Results for Viral News

US Green Card Winners - 2024

May 06, 2023


2024 ல் அமெரிக்க நிரந்தர வதிவிடத்தை வழங்க கூடிய கிரீன் கார்ட் (Green Card) முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. நீங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளீர்களா என்பதை பின்வரும் முறையில் அறிந்து கொள்ளலாம். 

குறிப்பு: அதிக நெரிசல் காரணமாக பெறுபேறுகளை பார்வையிடுவதில் தடங்கள் ஏற்படலாம். தொடர்ந்து முயற்சி செய்க. மேலும் உத்தியோகபூர்வ இணையதள முகவரி இல்லாத வேறு இணையதள லிங்குகள் மூலம் பெறுபேறுகளை அறிய முயற்சிப்பதை தவிர்க்கவும். 6-5-2023 EDT நேரம் நண்பகல் 12 மணி முதல் பெறுபேறுகளை பார்வையிடலாம். 

2024 Green Card Results for US Permanent Residency Released. You can know whether you have been selected in the following way. 

Note: Due to heavy traffic there may be lags in viewing the results. Keep trying. Also avoid trying to get results through other website links which do not have official website address. Results can be viewed from 12 noon EDT on 6-5-2023. 


(1) Click the link below & go check status / கீழுள்ள லிங்கில் சென்று check status என்பதை கிளிக் செய்க. 


(2) Enter the particular details & click submit / உரிய தகவல்களை உள்ளீடு செய்து submit என்பதை கிளிக் செய்க.



Additional information:
Click the link below for green card winners 2017 - 2023.

US Green Card Winners - 2024 US Green Card Winners - 2024  Reviewed by Irumbu Thirai News on May 06, 2023 Rating: 5

பல்கலைக்கழகங்களிற்கு தெரிவு செய்யப்பட்டோர் கற்கைநெறிக்காக இணைய வழியில் பதிவு செய்தல் - 2020/ 2021

November 27, 2021

University Registrations 2020/2021 
 
பல்கலைக்கழகங்களிற்கு தெரிவு செய்யப்பட்டோர் கற்கைநெறிக்காக இணைய வழியில் (Online) பதிவு செய்தல் தொடர்பான நடைமுறையை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. 
 

 
 
பதிவிற்கான இறுதித் தினம்: 10-12-2021. 
 
 
கற்கைநெறிக்காக பதிவு செய்ய கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
தெரிவுக் கடிதத்தை பதிவிறக்கம் செய்யவும் பதிவு நடைமுறைளைத் தொடரவும் கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
கற்கைநெறிக்கு இணைய வழியில் பதிவு செய்யவும் தேர்வு கடிதத்தை பதிவிறக்கம் செய்யவும் பின்பற்றவேண்டிய நடைமுறைகளைக் கீழே காணலாம்.

 
 
 
 
 
 
 
 
பல்கலைக்கழகங்களிற்கு தெரிவு செய்யப்பட்டோர் கற்கைநெறிக்காக இணைய வழியில் பதிவு செய்தல் - 2020/ 2021 பல்கலைக்கழகங்களிற்கு தெரிவு செய்யப்பட்டோர் கற்கைநெறிக்காக இணைய வழியில் பதிவு செய்தல் - 2020/ 2021 Reviewed by Irumbu Thirai News on November 27, 2021 Rating: 5

அரச ஊழியர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களும் அதற்கான தீர்வுகளும் - பாகம் 05

September 26, 2021
 

தாபன விதிக்கோவை மற்றும் அரசாங்க நிர்வாக சுற்றறிக்கைகளில் நேரடியாக உள்ளடக்கப்படாத விடயங்கள் தொடர்பில் அரசாங்க ஊழியர்களுக்கு ஏற்படும் சந்தேகத்திற்கான தீர்வுகள் இங்கே வழங்கப்படுகின்றன. இவை தாபனப் பணிப்பாளரினால் வழங்கப்பட்ட பதில்களாகும். 
 
இவ்வாறு அரச நிறுவன தலைவர்களால் அடிக்கடி வினவப்பட்ட விடயங்களுக்கான பதில்களை கட்டங்கட்டமாக இங்கே தருகிறோம். 

குறிப்பு: தொடர்புடைய சுற்றறிக்கைகள் வர்த்தமானி என்பன இணைக்கப்பட்டுள்ளன.

பாகம் - 05

 
(21) மத்திய அரசின் உத்தியோகத்தர்களின் பதவி உயர்வுகள் மற்றும் நியமனங்களை முற்தேதியிடல் தொடர்பாக எழும் பிரச்சினைகள் தொடர்பாக செயற்பட வேண்டியது எவ்வாறு? 
 
