மஹிந்த ஆட்சியில் மத்திய வங்கி ஊழலும் பிறவும்-சிறு ஞாபகப்படுத்தல்!

November 20, 2018


◆Direct placement முறைமையில் பிணை முறி வழங்கலின் போது,
1-2012 இல் 2,420 கோடி
2-2013 இல் 3,230 கோடி
3-2014 இல் 1,960 கோடி
மொத்தமாக மூன்று வருடங்களில்
7,610 கோடி ரூபா நட்டம்.
◆2014 ஆம் ஆண்டு கிரேக்க நாட்டின் பிணை முறிகளை மத்திய வங்கி கொள்வனவு செய்து 2,000கோடிக்கு மேல் நட்டத்தை எதிர்கொண்டது.
◆அமெரிக்கா,பிரேஸிலில் இரு கட்டடங்களைக் கொள்வனவு செய்த போது 87.2 கோடி மோசடி.
◆கடனாக டொலர் கொள்வனவு-மீளச்செலுத்தலின் போது டொலர் பெறுமதி உயர்வால் பாரிய நட்டம்.
◆இது போக மத்திய வங்கியின் ஆலோசகர்களாக மூவர் நியமிக்கப்பட்டு
வருடாந்த சம்பளமாக 139.6 கோடி வழங்கப்பட்டு அதிலும் ஊழல் இடம்பெற்றுள்ளது.


இது போக சிறீலங்கன் எயார்லைன்ஸ்,
அவன்கார்ட், மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் கோடிக்கணக்கான ரூபா நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஹெல்பிங் ஹம்மாந்தோட்டை, ஹெட்ஜிக் உடன்படிக்கை கொள்ளை, பொதுநலவாய விளையாட்டு விழா ஊழல், EPF/ETF இல் செயற்கையான வட்டி விகிதத்தில் பல கோடிகளை ஏப்பம் விட்டமை எனப்பல தொடர் நிதி மோசடிக் குற்றச்சாட்டுக்கள் உள்ளன.
அத்துடன் கோப் குழுவின் அறிக்கையில் 19 நிறுவனங்களில் 33,000கோடி ரூபா ஊழல் செய்யப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
19இல் ஒன்றே மத்திய வங்கி ஆகும்.
இன்று ரணில் கொள்ளையடித்த விடயத்தை மட்டுமே நாமும் மகிந்த அணியும் சிங்கள ஊடகங்களும் அதிகம் பேசுகிறோம். மிகுதியை அநேகர் மறந்துவிட்டனர் அல்லது நடித்து மழுப்பி விடுகின்றனர்.

இருந்த போதும் மகிந்தவின் ஆட்சியில் இடம்பெற்ற பாரிய ஊழல்களை கணக்கில் எடுக்காது சிறிய விடயங்களுக்காக மட்டும் கைது செய்யப்பட்டதையும் மகிந்தவின் ஆட்சியைப்போல் இந்த ஆட்சியிலும் மத்திய வங்கி ஊழலை மூடி மறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதையும் நாம் ஒரு போதும் ஏற்கவே முடியாது.

ஆனால் மகிந்த-மைத்திரி-ரணில் கால மோசடிகளை COPE, COPA இல் பிரதான பாத்திரம் வகிக்கும் ஜேவிபி மட்டுமே பேசும். அதற்கான தகுதியும் அவர்களுக்கே உள்ளது.

ஜெமில்.
மஹிந்த ஆட்சியில் மத்திய வங்கி ஊழலும் பிறவும்-சிறு ஞாபகப்படுத்தல்! மஹிந்த ஆட்சியில் மத்திய வங்கி ஊழலும் பிறவும்-சிறு ஞாபகப்படுத்தல்! Reviewed by Tamil One on November 20, 2018 Rating: 5

ஜனாதிபதி மைத்றியை சந்தித்த BBS பிரதிநிதிகள்

November 19, 2018
சில மாதங்களுக்கு முன்னர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு 6 வருடங்களுக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்ட BBS செயலாளர்


ஜானசரா தெரோவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை விவாதிக்க  BBS பிரதிநிதிகள் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி சிரிசேனவை சந்தித்தனர்
ஜனாதிபதி மைத்றியை சந்தித்த BBS பிரதிநிதிகள் ஜனாதிபதி மைத்றியை சந்தித்த BBS பிரதிநிதிகள் Reviewed by Tamil One on November 19, 2018 Rating: 5

பெண்கள் பாலியல் வன்முறை!

November 19, 2018

பெண்கள் மீதான தொடர் பாலியல் வன்கொடுமைகள், பாலியல் சீண்டல்கள், கொலை, கொடூர தாக்குதல் ஆகியவை இன்று அன்றாடச் செய்திகளாகிவிட்டன. இப்படிப்பட்ட செய்திகளை கேள்விப்படுவதும், அதற்கு கண்டனங்கள் தெரிவிப்பதும், அதற்கான உண்மையறியும் குழு, அதன் அறிக்கை, அதற்கான போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், சட்டஉதவிகள் என முன்னேற்றங்களுடன் எதிர்வினைகள் ஆற்றுவதும் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

முதலில் பெண்கள் என்பதாலேயே அவர்கள் மீது பாலியல் குற்றங்கள் நிகழ்த்தப்படுகிறது. அதாவது ஒட்டுமொத்த பெண் சமூகமே இங்கு ஒடுக்கப்பட்ட சமூகமாக உள்ளது. அதிலும் கூடுதலாக தலித் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்கொடுமைகள் சாதியம் தரும் துணிச்சலுடன் சேர்த்து இன்னும் கொடூரமாகத் தொடர்கின்றன.

பெண்கள் மீதான பல குற்றங்கள் வெளிவருவதே இல்லை. சமூகவலைத்தளங்கள் மூலம் நிகழ்ந்த நன்மையென்பது, ஊடகங்கள் நாளிதழ்கள் புறக்கணித்தாலும் செய்திகள் விரைவாகப் பற்றிக் கொள்கின்றன.

 இப்போதைய கேள்வி... இந்த வன்கொடுமைகளுக்கான மூல காரணங்களைக் கண்டறிவதற்கும் அவற்றிலிருந்து  மாற்றங்களைத் தெரிந்தெடுப்பதற்கும் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதே!

பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்கொடுமைகளுக்கு முதன்மைக் காரணம், ஆண்கள் பெண்கள் மீது கொண்டிருக்கும்  பார்வை. பெண் துய்த்து அனுபவிப்பதற்குரிய பண்டம்!  இதற்கு குடும்ப அமைப்பு, கல்விக்கூடங்கள், மொத்தத்தில் இந்தச் சமூகக் கட்டமைப்பு என அத்தனையும் காரணம் ஆகின்றன. இதில் ஒவ்வொரு குடும்பமாக சென்று மாற்றங்களை நிகழ்த்துவது என்பது நடைமுறை சாத்தியமற்றது. சமூகமாற்றம் என்பது முதல் கூறிய இரண்டு கூறுகளின் மாற்றத்தை ஒட்டி அமையக்கூடியது. ஆக அரசின் மக்களின்  செயற்பாட்டாளர்களின் தலையீட்டில் மாற்றம் காணக்கூடிய இடம் அடிப்படையில் கல்விக்கூடமே!

கல்வி கூடங்களில் நாம் காண வேண்டிய மாற்றங்கள் பாலியல் சமத்துவக் கல்வியும், பாலியல் கல்வியும்!

