் 1.5 பில்லியன் டொலருக்கு யூடியூப் ஐ கூகுள் வாங்கியது. தற்போது இதில் ஒவ்வொரு நிமிடத்திற்கும் 400 மணித்தியால அளவிற்கு வீடியோக்கள் பதிவேற்றப்படுகின்றன. 
 
(15) ஒவ்வொரு நாளும் வேறு எதிலும் தேவைப்படாத 15%மான தேடல்கள் கூகுளில் மாத்திரமே தேடப்படுகின்றன. 
 
(16) 2018 ஏப்ரல் தொடக்கம் 100 சதவீத புதுப்பிக்கத்தக்க ஆற்றலை மட்டும் பயன்படுத்தும் நிறுவனமாக கூகுள் மாறியது. அதாவது 1KW மின்சாரத்தை பயன்படுத்தினால் அது முழுமையாக புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் உற்பத்தி செய்யப்பட்டதாக இருக்கும். 
 
(17) கூகுளிற்கு 6 பிறந்த நாட்கள். ஆனால் செப்டம்பர் 27 ஐயே இது தேர்ந்தெடுத்தது. 
 
(18) கூகுள் ஹோம் பேஜ் (Home Page) குறைந்தபட்சம் 80 மொழிகளில் வழங்கப்படுகின்றது. 

(19) நமது தேடலின் முடிவை தருவதற்கான Google இன் கணிப்பு ஆற்றலின் அளவு அப்பலோ 11 விண்கலம் மூலம் விண்வெளி வீரர்களை நிலவிற்கு அனுப்புவதற்கு தேவைப்பட்ட கணிப்பு ஆற்றலின் அளவுக்கு சமம் என்பது குறிப்பிடத்தக்கது.  
 
(20) கூகுளை உருவாக்கியவர்களில் ஒருவரான லாரி, 1995இல் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தபோது, அவருக்கு அந்த பல்கலைக்கழகத்தை சுற்றி காட்டுவதற்காக செர்கே கேட்டுக் கொள்ளப்பட்டார். பின்னர் இருவரும் நண்பர்களாகி "Backrub" என்ற தேடுபொறியை உருவாக்கினர். பின்னர் Backrub - Googol என மாற்றினர். (Googol என்பது 1 ஐ தொடர்ந்து 100 பூச்சியங்கள் இருப்பதற்கு கணிதத்தில் பயன்படுத்தப்படும் சொல்). ஆனால் நடந்தது என்னவென்றால் லாரி பேஜ் அதன் எழுத்தை தவறாக எழுதியதால் உருவானதே கூகுள் (Google). பின்நாளில் அதையே பெயராக வைத்துவிட்டனர். 
 
(21) கூகுள் நிவ்ஸ் செப்டம்பர் 2002 இல் ஆரம்பிக்கப்பட்டது. 

(22) கூகுள் அனலிட்டிக்ஸ் நவம்பர் 2005 இல் தொடங்கப்பட்டது, இது வலைத்தள ட்ராஃபிக்கை (Website Traffic)  கண்காணித்து அறிக்கை செய்கிறது.
 
(23) Google தற்போது வெறுமனே ஒரு தேடுபொறியாக மட்டும் கருதப்படுவதில்லை. செயற்கை நுண்ணறிவு, ஓட்டுனர்கள் இல்லாத கார்கள், புதிய விளையாட்டு தளம் போன்ற பல்வேறு தொழில்நுட்ப அம்சங்களை உள்ளடக்கிய எதிர்கால வளர்ச்சியின் உதாரணமாகவே கருதப்படுகிறது. 

இன்றுடன் Google ற்கு 23 வயது: Google பற்றி 23 சுவாரஸ்ய தகவல்கள்... இன்றுடன் Google ற்கு 23 வயது: Google பற்றி 23 சுவாரஸ்ய தகவல்கள்... Reviewed by Irumbu Thirai News on September 27, 2021 Rating: 5
Powered by Blogger.