20.02.2009 ஆந் திகதிய 1589/30 என்னும் இலக்கமுடைய வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயற்பாட்டு நடைமுறை விதிகளுக்கு அவதானத்தைச் செலுத்தி குறித்த அறிவுரைகளை பொதுச் சேவைகள் ஆணைக்குழுவிடமிருந்து பெற்றுக் கொள்ளல் வேண்டும். 
 
குறித்த வர்த்தமானிகளைப் பார்வையிட... 
 
 
(22) 2005.07.15 ஆந் திகதிய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 20/94 (II) இன் ஏற்பாடுகளை, 31.12.1980 ஆந் திகதியின் பின்னர் அரச சேவையின் பொருட்டு சேர்த்துக் கொள்ளப்பட்ட உத்தியோகத்தர்களின் பொருட்டு ஏற்புடையதாக்கிக் கொள்ள முடியுமா? 
 
முடியாது. 
 
குறித்த சுற்றறிக்கையைப் பார்வையிட..
 
 
(23) அரச சேவையில் சகல பட்டதாரிகளையும் ஒரே சம்பளப் புள்ளியில் வைக்க முடியமா? 
 
ஒரே சம்பளப் புள்ளியில் அமைக்க முடியாது. சம்பளத்தினை தீர்மானிப்பது பதவியின் பொருட்டு என்பதுடன்; அப்பதவிகளின் உள்ள நபர்களின் தகைமைகளுக்கமைய மேற்கொள்ளப்படுவது இல்லை. 

 
(24) அரச சேவையில் ஓர் பதவியிலிருந்து அரச சேவையில் வேறொரு பதவியின் பொருட்டு நிரந்தரமாக விடுவிக்கப்பட்டுள்ள மத்திய அரசின் உத்தியோகத்தர் ஒருவருக்கு மீண்டும் முன்னைய பதவிக்கு வருதல் தொடர்பாக தற்போது நடைமுறையிலுள்ள ஏற்பாடுகள் என்ன? 
 
2009.02.20 ஆந் திகதிய 1589/30 என்னும் இலக்கமுடைய வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயற்பாட்டு நடைமுறைக் கோவையில் இதற்குரிய ஏற்பாடுகள் குறிப்பிடப்படவில்லை என்பதால் இது தொடர்பாக பொதுச் சேவைகள் ஆணைக் குழுவிடமிருந்து அறிவுரையினைப் பெற்றுக் கொள்ளல் வேண்டும். 
(குறிப்பு:- குறித்த வர்த்தமானி 21ஆவது வினாவுக்கான விடையில் இணைக்கப்பட்டுள்ளது. )
 
 
(25) தேர்தல் ஒன்றிற்காகப் போட்டியிடும் அரசியல் உரிமைகள் உடைத்தான உத்தியோகத்தரொருவர், அதன் பொருட்டு விடுமுறைக்காக விண்ணப்பிக்கும் போது, அவ்வருடத்தில் அவருக்குரிய அது வரையில் பெற்றுக் கொள்ளப்படாதுள்ள சாதாரண விடுமுறைகள் இருப்பின் அவற்றைப் பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்புக்கள் உள்ளதா? 
 
ஆம். அவ்வருடத்திற்குரிய அமைய விடுமுறைகளையும் உழைத்துக் கொண்டுள்ள ஓய்வு விடுமுறைகளையும் பெற்றுக் கொள்ள முடியும். 
 
 
(26) அரசியல் உரிமை உடைத்தான உத்தியோகத்தர் ஒருவர் உள்ளுராட்சி தேர்தலின் பொருட்டு போட்டியிட்டு வெற்றியீட்டி உறுப்பினர் பதவியின் பொருட்டு நியமிக்கப்பட்டவுடன் அவர் வகித்த பதவியிலிருந்து விலகுதல் வேண்டுமா? 
 
இல்லை. அவர் வகித்த பதவியில் இருந்தவாறே ஆகக் குறைந்தது மாதம் ஒன்றிற்கு 05 நாட்கள் குறித்த கூட்டங்களின் பொருட்டு கலந்து கொள்ள முடியும். (22.05.2007 ஆந் திகதிய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 13/2007). 
 
குறித்த சுற்றறிக்கையைப் பார்வையிட..
 
 
(27) அரசியல் உரிமையுடைத்தான உத்தியோகத்தர் ஒருவருக்கு உள்ளுராட்சி தேர்தலின் பொருட்டு போட்டியிட்டு வெற்றியீட்டி தலைவர் பதவியின் பொருட்டு நியமிக்கப்பட்டவுடன் அவர் வகித்த பதவியிலிருந்து விலகுதல் வேண்டுமா? 
 
இல்லை. 
அவருக்கு கீழ் குறிப்பிடப்பட்டுள்ள 02 அணுசரணைகளைப் பெற்றுக் கொள்ளலாம். 
 