பெண்வழி சமூகமாக இருந்த காலங்களில் பெண்கள் ஆண்களை காட்டிலும் பலமிக்கவர்களாக இருந்தார்கள். ஆணாதிக்கச் சமூகமாக மாறிய போது அதாவது பெண்கள் வெறும் உடைமைகளாக பார்க்கப்பட்டது முதல் பெண்வேலை என்ற புதிய வரையரை உருவானது. பெண்களின் உடல்வலிமை மனவலிமை மெல்ல மெல்ல இந்த வகையில் பலவீனமாக்கப்பட்டது. இன்று பெண்களென்றால் இலகுவானவர்கள் பலம் குன்றியவர்கள் எவ்வித வலிமையும் அற்றவர்கள் என்றாகிவிட்டது. இந்த வரையறையை உடைத்து பெண்கள், ஆண்களை காட்டிலும் உடலளவிலும் மனதளவிலும் வலிமை பெறுதல் அவசியம். பெறுதல் என்பதை விட பெண்ணுள் இயல்பாகவே உள்ளதை காலத்தால் இழந்ததை மீட்டெடுக்க வேண்டும்.

இன்று சமூகச் செயல்பாட்டாளர்கள் தங்கள் களச் செயல்பாட்டில் முன்னைக் காட்டிலும் வேகமாய் இருப்பதை மறுப்பதற்கில்லை.

 ஆனால், 4 நாட்களாகக் காவல்நிலையம் அலைந்தும் சவுமியா குடும்பத்தால் வழக்குக் கொடுக்க முடியவில்லை. நம்மை நாம் அடையாள படுத்திக்கொள்ள வேண்டிய இடங்கள் அவை. அந்தந்த பகுதிக்கு நெருக்கமான  செயல்பாட்டாளர்களை அவர்களுக்கு அடையாளம் தெரிவதில்லை. தமிழ்நாடு முழுவதும் மூலை முடுக்கெங்கும் நாம் மக்களுக்கு அறிமுகமாயிருக்க வேண்டும்.

மக்களும் நம்முடன்
கைகோர்க்காமல் எதுவும் சாத்தியமில்லைதான். நாம் நம்மால் முடிந்தளவில் அல்ல அதற்கும் மேல் ஒரு சந்து இடுக்கு விடாமல் மக்களை நோக்கிப் பயணிக்க வேண்டிய நேரமிது. இது பின்னாளில் ஊடகங்களையும் வாய்திறக்க வைக்கும். நம் வேலைகள் சிறிது இலகுவாகும். இந்தப் பயணத்தில் பெண்கள் ஒவ்வொருவருக்கும் கல்வி இன்றியமையாதது, அதனூடே தற்காப்புக் கலையும் இன்றியமையாதது என்பதைப் புரியச் செய்வதோடு நடைமுறைப்படுத்த வழி காண்போம்.

Sudha Thiagu.
பெண்கள் பாலியல் வன்முறை! பெண்கள் பாலியல் வன்முறை! Reviewed by Tamil One on November 19, 2018 Rating: 5

ஆண்கள் தின ஸ்பேஷல்!!

November 19, 2018

ஒரு ஆண் எப்போது  மற்றவர்களுக்கு அழகாக தெரிகிறான்  தெரியுமா தோழர்களே,,?

ஆண் மகன் என்பவன் தோற்றத்தில்
மட்டும் அழகாக இருந்தால்
போதாது,,,

ஒருவன்
அனைத்து வகையிலும்
அழகானவனாக தெரிய
வேண்டுமானால் …

‘‘உன் அருகில் இருக்கையில்
பாதுகாப்பாய் இருக்கிறேன்’’ என்ற
உணர்வை ஒரு பெண்ணுக்குத்
ஏற்ப்படுத்தும் பொது ஆண் மகன்
சிறந்து நிற்கின்றான்,.

தன்
நண்பனை ஆபத்திலிருந்து காப்பாற்ற
நினைக்கும்போது,,

தான் 25 வயதை கடந்து விட்ட பின்,
தன் பெற்றோர்கள் தான்
தனக்கு குழந்தைகள்
என்பதை உணரும்போது,,

உள்ளத்தை மட்டுமே கண்டு ஒரு
பெண்ணிடம்
காதல்கொள்ளும்போது,,

எல்லோரும்
வேடிக்கை மட்டுமே பார்க்கும்
இடத்தில் களத்தில்
இறங்கி உதவி செய்யும் ஈகை மனம்
வரும்போது,,

தாரத்தை ஏற்க தட்சணை எதுவும்
கேட்காமல் தன்மானத்தால்
தலை நிமிரும்போது,,

தாயின் அன்பையும் தாரத்தின்
அன்பையும் தராசில்
வைத்து ஒப்பிடாதபோது,,

எதற்குமே கலங்காத கண்கள், தான்
நேசிக்கும் தன் உறவுகளுக்காக
மட்டுமே கலங்கும்போது,,

பெண்ணை ஆண் என்ற அதிகாரத்தால்
அடக்காமல் ,
மனதில் வீரனாக,
குணத்தில் அன்பாளனாக,
பண்பில் நெறியாளனாக
செயலில் நேர்மையாளனாக இருக்கும்
எல்லா ஆண்களுமே அழகு தான்.

ஆடவர் தின வாழ்த்துக்களுடன்,,,!


2.

ஒரு ஆண் எப்போது மற்றவர்களுக்கு அழகாக தெரிகிறான்,,,

ஆண்மகன் என்பவன் தோற்றத்தில்
மட்டும் அழகாக இருந்தால்
போதாது....

‘‘உன் அருகில் இருக்கையில்
பாதுகாப்பாய் இருக்கிறேன்’’ என்ற
உணர்வை ஒரு பெண்ணுக்குத்
ஏற்ப்படுத்தும் பொது,,,

உள்ளத்தை மட்டுமே கண்டு ஒரு
பெண்ணிடம்
காதல்கொள்ளும்போது,,,

தாரத்தை ஏற்க தட்சணை எதுவும்
கேட்காமல் தன்மானத்தால்
தலை நிமிரும்போது,,,

தாயின் அன்பையும் தாரத்தின்
அன்பையும் தராசில்
வைத்து ஒப்பிடாதபோது,,,

எதற்குமே கலங்காத கண்கள், தான்
நேசிக்கும் தன் உறவுகளுக்காக
மட்டுமே கலங்கும்போது,,,

பெண்ணை ஆண் என்ற அதிகாரத்தால்
அடக்காமல்,

மனதில் வீரனாக,
குணத்தில் அன்பாளனாக,
பண்பில் நெறியாளனாக,
செயலில் நேர்மையாளனாக
இருக்கும்
எல்லா ஆண்களுமே அழகு தான்...

ஆடவர் தின வாழ்த்துக்கள்☺️


3.

#ஆண்கள்_தினம்

எல்லோரும் பெண்களை பற்றி படித்திருப்பீர்கள்...
இப்போது ஆண்களைப்
பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்...
ஆண் என்பவன் யார்?