(1) உள்ளுராட்சி நிறுவனத்தில் பதவி வகிக்கும் முழுமையான காலத்திற்கும் சம்பளமற்ற விடுமுறையினைப் பெற்றுக் கொள்ளல். 
 
(11) நிரந்தர பதவியில் உள்ள போதே மாதத்திற்கு ஆகக் குறைந்தது 07 நாட்கள் சம்பளத்துடனான விடுமுறைகளைப் பெற்றுக் கொண்டு கூட்டங்களின் பொருட்டு கலந்து கொள்ளலாம். 
 
 
 
(28) அரசியல் உரிமை உரித்துடைய உத்தியோகத்தரொருவர் மாகாண சபைத் தேர்தலின் பொருட்டு போட்டியிட்டு வெற்றியீட்டி உறுப்பினர் ஒருவராக நியமிக்கப்பட்டவுடன் அவர் வகித்த பதவியிலிருந்து விலகுதல் வேண்டுமா? 
 
இல்லை. 
கீழ் குறிப்பிடப்பட்டுள்ள 02 விருப்புக்களில் ஏதாவது ஒரு விருப்பினை அனுபவிக்கலாம். 
 
(1) மாகாண சபை உறுப்பினராக இருக்கும் வரை சம்பளமற்ற விடுமுறையில் முழு நேர அடிப்படையின் பேரில் விடுவித்தல். 
 
(11) 22.04.1991 ஆந் திகதிய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 1/89( I) இன் 02 வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளின் பேரில் ஓய்வு பெறல். 
 
 
(29) அரசியல் உரிமைகள் உரித்துடைய உத்தியோகத்தர் ஒருவர் பாராளுமன்றத் தேர்தலின் பொருட்டு போட்டியிட்டு வெற்றியீட்டி பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டால் அவர் வகித்த பதவியில் இருந்து விலகுதல் வேண்டுமா? 

ஆம். 
 
 
(30) அரசியல் உரிமையற்ற உத்தியோகத்தர் ஒருவர் தேர்தலின் பொருட்டு போட்டியிடுவதற்கு சேவையிலிருந்து விலகுதல் வேண்டுமா? 
 
ஆம். 
15.12.2004 ஆந் திகதிய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 07/2004 னால் திருத்தம் செய்யப்பட்ட தாபன விதிக்கோவையின் XXXII அத்தியாயத்தின் 1:3 பிரிவின் ஏற்பாடுகளுக்கமைய செயற்படல் வேண்டும்.
 
இது தொடர்பான சுற்றறிக்கைகளைப் பார்வையிட..
 
தொடரும்...
 
ஏனைய பாகங்களுக்கு செல்ல... 
 
 
 
 
அரச ஊழியர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களும் அதற்கான தீர்வுகளும் - பாகம் 05 அரச ஊழியர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களும் அதற்கான தீர்வுகளும் - பாகம் 05 Reviewed by Irumbu Thirai News on September 26, 2021 Rating: 5

அரச ஊழியர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களும் அதற்கான தீர்வுகளும் - பாகம் 04

September 19, 2021
 
,

தாபன விதிக்கோவை மற்றும் அரசாங்க நிர்வாக சுற்றறிக்கைகளில் நேரடியாக உள்ளடக்கப்படாத விடயங்கள் தொடர்பில் அரசாங்க ஊழியர்களுக்கு ஏற்படும் சந்தேகத்திற்கான தீர்வுகள் இங்கே வழங்கப்படுகின்றன. இவை தாபனப் பணிப்பாளரினால் வழங்கப்பட்ட பதில்களாகும். 
 
 
இவ்வாறு அரச நிறுவன தலைவர்களால் அடிக்கடி வினவப்பட்ட விடயங்களுக்கான பதில்களை கட்டங்கட்டமாக இங்கே தருகிறோம். 
 
குறிப்பு: உரிய சுற்றறிக்கைகளும் முடியுமானவரை இணைக்கப்பட்டுள்ளன. 


பாகம் - 04
(16) ஏதாவதொரு பதவிக்குரிய நியமனக் கடிதத்தில் வினைத்திறன் காண் தடை தொடர்பாக குறிப்பிடப்படாதுள்ள போது, உத்தியோகத்தர் ஒருவர் தனது பதவிக்குரிய வினைத்திறன் காண்தடைப் பரீட்சையில் சித்தியடைய வேண்டுமா? சித்தியடைய வேண்டுமெனில் அதன் பொருட்டு ஏற்படுத்தப்பட்டுள்ள ஏற்பாடுகள் என்ன? 
 
பதவிக்குரிய ஆட்சேர்ப்புத் திட்டத்தில் அல்லது சேவைகள் பிரமாணக் குறிப்பில் வினைத்திறன் காண் தடை தொடர்பாக உட்படுத்தப்பட்டிருப்பின், உத்தியோகத்தர் வினைத்திறன் காண் தடைப் பரீட்சையில் சித்தியடைதல் வேண்டும். 
இருப்பினும் குறித்த நியமனக் கடிதத்தில் இவ் ஏற்பாடு குறிப்பிடப்படாதுள்ள போது, அதன் பொருட்டு பொது சேவைகள் ஆணைக்குழுவின் ஆலோசனையினைப் பெற்றுக் கொள்ளல் வேண்டும். 
 
 
(17) வினைத்திறன் காண் தடைப் பரீட்சையில் சித்தியடையும் பொருட்டு முறையான அதிகாரியினால் நிவாரண காலம் வழங்கப்பட்டிருப்பின், அக்காலத்தின் பொருட்டு சம்பள ஆண்டேற்றங்கள் வழங்க முடியுமா? 
 
முடியும். 
 
 
(18) ஆட்சேர்ப்பு நடைமுறையில் ∕ சேவைகள் பிரமாணக் குறிப்பில் அல்லது நியமனக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு உரிய வினைத்திறன் காண் தடைப்பரீட்சையில் சித்தியடைய முடியாத உத்தியோகத்தர்களுக்கு நிவாரணம் வழங்கும் பொருட்டு ஏற்படுத்தப்பட்டுள்ள ஏற்பாடுகள் என்ன? 
 
இதன் பொருட்டு பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கை இலக்கம் 02/2001 மற்றும் 02/2011(1) இன் ஏற்பாடுகளின் பிரகாரம் நிவாரணக் காலத்தினைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு பொதுச் சேவைகள் ஆணைக்குழுவிற்கு வேண்டுகோள்களைச் சமர்ப்பிக்கலாம். 
 
 
 
(19) உத்தியோகத்தர்கள் பதவி உயர்வு கிடைக்கும் போது அப்பதவியின் வினைத்திறன் சம்பளத் தடைப் புள்ளியை மீறியிருப்பின் அதன் பின்னர் மேற்கொண்டு, சம்பள ஆண்டேற்றத்தை வழங்குதல் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது எவ்வாறு? 
 
பதவி உயர்விற்கமைய சம்பளம் மாற்றியமைத்தலை மேற்கொண்டு வினைத்திறன் சம்பள புள்ளியை மீறியிருப்பின் 11.02.1994 ஆந் திகதிய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 11/94 மூலம் திருத்தம் செய்யப்பட்ட தாபன விதிக் கோவையின் VII வது அத்தியாயத்தின் 5:6 பிரிவின் ஏற்பாடுகளுக்கமைய நடவடிக்கை எடுத்தல் வேண்டும். 
 
குறித்த சுற்றறிக்கைக்கு செல்ல..
 
 
(20) அரச சேவையில் நிரந்தர நியமனமொன்றை வகிக்கும் உத்தியோகத்தரொருவர் வேறொரு அரச பதவியொன்றிற்கு நியமனமொன்றை பெற்றுக் கொள்ளும் போது அவரது முன்னைய சேவைக் காலத்தை புதிய பதவியின் சேவைக் காலத்திற்கு சேர்த்துக் கொள்ள முடியுமா? 
 
சேர்த்துக் கொள்ள முடியாது. அவ்வாறாயினும் அரச சேவையில் / மாகாண அரச சேவையில் உள்ள உத்தியோகத்தரொருவர் முறையான விதத்தில் விடுவிப்பினை மேற்கொண்டு, அரச சேவையிலேயே புதிய நியமனமொன்றைப் பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பத்தில், அரச சேவை / மாகாண அரச சேவையின் கீழான முழுமையான சேவைக் காலத்தை ஓய்வூதியத்தினைக் கணக்கிடும் பொருட்டு மட்டும் சேர்த்துக் கொள்ள முடியும். 
தொடரும்..
 
 
ஏனைய பாகங்களுக்கு செல்ல..
 

 

அரச ஊழியர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களும் அதற்கான தீர்வுகளும் - பாகம் 04 அரச ஊழியர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களும் அதற்கான தீர்வுகளும் - பாகம் 04 Reviewed by Irumbu Thirai News on September 19, 2021 Rating: 5

அரச ஊழியர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களும் அதற்கான தீர்வுகளும் - பாகம் 03

September 16, 2021
 

தாபன விதிக்கோவை மற்றும் அரசாங்க நிர்வாக சுற்றறிக்கைகளில் நேரடியாக உள்ளடக்கப்படாத விடயங்கள் தொடர்பில் அரசாங்க ஊழியர்களுக்கு ஏற்படும் சந்தேகத்திற்கான தீர்வுகள் இங்கே வழங்கப்படுகின்றன. இவை தாபனப் பணிப்பாளரினால் வழங்கப்பட்ட பதில்களாகும். 
 