ஒரு ஆண் என்பவன்
இயற்கையின்
மிக அழகான
படைப்புகளில்
ஒன்றாவான்.
அவன்
விட்டுக்கொடுத்த
லை மிகச்
சிறிய
வயதிலேயே செய்யத்
தொடங்கி விடுகிறான்,
அவன் தன்
சாக்லெட்டை தன்
சகோதரிக்காக
தியாகம் செய்கிறான்.
பின் தன் காதலை தன்
குடும்ப
நிலையை எண்ணி
தியாகம் செய்கிறான்.
தன்
மனைவி மற்றும்
குழந்தைகள்
மீதான
அன்பை இரவுகளில்
நீண்ட
நேரம் வேலை செய்வதன்
மூலம்
தியாகம் செய்கிறான்.
அவன் அவர்களின்
எதிர்காலத்தை வங்கிகளில்
கடன்
வாங்குவதன் மூலம்
உருவாக்குகிறான்
ஆனால்
அதை அவர்களுக்காக
திருப்பிச்
செலுத்த தன் வாழ்நாள்
முழுதும்
கஷ்டப்படுகிறான்
எனவே அவன்
தன் மனைவி மற்றும்
குழந்தைகளுக்காக
எந்தவித
குறையும் சொல்லாமல்
தன்
இளமையை தியாகம்
செய்கிறான்.
அவன் மிகவும்
கஷ்டப்பட்டாலும்,
தன் தாய், மனைவி, தன்
முதலாளி ஆகியோரின்
இசையை (திட்டுகள்)
கேட்க
வேண்டியுள்ளது.
எல்லா தாயும்,மனைவியும்
முதாலாளியும்
அவனை தங்கள்
கட்டுப்பாட்டுக்குள்
வைக்க
முயற்சிக்கின்றனர்.
இறுதியில்
மற்றவர்களின்
சந்தோசத்திற்காக
விட்டுக்கொடுத்துக்
கொண்டிருப்பதன்
மூலம் அவன்
வாழ்க்கை முடிகிறது.
பெண்கள உங்கள்
வாழ்வில்
ஒவ்வொரு ஆணையும்
மதியுங்கள்.
அவன் உங்களுக்காக
என்ன தியாகம்
செய்துள்ளான்
என்பதை நீங்கள்
எப்போதும் அறியப்
போவதில்லை.
அவனுக்கு தேவைப்படும்போது
உங்கள்
கரங்களை நீட்டுங்கள்
அவனிடமிருந்து இருமடங்காக
நீங்கள்
அன்பை பெறுவீர்கள்.
ஆண்களுக்கும்
உணர்வுகள் உண்டு,
அதையும் மதியுங்கள்.
அமைதி கொள்வோம்.
இது ஆண்களின்
அன்பு வேண்டுகோள்.





ஆண்கள் தின ஸ்பேஷல்!! ஆண்கள் தின ஸ்பேஷல்!! Reviewed by Tamil One on November 19, 2018 Rating: 5

சாதிக்காக கொலை செய்வது கெளரவமா?

November 19, 2018
அடுத்தடுத்து நம்மைக் கதிகலங்க அடிக்கும் சாதிவெறிக் கொலைகள் ஒன்று மாற்றி ஒன்று அரங்கேறிய வண்ணமுள்ளன.  தமிழ்த் தேசியம் பேசுவோர், திராவிடம் பேசுவோர் அனைவரும் இந்த மாதிரியான கொலைகளை வேடிக்கையக மாத்திரம் தான் பார்ப்பார்கள்..

தற்போது நந்தீஷ் – சுவாதி காதல்களரின் படுகொலை.  மிகக் கொடூரமானது. சாதி மனிதனை நச்சுப் பாம்பாக்கும் எனக் கூட சொல்ல முடியவில்லை. பாம்புகளுக்குத் தற்காப்புக்கே நஞ்சு உதவுகிறது. ஆனால் சாதிவெறிப் பாம்புகள் மிகக் கொடியவை. உலகில் எங்கும் காண முடியாதவை. எந்த அறிவியலும் இல்லாமல் முழுக்க முட்டாள்தனமான கருத்தியல்களின் அடிப்படையில் அரங்கேறும் வன்முறைகளே காதல் கொலைகள்.

மருத்துவர் ராமதாஸ் போன்றோர் நாடகக் காதல் எனக் கூறி காதல் இணையர்கள் மீது பொங்கி எழுவதற்கு என்ன காரணம்? ஏனென்றால் என்றும் இல்லாத அளவுக்கு இன்று அலை அலையெனக் காதலர்கள் உருவாகி வருகின்றனர். கல்விக் கூடத்தில், பணியிடத்தில் ஒன்றாகப் பழகும் பெண் ஆண்களை காதல் என்னும் இயற்கை உணர்ச்சி சாதிச் சகதியிலிருந்து விடுவிக்கிறது. எனவேதான் இந்தச் சாதிவெறித் தலைவர்கள் பதற்றமடைகிறார்கள். காதலுக்கு எதிராக வரிந்து கட்டிக் கொண்டு நிற்கிறார்கள்.

நாடகக் காதல் என்ற சாதிவெறிக் கருத்தியலின் பின்னணியில் அடுத்தடுத்து சாதிமாறி திருமணம் செய்த இணையர்களைக் கொலை செய்யும் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இந்தக் கொலைகளை எப்படி வர்ணிப்பது என்பதில் விவாதமும் உள்ளது.

நம் முற்போக்காளர்களில் பலர் "கௌரவக் கொலை" எனச் சொல்வதே குற்றம் என்பதாகக் கருதி, அதனை ஆணவக் கொலையாக மாற்றப் பார்ப்பதால் எழும் சிக்கலிது.

சாதியாதிக்கத்தில் நடக்கும் கொலைகளில் காக்கப்படுவது தனிமனித கௌரவம் அன்று, குடும்பத்தின் கௌரவம். கொளரவக் கொலை என்றால் என்ன? எனப் புரிந்து கொள்வற்கு, அதன் பின்னால் உள்ள வரலாற்று உண்மைகளை அறிவியல் நோக்கில், சட்ட நோக்கில் புரிந்து கொள்ள வேண்டும், அப்போதுதான் தெளிவு பிறக்கும்.

சாதி வெறியர்கள் காதல் உணர்வுகளை அழித்தொழிக்கும் நோக்கில் செய்யும் கொலைகள் பல காலமும் "கௌரவக் கொலைகள்" என்றே ஊடகங்களாலும், சமூகச் செயற்பாட்டாளர்களாலும் அறியப்பட்டு வந்தன. ஆனால் சிலர் அண்மைக் காலமாக "கொளரவக் கொலை" என்னும் சொல்லே தவறானது என வாதிடுகின்றனர். சாதிவெறி தலைக்கேற ஓர் உயிரையே அழித்தொழிக்கும் நோக்கம் எப்படி "கௌரவம்" ஆகும் என்றும், சாதித் திமிரில் நிறைவேற்றப்படும் இத்தகைய கொலைகளை "ஆணவக் கொலை" என்றே அழைக்க வேண்டும் என்றும் ஓங்கி ஒலிக்கின்றனர். இந்தக் கருத்தின் தாக்கத்தில் இன்று சில தொலைக்காட்சி ஊடகங்களும் "கௌரவக் கொலை" என்னும் சொல் துறந்து, "ஆணவக் கொலை" என உரையாடத் தொடங்கியுள்ளன. "ஆணவக் கொலை" என்னும் சொல்லைப் பயன்படுத்த விரும்புவோரின் நோக்கில் பிழையொன்றுமில்லை. சாதித்திமிரும், ஆணவமுமே காதல் இணைகளை அழிக்கும் கொலைகளுக்குக் காரணமாக இருக்கையில், இதில் என்ன "கௌரவம்" வேண்டிக் கிடக்கிறது எனச் சாதி ஒழிப்பில் நம்பிக்கை கொண்டோர் கேட்பதில் முழு நியாயம் இருக்கிறது. ஆனால் சட்டத் தர்க்கமாகாது.