இவ்வாறு அரச நிறுவன தலைவர்களால் அடிக்கடி வினவப்பட்ட விடயங்களுக்கான பதில்களை கட்டங்கட்டமாக இங்கே தருகிறோம்.
 
(10) முறையான ஒழுக்காற்று விசாரணையின் போது காப்பு உத்தியோத்தர்களுக்கு இணைந்த கொடுப்பனவை செலுத்த முடியுமா? 
 
08.01.2008 ஆந் திகதிய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை கடித இலக்கம் 02/2008 இன் மூலம் இது தொடர்பான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய தாபனவிதிக் கோவையின் XIV வது அத்தியாயத்தின் 29.8 வது ஏற்பாடுகளின் பிரகாரம் கொடுப்பனவுகளைச் செலுத்த முடியும். 
 
குறித்த சுற்றறிக்கைக்கு செல்ல..  Circular 02-2008

 

(11) ஒப்பந்த அடிப்படையின் பேரில் மீளச் சேவையில் அமர்த்தப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு உத்தியோகபூர்வ வாசஸ்தலம் உரித்துண்டா? 

ஏதாவது ஒரு பதவியொன்றின் பொருட்டு உப அட்டவணைப்படுத்தப்பட்ட உத்தியோகபூர்வ வாசஸ்தலமொன்று உரித்துண்டு எனில் மட்டும், அப்பதவியினை வகிப்பவர் ஒப்பந்த அடிப்படையின் பேரில் சேவையில் இருப்பினும் அதனை வழங்க முடியும். 

 

(12) கடமையின் பொருட்டு வெளிநாட்டிற்கு நியமிக்கப்படும் உத்தியோகத்தர் ஒருவரது வாழ்க்கைத் துணைவரும் அரச உத்தியோகத்தர் எனில் அவன்/அவளிற்கு தாபன விதிக்கோவையின் XII வது அத்தியாயத்தின் 36வது பிரிவின் ஏற்பாடுகளுக்கமைய சம்பளமற்ற வெளிநாட்டு விடுமுறையை வழங்கும் போது ஒப்பந்தம் கைச்சாத்திடல் வேண்டுமா? கட்டாய சேவைக்காலம் அவசியமா?

ஒப்பந்தம் அல்லது கட்டாய சேவைக் காலத்திற்கு உட்படுத்தல் அவசியமற்றது. 

 

(13) யாராவதொரு உத்தியோகத்தரின் பொருட்டு அரச சேவை சொத்துக் கடன் வழங்கக் கூடிய ஆகக் கூடிய தொகையை ( 30 இலட்சம் ரூபா அல்லது உத்தியோகத்தரின் 07 வருட கால சம்பளம் ஆகிய இரண்டில் குறைந்த தொகை) சிபாரிசு செய்யும் போது உத்தியோகத்தரிடமிருந்து அறவிடப்படக் கூடிய ஆகக் கூடிய மாதாந்த தவணைப்பணம் எவ்வாறு அமைதல் வேண்டும்? 

உத்தியோகத்தர் பெறும் மாதாந்த தேறிய சம்பளத்தை (கொடுப்பனவுகள் தவிர்ந்த) மிஞ்சாதவாறு மாதாந்த தவணை அறவீட்டையும் வட்டியையும் கணக்கிடல் வேண்டும். 

 

(14) தாபன விதிக்கோவையின் ஏற்பாடுகளுக்கமைய பிணையாளிகளை முன்வைத்து, ஒரு தடவை இடர் கடன் பெற்றுக் கொண்ட உத்தியோகத்தர் ஒருவர் அக் கடன் பணத்தில் நிலுவை உள்ள போது மீள ஒரு தடவை இடர் கடன் தொகையின் பொருட்டு விண்ணப்பிக்கும் போது, மீண்டும் பிணையாளிகளை முன்வைக்க வேண்டுமா? 

ஆம். இவ்விடயத்தில் முன்னைய பிணையாளிகள் விடுவிக்கப்படுவதுடன் கடைசியாகப் பெற்றுக் கொள்ளும் கடன் தொகையின் பொருட்டு பிணையாகும் நபர்கள் மொத்த இடர் கடன் தொகையின் பொருட்டும் பிணையாளிகளாவர். 

 

(15) இடமாற்ற கட்டளையில் சரிசெய்கைபடி கொடுப்பனவு செய்வதாக குறிப்பிடப்படாத சந்தர்ப்பத்தில் அக் கொடுப்பனவினைச் செலுத்த முடியுமா? 

ஒரு கலண்டர் மாதத்திற்கு குறைவான காலத்தினுள் அமுல்படுத்துவதற்கு இடமாற்றக் கட்டளையொன்றை வழங்கி, அதற்கமைய குறித்த இடமாற்றம் இடம் பெற்றிருப்பின் தாபன கோவையின் XIV வது அத்தியாயத்தின் 24வது பிரிவின் ஏற்பாடுகளுக்கமைய சரிசெய்கை படியினைச் செலுத்த முடியும். 

தொடரும்...

 

ஏனைய பாகங்களுக்கு செல்ல...

பாகம் - 01 

பாகம் - 02

பாகம் - 04 

பாகம் - 05

அரச ஊழியர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களும் அதற்கான தீர்வுகளும் - பாகம் 03 அரச ஊழியர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களும் அதற்கான தீர்வுகளும் - பாகம் 03 Reviewed by Irumbu Thirai News on September 16, 2021 Rating: 5

அரச ஊழியர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களும் அதற்கான தீர்வுகளும் - பாகம் 02

September 12, 2021
 

தாபன விதிக்கோவை மற்றும் அரசாங்க நிர்வாக சுற்றறிக்கைகளில் நேரடியாக உள்ளடக்கப்படாத விடயங்கள் தொடர்பில் அரசாங்க ஊழியர்களுக்கு ஏற்படும் சந்தேகத்திற்கான தீர்வுகள் இங்கே வழங்கப்படுகின்றன. இவை தாபனப் பணிப்பாளரினால் வழங்கப்பட்ட பதில்களாகும். 
 
இவ்வாறு அரச நிறுவன தலைவர்களால் அடிக்கடி வினவப்பட்ட விடயங்களுக்கான பதில்களை கட்டங்கட்டமாக இங்கே தருகிறோம். 
 
 
(06) வைத்தியச் சான்றிதழை அடிப்பைடையாகக் கொண்டு விடுமுறை அனுமதிக்கப்பட்டுள்ள போது, அவ்விடுமுறை நாட்களுள் உள்ளடங்குகின்ற சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை அல்லது அரசாங்க விடுமுறை நாட்களும் அலுவலருக்கு உரித்தான ஓய்வு விடுமுறைகளில் இருந்து கழிக்கப்படுமா? 
 
வைத்தியச் சான்றிதழொன்றின் அடிப்படையில் அலுவலர் ஒருவருக்கு வழங்கப்படுகின்ற முழுச் சம்பளத்துடன் கூடிய விடுமுறைகளின் எண்ணிக்கை யாதெனில், குறித்த ஏற்பாடுகளுக்கு அமைவாக நடப்பாண்டில் தொடர்ந்தும் மீதமாகவுள்ள விடுமுறை நாட்களின் எண்ணிக்கை மற்றும் முன்னைய ஆண்டில் மீதமாகவுள்ள ஓய்வு/ சுகயீன விடுமுறைகளின் எண்ணிக்கையுடன் தொடர்ந்தும் விடுமுறை தேவைப்படுமாயின் தாபனவிதிக் கோவையின் XII ஆம் அத்தியாயத்தின் 10 ஆம் பிரிவின் கீழ் பெற்றுக்கொள்ள முடியுமான முன்னைய விடுமுறைகளுமாகும். 
 
அவ் அத்தியாயத்தின் 8.3 உப பிரிவின் ஏற்பாடுகளுக்கமைய உள் நாட்டில் கழிக்கும் ஓய்வு விடுமுறை காலத்தினுள் உள்ளடங்குகின்ற சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசாங்க விடுமுறை நாட்கள் என்பன விடுமுறை நாட்களில் இருந்து கழிக்கப்பட மாட்டாது. 
 
அதற்கமைய வைத்தியச் சான்றிதழின் அடிப்படையில் சுகயீன விடுமுறையாக முழுச் சம்பளத்துடன் வழங்கப்படும் சில விடுமுறை நாட்கள் அனுமதிக்கப்படும் சந்தர்ப்பத்தில், 
 
சனிக்கிழமை சாதாரண அலுவலக கடமை நாளாக கணிக்கப்படுகின்ற அலுவலர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசாங்க விடுமுறை நாட்களும், 
 
சுழற்சிமுறையின் கீழ் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அலுவலர்களுக்கு வாரத்தில் அவர்களுக்கு கிடைக்கின்ற ஓய்வு நாட்களும், 
 
வாரத்தில் 05 நாட்களில் மாத்திரம் சாதாரண அலுவலக கடமை நாட்களாக விதிக்கப்பட்டுள்ள அலுவலர்களுக்கு சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசாங்க விடுமுறை நாட்களும் அலுவலருக்கு உரித்தான ஓய்வு விடுமுறைகளில் இருந்து குறைக்கப்பட மாட்டாது. 
 