சாதிவெறிக் கொலைகளை "கௌரவம்", அதாவது honor என்னும் சொல் கொண்டு குறிப்பதே உலகச் சட்ட நடைமுறையாக உள்ளது. இந்தச் சொல்லையே ஐநா, ஆம்னஸ்டி உள்ளிட்ட அமைப்புகளும் பயன்படுத்துகின்றன. ஆங்கில அகராதிகள் வரையறுப்பின்படி, கௌரவக் கொலை என்பது ஒரு குடும்பத்தின் ஆண் மகன் தனது குடும்பத்தின் பெண் செய்யும் நடவடிக்கையால் அதன் கௌரவம் குலைக்கப்பட்டதற்காக அப்பெண்ணைக் கொலை செய்வதாகும். (honor killing - a male member of the family kills a female relative for tarnishing the family honor). இப்படி "குடும்ப கௌரவம்" காக்கச் செய்யப்படும் கொலைகள் "கௌரவக் கொலைகள்" என்றும், குடும்பத்தின் கௌரவம் காக்கும் பொருட்டு அப்பெண்ணை வீட்டில் அடைத்து வைத்தல், கட்டாயத் திருமணம் செய்து வைத்தல், சித்திரவதை செய்தல் போன்ற செயல்கள் "கௌரவக் குற்றங்கள்" (honor crimes) என்றும் அழைக்கப்படுகின்றன. குடும்ப கௌரவம் காக்கும் பொருட்டு, ஆண் மகன் கொலை செய்யப்பட்டாலும் அது கௌரவக் கொலையில்தான் அடங்கும் எனப் பன்னாட்டு வரையறைகள் கூறுகின்றன.
கொளரவக் குற்றங்களுக்கு எதிராகத் தனிச் சட்டங்கள் ஐரோப்பா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியா உள்ளிட்ட கண்டங்களின் பல நாடுகளிலும் நடைமுறையில் உள்ளன. பிரெஞ்சு, அராபியம், ஸ்பானியம் என அனைத்து மொழிகளிலும் "கொளரவக் குற்றங்கள்", "கௌரவக் கொலைகள்" என்றே அறியப்படுகின்றன. உலகின் அனைத்து நாடுகளும், ஏன், பாகிஸ்தான், சவுதி, ஈரான், ஈராக் உள்ளிட்ட இசுலாமிய நாடுகளுங்கூட தங்கள் நாடுகளில் "கொளரவக் குற்றங்கள்" இருப்பதாக ஒப்புக் கொண்டு அதற்கான சட்டங்களை இயற்றியுள்ளன. ஆனால் இந்தியா மட்டுந்தான் அத்தகைய கௌரவக் குற்றங்களோ, கௌரவக் கொலைகளோ எங்கள் நாட்டில் நடக்கவில்லை எனத் துணிந்து பொய்யுரைத்து வருகிறது. வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் ஐநாவின் சமூக, மாந்தநேய மற்றும் பண்பாட்டுக் குழு கொளரவக் கொலை தொடர்பாக நடத்திய கருத்தரங்கில் எங்கள் நாட்டில் கௌரவக் கொலை என்ற ஒன்றே இல்லை எனக் கூறியது இந்தியா. இல்லாததை இருப்பதாகப் புனைவதும், தெளிவான உண்மைகளையே மூடி மறைப்பதுந்தானே பார்ப்பனியம். அதைத்தான் இந்தியா செய்து வருகிறது.

உள்ளபடியே இந்தியச் சூழலில் குடும்பத்தின் கௌரவம் என்பது பெண்ணின் கற்பில் சுருட்டி வைக்கப்பட்டிருப்பதால், தாக்குதல் பெண்ணின் மீதுதான் நடைபெறுகிறது. பார்க்கப் போனால் உயர்சாதி ஆண்மகன் கீழ்ச்சாதி பெண்ணை மணந்தால் பெரும் சிக்கல் எழுவதில்லை. குறிப்பாக தலித் ஆண்மகனை மணக்கும் உயர்சாதிப் பெண்தான் அவள் குடும்பத்தைச் சேர்ந்த ஆண்களின் சாதிவெறிக்குப் பலியாகிறாள். எனவே இதனை தலித் மக்களுக்கு எதிரான வன்முறை எனச் சுருக்கி விட முடியாது. இது ஒட்டுமொத்தமாகக் குடும்பத்தின் சாதி கௌரவம் காக்கும் பொருட்டு செய்யப்படும் குற்றங்கள், கொலைகள் ஆகும். இந்திய, தமிழ்ச் சூழலில் இந்தச் சாதி கௌரவம் ஒடுக்கப்பட்ட ஆண்களின் மீதும் பாய்வதால் கௌரவக் குற்றங்களால் பாதிக்கப்படுவோரின் பட்டியலில் உலகின் மற்ற நாடுகளைப் போலன்றி பெண்களுடன் ஆண்களும் சரி சமமாக அடங்குவர். எனவே நமக்கு உடனடியாக கொளரவக் கொலைகள், கொளரவக் குற்றங்கள் (honor killings and honor crimes) ஆகியவற்றுக்கு எதிரான தனிச் சட்டம் தேவை.

எனவே ஆணவக் கொலை என்று மக்களிடம் சாதி எதிர்ப்பு உணர்வு ஏற்படுத்தும் நோக்கில் பேசுவதில் எத்தவறும் இல்லை. ஆனால் "கௌரவக் கொலை" என்னும் சொல்லுக்கு எதிராகப் பேசினால், நாம் அதன் பின்னுள்ள சட்ட நியாயத்தை உலக நாடுகளுக்குப் புரிய வைப்பதில் தோற்று விடுவோம். அது சாதிய ஆதரவாளர்களுக்கு, காதல் எதிர்ப்பாளர்களுக்கு வாய்ப்பாகிப் போகும்.
நாம் துணிச்சலுடன் முடிவெடுக்க வேண்டும். எந்தத் தயக்கமும் தேவையில்லை. 21 வயது ஆணும் பெண்ணும் காதலிப்பது, திருமணம் புரிவது, அல்லது திருமணமின்றி ஓர் இல்லத்தில் சேர்ந்து வாழ்வது, எல்லாம் அவர்களின் அடிப்படை உரிமை. இதில் பெற்றோர் மூக்கை நுழைப்பதற்கு எந்த உரிமையும் கிடையாது. நாங்கள் பெற்றோம், சீராட்டினோம், பாராட்டினோம் என்றெல்லாம் கூறி, காதலை முடக்க நினைப்பது வெறும் உணர்வு மிரட்டலே. பாசமன்று. பாசமிருந்தால், பிள்ளைகளின் இன்பத்தில் பங்கெடுப்பதே நேர்மையானதாக இருக்கும். அதை விடுத்து சாதித் திமிரில் எதிர்ப்பு தெரிவிக்கும் பெற்றோரைத் தூக்கி எறிவதே நமது கடமையாக இருக்க வேண்டும்.

கௌரவக் கொலை தடுக்கத் தனிச் சட்டம் தேவையில்லை, இருக்கும் சட்டங்களே போதுமானவை என்பதே பாஜக, காங்கிரஸ் இரண்டின் கொள்கையாகும். எனவேதான் இரு கட்சிகளுமே கௌரவக் கொலை, கௌரவக் குற்றங்களுக்கெனத் தனிச் சட்டம் இயற்றாமல் நாள் கடத்தி வருகின்றன. காங்கிரஸ் ஆட்சியில் பல பெண் விடுதலை அமைப்புகளும் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக, அன்றைய அமைச்சர் ப. சிதம்பரம் கௌரவக் கொலை தொடர்பான ஒரு சட்ட வரைவை உருவாக்கி அதனை அன்றைய அமைச்சர்க் குழுவுக்கு அனுப்பி வைத்தார். வரைவை அமைச்சர்க் குழுவுக்கு அனுப்பி வைப்பது என்பது அந்தச் சட்டத்தைத் தூக்கிப் பரணில் போடும் வேலையே என்பது நமக்குத் தெரிந்த செய்திதான்.

தமிழ்நாட்டில் திமுக, அதிமுக இரண்டுமே கௌரவக் கொலைச் சட்டம் குறித்தெல்லாம் மூச்சு விடுவதில்லை. இரு கட்சிகளுமே 2014 மக்களவைத் தேர்தல் அறிக்கையில் கௌரவக் கொலைச் சட்டம் குறித்தெல்லாம் ஒரு கூட பேசவில்லை. சொல்லப் போனால் கௌரவக் கொலை என்ற சொல் கூட அவர்களின் தேர்தல் அறிக்கையில் இல்லை.

எனவே சாதி ஒழிப்பில், காதல் வாழ்வில் நம்பிக்கை வைத்துள்ள நம்மைப் போன்றோர், தமிழகத் தேர்தல் அரசியல் கட்சிகளைப் பார்த்துக் கேட்போம். சாதிவெறி ஒழிக்க, கௌரவக் குற்றங்களைத் தடுக்கத் தனிச் சட்டம் இயற்ற உடனடி ஆதரவு கொடுங்கள் எனக் கேட்போம். இதற்காக இந்துத்துவ நடுவணரசை எதிர்நோக்கிக் காத்திருக்காமல், தமிழக அரசையே கொளரவக் குற்றங்கள் அனைத்துக்கும் எதிராகச் சட்டம் இயற்றச் செய்வோம். அதுவே அகமணம் உடைத்து, சாதியுடைத்து பெரியாரின், அம்பேத்கரின் கனவை நனவாக்கும், சமத்துவத் தமிழ்த் தேசம் படைக்கும்.

#நலங்கிள்ளி
சாதிக்காக கொலை செய்வது கெளரவமா? சாதிக்காக கொலை செய்வது கெளரவமா? Reviewed by Tamil One on November 19, 2018 Rating: 5

மனுஷ நாணயகாரவின் அறிக்கை

November 18, 2018
அனைத்து கட்சி தலைவர்களும் தமது கட்சி எம்.பி.களை ஒழுங்கான முறையில் வழி நடாத்தினால் மாத்திரமே நாளை நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வு சீராக முடிவடையும் என மனுஷ நாணயக்கார அறிவித்துள்ளார்



மேலும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் ,  தொகுதி அமைப்பாளர்கள் பலரும்  எம்முடன் இணைய விருப்பம் தெரிவிந்துள்ளனர்..
நாட்டின் ஜன நாயகத்தை பாதுக்காக்கும் வகையில் மாத்திரமே அரசாங்கத்தை விட்டு வெளிய வந்துள்ளோம்..


மனுஷ நாணயகாரவின் அறிக்கை மனுஷ நாணயகாரவின் அறிக்கை Reviewed by Tamil One on November 18, 2018 Rating: 5

சச்சின் ? கோலி? யார் சிறந்தவர்?

November 18, 2018
( சற்று நீளமான பதிவு பொறுமையாக வாசிக்கவும்)

(**ODI மாத்திரமே கருத்திற் கொள்ளப்பட்டுள்ளது)

251 எனும் இலக்கை விரட்டி அடிக்க வேண்டிய நிலையில் சச்சின் 65 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்கிறார். கேப்டன் அசாருடின் டக் இல் ஆட்டம் இழக்க அடுத்தடுத்து விக்கட்கள் சரிய ஆரம்பிக்கின்றன! இந்தியா 120/8 என்ற நிலைக்கு சரிகிறது! செமி பைனலில் தோல்வியுற்று 1996 உலக கோப்பையில் இருந்து வெளியேறுகிறது!  அந்த உலக கோப்பை தொடர் முழுவதும் சச்சின் உம் அசாருடினுமே பேட்டிங்கில் அதிகம் பிரகாசிக்க ஏனைய ப்லேயர்கள் பெரிதளவில் பங்களிக்க வில்லை! இந்தியாவிற்கு இவ்வாறான ஓர் நிலை தான் 1992 உலக கோப்பையிலும்! 1983 உலக கோப்பையை வென்ற பிட்பாடு இந்தியாவின் பல நட்சத்திர வீரர்கள் கிரிகெட் இற்கு விடைகொடுக்க ஆரம்பிக்கின்றனர். புது முகங்கள் அறிமுகமாகின்றன! 1983 - 1995 வரையேயான காலப்பகுதியில் இந்தியா அணி மீண்டும் ஒரு தரமான அணியை ஒருவாக்க வேண்டிய நிலையில் இருந்தது. அப்போது தான் இந்திய அணி மிக மோசமான அடைவுகளை பதிவு செய்கிறது!
190 ODI களில் வெறுமனே 94 ODI மாத்திரமே வெற்றி பெறுகிறது! 90 போட்டிகளில் தோல்வி! அதேபோல் 64  Test இல் 18 போட்டிகளில் வெற்றி பெற்று 14 போட்டிகளில் தோல்வியுறுகிறது 31 போட்டிகளில் ட்ரா செய்கிறது!
இது 1986-1995 வரையேயான காலப்பகுதியில்!

இவ்வாறான ஓர் சூழ்நிலையில் தான் சச்சின் டெண்டுல்கர் எனும் 16 வயது சிறுவன் இந்திய கிரிகெட் இல் தடம் பதிக்கிறான்! உள்ளூர் போட்டிகளில் சதங்களை சர்வசாதரணாமாக விளாசியதன் விளைவாக 16 வயதிலேயே அணியில் இணைத்துக்கொள்ளப்படுகிறான்! அசாருதீன் போன்ற ஓரிரு வீரர்கள் மாத்திரமே இருக்க அணியில் இணைந்த சச்சின் இற்கு அணியை தாங்க வேண்டிய தேவை ஏற்படுகிறது. ODI Test என இரண்டிலும் தான் பாரிய பங்கை வழங்க வேண்டிய தேவையேற்படுகிறது. 1983 இல் இருந்த பலர் குட்பாய் சொல்லிவிட்டு செல்ல சச்சின் தலையில் பாரிய சுமை இந்திய அணியினால் அவர்களை அறியாமலே சுமத்தப்படுகிறது! 1992 உலக கோப்பையில் சச்சின் உம் அசாருதீனுமே மாறி மாறி போட்டிகளில் பங்களிப்பு செய்கிறார்கள்! சச்சின் 1989 இல் தான் கிரகெட் அரங்கில் நுழைந்தார்! 1996 உலக கோப்பையில் சச்சின் தான் இந்தியா விற்கு போட்டிகளை வென்றுகொடுக்கிறார்! அணியின் ஓட்டங்களில் 40-55% ஆன ரன்களை சச்சினே அடித்தார்! செமி பைனலில் சச்சின் 65 உடன் ஆட்டிமிழக்க இந்திய அணி சரிகிறது. இவ்வாறு சச்சின் இன் ஆரம்ப காலம் பாரிய சுமைகளை சுமந்தவையாகவே ஆரம்பிக்கின்றது! அணியை சுமக்க வேண்டிய தேவை சச்சின் இற்கு!

ஊழல் , மெச்பிக்சிங் என சினியர் வீரர்கள் அகப்பட்டு ஓர் கடின பாதையை கடக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறது இந்தியா! இளம் வீரர்களை கொண்டு அணியை ஒப்பேற்ற வேண்டிய நிலை! கங்குலியின் தலமைத்துவம்! இப்போதிருக்கும் இந்திய அணிக்கு அஸ்திவாரம் இட்டது கங்குலி தான்! இளம் வீரர்களை கொண்டு இந்தியா அதுவரை செய்திராத பல சாதனைகளை செய்து இந்திய அணியை தலைப்பட செய்கிறார். அவ்வாறு மெல்ல மெல்ல கட்டியெழுப்பிய அணியை தான் தோணி பொருப்பேற்றார்! கங்குலி அஸ்திவாரம் இட்டு மெல்ல கட்டியெழுப்பிய இந்திய அணியை தோணி அடுக்குமாடிகளாக்கி விஸ்வரூப வளர்ச்சிக்கு கொண்டுசென்றார்! இவ்வாறான ஓர் திடமான தரமான பல சிறந்த பெட்ஸ்மேன்கள் ஆடி கொண்டிருக்கும் காலப்பகுதியில் தான் கோலி இன் என்றி இடம்பெறுகிறது!  2008 இல் அணியினுள் உள்வாங்கப்பட்ட கோலி ODI இல் மாத்திரம் கவனம் செலுத்தினார்! சேவாக் , சச்சின் , கம்பீர் போன்ற முதன்மை வீரர்கள் injured அல்லது ஓய்வு கொடுக்கப்பட்டாலே கோலியிற்கு அணியில் இடம் கொடுக்கப்பட்டது ஆரம்பத்தில்! ஒரு reserve player ஆகவே கோலி ஆரம்ப காலத்தில் பார்க்கப்பட்டார்!