உதாரணமாக :- முழுச் சம்பளத்துடன் விடுமுறை வழங்கப்படும் வாரத்தின் 05 நாட்கள் மாத்திரம் அலுவலக கடமையில் ஈடுபடவேண்டிய அலுவலர் ஒருவருக்கு 05 நாட்கள் வைத்திய காரணங்களின் அடிப்படையில் விடுமுறை அனுமதிக்கும் சந்தர்ப்பத்தின் போதும், அக்கால எல்லையில் அரசாங்க விடுமுறை தினங்கள் 02 உள்ளடங்குமாயின், அலுவலர் சுகயீனம் காரணமாக 05 நாட்கள் சேவைக்கு சமூகமளிக்காதிருந்த போதிலும், உள்ளபடியாக அவருக்கு உரித்தான ஓய்வு விடுமுறைகளில் இருந்து 03 நாட்களே கழிக்கப்படும். 
 
(07) அரசாங்க அலுவலர் ஒருவர் கர்ப்பிணியாக இருப்பின், 05 மாதமாகும் போது, பிரசவ விடுமுறை பெற்றுக் கொள்ளும் வரையில், கடமையின் நிமித்தம் அலுவலகத்திற்கு அரை மணித்தியாலயம் பிந்தி வருவதற்கும், சாதாரணமாக அலுவலகத்தில் இருந்து வெளியேறும் நேரத்திற்கு அரை மணித்தியாலம் முந்தி புறப்படுவதற்கும் வழங்கப்பட்டுள்ள சலுகையை, காலை அல்லது மாலை ஒரேயடியாக ஒரு மணித்தியாலமாக பெற்றுக்கொள்ள முடியுமா? 
 
விடுமுறையை அனுமதியை வழங்கும் அதிகாரிக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்து திருப்தியடைவாராயின் அச் சலுகையை ஒரேயடியாக ஒரு மணித்தியாலயம் வழங்குவது சம்பந்தமாக எதுவித எதிர்ப்புக்களும் இல்லை. 
 
(08) பிரசவ லீவு பெற்றுள்ள பெண் உத்தியோகத்தர் ஒருவருக்கு அந்த லீவு காலத்தினுள் இடமாற்றம் கிடைக்கப் பெற்று அதனை நடைமுறைப்படுத்தும் போது பிரசவ லீவு (சம்பளத்துடன், அரைச் சம்பளம் அல்லது சம்பளமற்ற) காலத்தின் மீதமுள்ள நாட்களைப் பெற புதிய சேவை நிலையத்தில் அனுமதியைப் பெற்றுக் கொள்ள முடியுமா? 
 
இடமாற்றக் கட்டளைக்கு ஏற்ப புதிய சேவை நிலையத்தில் கடமையைப் பொறுப்பேற்றதன் பின்னர் சுற்றறிக்கை ஏற்பாடுகளின் படி அப்பெண் உத்தியோகத்தருக்கு தொடர்ந்தும், சம்பளத்துடன், அரைச் சம்பளம் அல்லது சம்பளமின்றிய பிரசவ லீவுகள் எஞ்சியிருப்பின் புதிய சேவை நிலையத்தில் அம்மீதமுள்ள லீவு நாட்களைப் பெறுவதற்கு அனுமதிக்க முடியும். 
 
(09) அரச உத்தியோகத்தர்களில் தங்கி வாழும் குழந்தைகளின் பொருட்டு விடுமுறை புகையிரத ஆணைச்சீட்டுக்கள் (Railway warrants) வழங்கும் போது அவர்களின் பொருட்டு உச்ச வயதெல்லைகள் விடுக்கப்பட்டுள்ளதா? 
 
தாபன விதிக்கோவையில்; XVI வது அத்தியாயத்தின் 1:3 வது உப பிரிவின் பிரகாரம் வயதெல்லையைக் கருதாது நிரந்தரமாகத் தங்கி வாழ்வதாக உறுதிப்படுத்திக் கொள்ளல் போதுமானதாகும். 
 
மேலும் அவ் அத்தியாயத்தின் 1:3:4 வது உப பந்திக்கமைய இவ் உறுதிப்படுத்தல் திணைக்களத் தலைவரின் பொறுப்பாகும் என்பதுடன், தேவையெனில் இது தொடர்பாக கிராம அலுவலரிடம் உறுதிப்பாட்டொன்றை வேண்டிக் கொள்ள முடியும்.
தொடரும்... 

ஏனைய பாகங்களுக்கு செல்ல...
அரச ஊழியர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களும் அதற்கான தீர்வுகளும் - பாகம் 02 அரச ஊழியர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களும் அதற்கான தீர்வுகளும் - பாகம் 02 Reviewed by Irumbu Thirai News on September 12, 2021 Rating: 5

அரச ஊழியர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களும் அதற்கான தீர்வுகளும் - பாகம் 01

September 12, 2021
 

தாபன விதிக்கோவை மற்றும் அரசாங்க நிர்வாக சுற்றறிக்கைகளில் நேரடியாக உள்ளடக்கப்படாத விடயங்கள் தொடர்பில் அரசாங்க ஊழியர்களுக்கு ஏற்படும் சந்தேகத்திற்கான தீர்வுகள் இங்கே வழங்கப்படுகின்றன. 
 
இவை தாபனப் பணிப்பாளரினால் வழங்கப்பட்ட பதில்களாகும். 
 
இவ்வாறு அரச நிறுவன தலைவர்களால் அடிக்கடி வினவப்பட்ட விடயங்களுக்கான பதில்களை கட்டங்கட்டமாக இங்கே தருகிறோம். 
 
 
(01) அரசின் நிரந்தர நியமனம் ஒன்றை பெறும் சந்தர்ப்பத்தில் குழந்தை பிரசவித்த உத்தியோகத்தர் ஒருவருக்கு பிரசவ விடுமுறை வழங்கலாமா? 
 
முடியும். 
 
குழந்தை பிரசவித்த நாள் தொடக்கம் உத்தியோகத்தர் நிரந்தர நியமனத்தினைக் கையேற்ற நாள் வரையிலான கால எல்லையினைக் கழித்து சம்பளத்துடனான, அரைச் சம்பளத்துடனான மற்றும் சம்பளமற்ற பிரசவ விடுமுறையினை வழங்க முடியும்.
 
03.02.2005 ஆந் திகதிய 04/2005 என்னும் இலக்கமுடைய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை ஏற்பாடுகளுக்கமைய இதை வழங்கலாம்.
 
இது தொடர்பான சுற்றறிக்கையை பார்வையிடவும் பதிவிறக்கம் செய்யவும் இங்கே கிளிக் செய்க. 
 
 
(02) கடமை வேளையின் பின்னர் விபத்தொன்று ஏற்படும் சந்தர்ப்பத்தில் அதன் பொருட்டு அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 382 இன் ஏற்பாடுகளுக்கமைய விடுமுறை வழங்க முடியுமா? 
 
அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 382 இற்கமைய எதிர்பார்க்காத அனர்த்தமொன்று என்பது ஓர் புவியியல் பிரதேசமொன்றினுள் ஏற்படும் வெள்ளம், சூறாவளி, நிலநடுக்கம் நீண்ட வரட்சி போன்ற இயற்கை அனர்த்தங்கள் அல்லது யுத்தம் போன்ற சந்தர்ப்பத்தில் ஏற்படும் அனர்த்தங்கள் என்பதாகும். அவ்வாறான சந்தர்ப்பத்தில் விபத்துக்குள்ளாகும் உத்தியோகத்தரொருவருக்கு அச்சுற்றறிக்கையின் ஏற்பாடுகளைக் கடைப்பிடித்து விடுமுறை வழங்கலாம். 
 
அது தவிர வேறு அவசர விபத்துக்களின் (மோட்டார் வாகன விபத்து போன்ற) பொருட்டு அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 382 இன் ஏற்பாடுகளை ஏற்புடையதாக்க முடியாது. 
 
இது தொடர்பான சுற்றறிக்கையை பார்வையிடவும் பதிவிறக்கம் செய்யவும் இங்கே கிளிக் செய்க. 
 
 
 
(03) புலமைப்பரிசிலின் பேரில் வெளிநாடு செல்லும் உத்தியோகத்தர் ஒருவரின் துணையும் அவரோடு செல்ல வெளிநாட்டு விடுமுறை பெறலாமா? 
 
முடியாது. 
 
 
(04) ஒப்பந்த அடிப்படையில் (Contract Base) சேவையில் ஈடுபட்டுள்ள உத்தியோகத்தரொருவருக்கு பிரசவ விடுமுறை வழங்க முடியுமா? 
 
முடியாது. 
 
 
(05) சட்ட ரீதியாக குழந்தையொன்றை தத்தெடுக்கும் உத்தியோகத்தரொருவருக்கு குழந்தையை பார்த்துக் கொள்ளும் பொருட்டு விடுமுறையைப் பெற்றுக் கொள்ள முடியுமா? 
 
விசேட விடுமுறையைப் பெற்றுக் கொள்ள முடியும். அதன் பொருட்டு தாபனப் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியினைப் பெற்றுக் கொள்ளல் வேண்டும். 
 
தொடரும்...
 
இது தொடர்பான ஏனைய பாகங்கள்...
அரச ஊழியர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களும் அதற்கான தீர்வுகளும் - பாகம் 01 அரச ஊழியர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களும் அதற்கான தீர்வுகளும் - பாகம் 01 Reviewed by Irumbu Thirai News on September 12, 2021 Rating: 5
Powered by Blogger.