சச்சின் போன்று அணியை தாங்க வேண்டிய நிலை கோலிக்கு இருக்கவில்லை! தான் பெட் செய்து ரன் ஸ்கோர் செய்தால் தான் இந்திய அணி வெற்றிபெறும் என்ற நிலை கோலிக்கு இருக்கவில்லை சச்சின் இற்கு இருந்தது ! இதனாலேயே சச்சின் இன் ஆரம்பகால ஓட்ட எண்ணிக்கையும் சரி பெர்பமென்ஸ் உம் சரி சற்று குறைவாகவே இருந்தது! ஆனால் கோலி அவ்வாறில்லை! கோலி இற்கு ஓரு freedom இருந்தது ! சச்சின் சேவாக் கம்பிர் யுவ்ராஜ் டோனி என பல பெயர்பெற்ற பெட்ஸ்மேன் கள் அணியில் இருந்தனர்! கோலி தன்னை சிறந்த பெட்ஸ்மேன் என நிரூபிக்க வேண்டிய தேவை மாத்திரமே இருந்தது! 2008-2010 வரை கோலி சச்சின் , கம்பீர் இற்கு பிரதியீடாக போடப்படுவதும் நீக்கப்படுவதுமாக இருந்தார்! 2010  ஒரு போட்டியில் man of the match பெற்ற பின் "அணியில் தன்னை நிலைநிறுத்த வேண்டும் என்ற pressure இருந்ததாக " கூறியிருந்தார்! 2010 இல் தான் நிரந்தரமான இடம் கிடைக்கிறது கோலி இற்கு! அதுவரை கோலி டெஸ்ட் ஆடவில்லை ஓடிஐ தான் விளையாடி கொண்டிருந்தார். 2011 இல் தான் டெஸ்ட் இல் நுழைந்தார்! ஆனால் சச்சின் அணியினுள் நுழைந்த காலம் முதல் அவரிற்கு பாரிய பொறுப்பு சுமத்தப்பட்டிருந்தது! டெஸ்ட் ஓடிஐ என இரண்டிலும் பிரகாசிக்க வேண்டிய கட்டாய நிலை இருந்தது! ஆனால் கோலி ஒருவகையான freedom  ஐ அனுபவித்தார்! அவரிற்காக விளையாட வேண்டிய நிலை மாத்திரமே ஆரம்பத்தில் இருந்தது! அவர் பிரகாசிக்காவிட்டாலும் அணியில் பல பெட்ஸ்மேன் இருந்தனர்! தன்னை அணியில் நிலைநிறுத்தவே கோலி ஆரம்பத்தில் போராடினார்!

சச்சின் கோலியின் ஆரம்பகாலமே இவ்வாறு மாறுபட்ட இரு பக்கங்களாக காணப்படுகின்றன!

அடுத்து bowlers ! சச்சின் , கோலி எதிர்கொண்ட பந்துவீச்சாளர்கள் இற்கு இடையில் பாரிய வேறுபாடுகள் உண்டு ! இப்போதிருக்கும் பந்துவீச்சாளர்கள் திறமையற்றவர்கள்  என்பது என்வாதம் அல்ல! மாறாக முன்னர் இருந்த பந்துவீச்சாளர்கள் ஒப்பீட்டளவில் இப்போதிருப்பவர்களை பன்மடங்கு சிறந்தவர்கள்! ஒரு பந்துவீச்சாளர் சிறந்தவரா என்பது away performances , ஆசிய பந்துவீச்சாளர் ஆயின் outside Asia அல்லது ஆசியவிற்கு வெளியே உள்ள பந்துவீச்சாளர் ஆயின் performance in Asia என்பவைகளை வைத்தே தீர்மானிக்க முடியும்! அவ்வாறு நீங்கள் இப்போதிருக்கும் பந்துவீச்சாளர்களையும் முன்னர் இருந்த பந்துவீச்சாளர்களையும்  குறைந்தது முதல் 50 போட்டிகளை மாத்திரம் "Home/away performance" , "Outside Asia " , "Inside Asia performance" ஆகியவற்றை ஒப்பீடு செய்து பாருங்கள்! யார் மிகச்சிறந்த பந்துவீச்சாளர்கள் எனபது புரியும்! (அவ்வாறு ஒப்பிடுவதும் சிறந்த ஒப்பீடாக இருக்காது எனினும் ஒரு தெளிவிற்காக)
இதனடிப்படையில் பார்த்தால் சச்சின் வகார் , அக்தார் , முரளி , வோர்ன் , மெக்ராத் , பொலோக், வாஸ் , வசீம் அக்ரம் போன்ற வீரர்களை எதிர்கொள்ள வேண்டிய தேவை இருந்தது! ஆனால் கோலி அவ்வாறான பந்துவீச்சாளர்கள எதிர்கொண்டாரா என்பது தெரியவில்லை ஆனால் கோலி அவர் காலத்தில் காணப்படும் சிறந்த பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்கிறார் என்பது மறுக்க முடியாத உண்மை!

கிரிகெட் பிச்கள் பெரிதும் ஒரு பெட்ஸ்மேன் இல் பாதிப்பை ஏற்படுத்துவதாக காணப்படுகிறது! 2007 T20i அறிமுகப்படுத்தலின் பின் பிச்களை அமைக்கும் முறை பெரிதும் மாற்றங்களை கண்டிருக்கிறது! T20 இற்கு முன் பிச்கள் பெரும்பாலும் நியூற்றலாகவே அமைக்கப்பட்டன! பேட்டிங் போலிங் இரண்டையும் கையாளும் அளவு பிச்கள் காணப்பட்டன! ஆனால் ஒரு entertainment medium ஆக கிரகெட் மாற்றம் பெற்று T20 வந்ததன் பிற்பாடு பிச்கள் பேட்டிங் பிச்களாகவே அமைக்கப்படுகின்றன! Football Tennis போன்று கிரிகெட் உம் மக்களை கவர வேண்டும் என்பதற்காகவே T20 அறிமுகப்படுத்தப்பட்டது!  பேட்டிங் பிச்களை   அமைத்து அதிரடியான ஓட்டக்குவிப்புகள் இடம்பெற்றாலே மக்கள் அதை விரும்புவர் டெஸ்ட் ஓடிஐ போன்று இருந்தால் மக்களை கவர முடியாது என்ற நிலை அறிந்து பிச்கள் இப்போது பேட்டிங் பிச்களாக மாற்றப்படுகின்றன! ஒரு Sports ஆக இருந்த கிரிகெட் இப்போது பணம் சம்பாதிக்கும்  Industry ஆகிவிட்டது! இதனால் பெட்ஸ்மேன் களிற்கு அதிக சாதகம் காணப்படுகிறது! அதுமாத்திரமன்றி பெட்ஸ்மேன் கள் அதிக ஓட்டங்களை குவித்தால அணியில் நிலைத்திருக்க முடியும் என்ற நிலையும் தோற்றம்பெற்றுவிட்டது! இதனால் தோற்றம் பெற்ற  entertainment cricket ஆல் கிரகெட் இன் உண்மை வடிவம் சிதைந்து போய்விட்டது! இவ்வாறான T20 இன் தாக்கம் கிரிகெட்டில் பெரிதும் காணப்பட்ட காலப்பகுதியில் தான் கோலி கிரகெட் அரங்கு நுழைகிறார் . முதல் இரண்டு வருடங்கள் ஓடிஐ , டிடுவன்டி பெட்ஸ்மேன் ஆக மாத்திரம் செயற்படுகிறார்! ஆனால் சச்சின் இன் வருகையின் போது அவ்வாறான ஓர் நிலை இருக்கவில்லை! அது கோலியின் வருகையின் போதிருந்த நிலைக்கு நேர்எதிரானது! டெஸ்ட் ஓடிஐ என்பவை தான் கிரிகெட் ! ஓடிஐ இல் 200-230 வரை அடித்தாலே போதும் என்ற நிலை! அடித்தாடும் நிலை கிடையாது! தனி நபர் செஞ்சரி என்பது அப்போது கடினமான இலக்கு! டெஸ்ட் போட்டிகள் 5 நாற்களும் முழுமையாக இடம்பெற்றன! அது தான் கிரிகெட் இன் உண்மை வடிவமும் கூட! இக்காலத்தில் தான் சச்சின் தன்னை வளர்த்துகொண்டார்! கோலி முற்றிலும் அடித்தாடும் யுகத்தில் வளர்கிறார்! சச்சின் தடுத்தாடும் யுகத்தில் வளர்ந்தார்!

சரி மேல கூறிய காரணங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்றால் சில நியமங்களை வைத்து சச்சின் கோலியை ஒப்பிட்டால்..

கோலி ஓடிஐ இல் டெபியூ ஆன ஆண்டு 2008 அப்போது டிடுவன்டி உம் அறிமுகமாகிவிட்டது! டிடுவன்டி தாக்கம் சச்சின் கோலி ஆகிய இரண்டு பேரிலும் இருந்திருக்கும்! ஆனாலும் சச்சின் கோலி இன் டெபியூ இற்கு முன் (2008 இற்கு முன்)  397 இன்னிங்ஸ் களில் விளையாடிய  அனுபவம் உடையவர் ஆனால் கோலி கு இன்டர்நேசனல் கிரிகெட் புதுசு! இப்போது கூட ஒப்பிட முடியாது! கோலி முதல்போட்டி விளையாடும் போது சச்சின் 397 இன்னிங்ஸ் அனுபவமுடையவர்! கோலி முதல் போட்டி விளையாடும் போது சச்சின் விளையாட்டில் ஓய்வுபெறும் நிலை! 2008-2012 வரையேயான இருவரிற்கும் பொதுவாக இருக்கும் காலப்பகுதியின் நிலையை அலசினால்;

2008-2012 : (ODI only)

•Overall performance:

சச்சின்-                       கோலி-
Innings : 55                 Innings: 88
Runs : 2464.                Runs: 3886
Average: 38.87           Average: 49.87
50s : 9                          50s: 21
100s : 8                        100s : 13

•Away from Home

சச்சின் -                      கோலி-
Innings: 32.                 Innings: 50
Runs: 1226.                 Runs: 2043
Average: 42.99.          Average: 47.80

•Out of Asia

சச்சின்-                       கோலி-
Innings: 23.                 Innings: 29
Runs: 825.                   Runs: 1222
Average: 42.5.            Average: 52.85

ஆக இந்தக்காலப்பகுதியில் சிலபல காரணிகளை கருத்திற்கொள்ளாமல் வெறுமனே புள்ளிவிவரங்களை வைத்து பார்த்தால் கோலி சச்சினை விட சிறந்தவராக காணப்படுகிறார்! ஆனால் சச்சின் இன் முழு கெரியரையும் கோலியின் கெரியருடன் ஒப்பிட முடியாது! இந்த பதிவே அதை தெளிவுபடுத்த தான்!

இரண்டு பெட்ஸ்மேன் களை ஒப்பிடும் போது மேல் சொன்ன காரணங்கள் இருவரிற்கும் இடையில் ஒத்துப்போனாலும் அடுத்து கவனிக்க வேண்டிய விடயம் பெட்டிங் position! Opening batsmen ஆக விளாடுவதிற்கும் , One down batsmen ( 3rd position) ஆக விளாடுவதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு! Opening batsmen புதிய பந்தை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும்! புது பந்து சீம் ஆக கூடிய பண்பு கொண்டது ஆனால் 3rd position அவ்வாறில்லை! 5 அல்லது 10 ஓவர்கள் பழமையான பந்தையே விளையாடுவர்! சச்சின் 452 innings இல் 340 innings opener (15000+ runs ; 48+ average) ஆகவே விளையாடியிருக்கின்றார்!  3rd positionஇல் 10  innings களும் 4th positionஇல் 61 innings களும் . ஆனால் கோலி opener ஆக 6 inningsகளிலும் 3rd position இல் 153 innings களிலும் ( 7983 runs ; 69+ average) ஆடியிருக்கிறார்!
ஆக சச்சின் ஏறத்தாழ 80 % ஓட்டங்களை ஓபனராக பெற்றிருக்கிறார்! அவரது பல சாதனைகளும் இந்த ஓபனர் காலப்பகுதியில் தான் பெற்றார்! ஆனால் கோலி 75% ஓட்டங்களை 3rd position இல் ஆடி பெற்றிருக்கிறார் கோலியின் அத்தனை ரெகாட்களும் இந்த காலத்தில் தான் பெற்றிருக்கிறார்! ஆக இவ்வாறு வேறு வேறு வித்தியாசமான பேட்டிங் பாசிசன்களில் ஆடிய இரு வீரர்களை எந்த முறையில் ஒப்பீடு செய்வீர்கள்?
2008-2012 பகுதியிலும் இரண்டு வீரருக்கு வேறு வேறு பேட்டிங் பொசிசனில் தான் ஆடியிருப்பர் . ஆக அந்த காலப்பகுதியில் கூட சச்சின் கோலியை ஒப்பிட முடியாது!



Highest average in wins ஐ பார்த்தால்  11157 run களை 56.63 என்ற average இல் 33 century  59 half century என்ற கணக்கில் வெற்றியீட்டிய ODI போட்டிகளில் சச்சின் பெற்றிருக்கிறார்!
ஆனால் கோலி     7000 ஓட்டங்களை  70+ எனும் average 28+ century அடங்களாக பெற்றிருக்கிறார்!
இதனடிப்படையில் கோலி சச்சின் ஐ விட முன்னிலையில் இருப்பது போல் இருந்தாலும் சச்சின் 1989 - 2000 வரையேயான காலப்பகுதியில் பல போட்டிகளை ( 463 போட்டிகளில் 263 போட்டிகள் 1989-2000 காலப்பகுதியில் ஆடியிருக்கிறார்) வென்று கொடுத்திருக்கிறார் ஆனால் கோலி போட்டிகளை வென்றுகொடுத்த போது கோலியில் மாத்தரிம் அணி தங்கியிருக்கவில்லை சச்சினை போல்!
அதேபோல் மேலே சொன்ன காரணிகள் அனைத்தும் இதிலும் தாக்கம் செலுத்தும்!

ஆக இந்த கட்டுரை இன் முடிவாக ;
இரு வீரர்களை ஒப்பிடுவதாயின் அவ்விரு வீர்ர்களிற்கும் இடையில் ஒற்றுமைகளை முதலில் பட்டியல் இட வேண்டும்! அவ் ஒற்றுமைகளை கொண்டே அவ்விரு வீரர்களும் ஒப்பிட பட வேண்டும்! இரு வேறு காலகட்டங்களில் ஆடிய இரு வீரர்களிடம் ஒற்றுமையான காரணிகள் மிக மிக குறைவாகவே இருக்கும்! ஆக அவர்களை ஒப்பிடுவது என்பது யானையை பூனையுடன் ஒப்பிடுவது போன்றானது! ஆனால் ஒரே காலகட்டத்தில் ஆடும் இரு வீரர்களை தாராளமாக ஒப்பிடலாம் காரணம் அவர்கள் இருவரிற்கும் இடையில் 50% அதிகமான ஒற்றுமைகள் காணப்படும்!  கோலியை தாராளமாக ரூட் உடன் ஒப்பிடலாம்! ஆனால் சச்சின் உடன் ஒப்பிட முடியாது!

சச்சின் கோலி அவரவர் காலத்தில் இருவரும் ஜாம்பவான்களே! இன்னும் 100 வருடங்களின் இருவரின் பெயரும் பேசப்படும் என்பதில் ஐயமில்லை! சச்சின் இன் ரெகாட்ஸ் , கோலி இன் ரெகாட்ஸ் ஆகியவற்றை கொண்டாடலாம் ஆனால் அவற்றை ஒப்பிட முடியாது! 250+ இன்னிங்ஸ் இல் சச்சின் 10000 ஓட்டங்கள் கடந்தார் அதை 205 இன்னிங்ஸ் இல் கோலி கடக்க்கிறார்! இது வெறுமனே ரெகாட்ஸ் ஆக பாருங்கள் இரு வீரர்களையும் அனுமானிக்கும் காரணியாக பார்க்காதீர்கள்! காரணம் 1990-2000 வரையேயான காலத்தில் பெறப்பட்ட 1000 ஓட்டங்களிற்கும் 2000-2010 வரை பெறப்பட்ட 1000 ஓட்டங்களிற்கு பாரிய வேறுபாடு உண்டு!

50-75% வரையேயான ஒற்றுமைகளை கொண்ட இரு வீரர்கள் இருந்தால் ஒப்பிடுங்கள்! தப்பில்லை! இரு வேறு காலங்களில் ஆடிய இருவரிடையில் இவ்வாறான கணக்கில் ஒற்றுமை இருக்காது புரிந்து கொள்ளுங்கள்! கோலி சச்சின் இருவரும் கொண்டாட பட வேண்டியவர்கள், கம்பேர் செய்யப்பட வேண்டியவர்கள் அல்ல! இருவரும் இரு வேறு வேறான துருவங்கள்!

Sajeeth Raheem
சச்சின் ? கோலி? யார் சிறந்தவர்? சச்சின் ? கோலி? யார் சிறந்தவர்? Reviewed by Tamil One on November 18, 2018 Rating: 5

சஜித் பிரதமர் ஆகலாமா!!??

November 18, 2018
2004 பெப்ரவரி...காலி மாவட்டத்தின்_  பெந்தோட்டை ஹோட்டல் நிஷப்தத்தில் உறைந்து போய் இருந்த ஒரு அதிகாலை நேரம்.வார இறுதி விடுமுறையைக் கழிக்கத் தனது பாரியாருடன் வந்து இருந்த பிரதமர் ரணில் தொலை பேசி அடித்த போது வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தார்.' ஹலோ ' சொன்னார்.மறுமுனை ஏதோ சொன்னது.' நோ, நெவர், இம்பாஸிபல்' என்றார்.நழுவி விழப் போன ரிஸீவரை இறுகப் பற்றிக் கொண்டார்.ரிஸீவரைப் பிடிக்கப் போராடிக் கொண்டு இருந்த போது அவரது இரண்டே கால் வருட ஆட்சி ஜனாதிபதி சந்திரிக்காவால் அதிரடியாகக் கலைக்கப்பட்டு இருந்தது..

மறு முனையில் தொலைபேசி அழைப்பில் இருந்தது ரணிலின் ஆஸ்தான சகா மலிக் சமரவிக்கிரம...பதட்டத்துடன் தயாரானார் ரணில்..

'எரிக் சொல்ஹேய்ம் , ஜார்ஜ் டப்ளிவ் புஷ், கொபி அனான் எல்லோரிடமும் பாராளுமன்றத்தைக் கலைக்க மாட்டேன் என்று சந்திரிக்கா சொன்னாரே ? எப்படிக் கலைத்தார் ?' குழப்பத்தின் ரேகைகள் உடம்பெங்கும் பரவ கொழும்பை அடைந்த ரணிலை சூழ்ந்து கொண்டார்கள் கட்சியினர்....

"2001 இல் பொருளாதாரத்தில் பாதாளத்தில் இருந்த நாட்டைப் பாரமெடுத்து கடன் எல்லாம் கட்டி புலிகளுடன் சமாதானம் ஒப்பந்தம் செய்து நாடு அமைதிப்பூங்காவாகி இருக்கிறது .இப்படிப்பட்ட ஒரு நிலையில் தான் போர் விரும்பிகளான ஜே.வி.பி இன் துணையோடு சந்திரிக்கா கலைத்து துடைத்து எறிந்தார்" என்று சர்வதேச ஊடகங்களிடம் புலம்பினார்.

'புலிகளுக்கு நாட்டைக் காட்டிக் கொடுத்து வளங்களை விற்று தன்னிச்சையாகத் தொழிற்பட்டார் ரணில்' என்று அரச ஊடகங்கள் பிரச்சாரத்தை முடக்கிவிட்டன."இந்த மண்ணுக்குப் பொருத்தமே இல்லாத சொசேஜஸ் தின்னும் மாடுகள்" என்று ரணிலையும் ரணிலுடன் இருந்த கூட்டத்தையும் விமர்சித்தார் விமல் வீரவன்ச..

தேர்தல் நெருங்கியது.. சர்வதேசம் எல்லாம் ரணில் ரணில்...உள்ளூர் ஊடகங்களில் சக்தியும் சிரஸவும் அப்போது  ரணிலைக் கொண்டாடின..முள்ளுக் கம்பிக் கூட்டில் இருந்து பூந்தோட்டம் உருவாகப் போவது  போல இருந்த சமயம் அந்தக் கனவு கலைக்கப்பட்டுவிட்டதாக ஒரு விளம்பரத்தை அப்போது சிரஸ அடிக்கடி ஒளிபரப்பியது..சக்தி, சிரஸவில் வேலை செய்பவர்கள் எல்லாம் புலிகள் என்றார் விமல் வீரவன்ச.....

தேர்தல் நெருங்கியது..அடிமட்ட சிங்களவர்கள் வாழும் கிராமங்களுக்குச் சென்ற ரணில் ' சமாதானம், சமாதானம் ' என்றார்..சமஷ்டி கொடுக்கவில்லை..சுயாட்சி என்றார்..சிரிபாலாக்களுக்கும் அமரசேனாக்களுக்கும் இந்த மொழி புரியவில்லை..ரணிலை வேற்றுக் கிரகவாசியாய்ப் பார்த்தனர்.எதிர்பார்த்தது போலவே யூ.என்.பி 82 ஆசனங்களைப் பெற்றுத் தோல்வியடைந்தது.....

கிட்டத்தட்ட அதே போன்ற ஒரு நிலமைதான் இப்போதும் ஏற்பட்டு இருக்கிறது..அப்போது போலவே தனக்காய்ப் பாடுபட்டு கட்சியை வெல்வதற்கு வியர்வை சிந்திய தொண்டர்களைக் கவனிக்கவில்லை ரணில்..ரணிலை விமர்சிக்கும் காரணங்கள் அப்படி அப்படியே தான் இருக்கின்றன..புதிதாய் மத்திய வங்கி கொள்ளை வேறு..ஆனால் ஊடக பலமே ரணிலுக்கு இல்லை.அப்போது தோள் கொடுத்த  சிரஸ எப்போது எகிறுகிறது..'தரை மேலே பிறக்க வைத்தான் எங்களை டீ என்.எல் பார்க்க வைத்தான்' என்று யூ என்.பி ரசிகர்கள் அண்டெனாவை திருப்பியபடி ரணிலின் அண்ணனின் டீ என்.எல் தொலைக்காட்சி முன்னாள் குவிந்து கிடக்கின்றனர்..அது வேற மழை பலமாய் வந்தால் வேலை செய்யாது..

சிரிசேனா செய்து இருக்கும் அரசியல் யாப்பு  மீறலை உச்ச நீதிமன்றம் எப்படிப் பார்க்கப் போகிறது என்று தெரியவில்லை..நெருக்கடி நிலமை என்ற பேரில் பாராளுமன்றத்தைக் கலைத்து இருக்கிறார்.உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ' சிரிசேனா செய்தது சரி ' என்று வந்தால் தேர்தலுக்குச் செல்ல வேண்டும்.இப்போது இருக்கும் நிலையில் மகிந்த வெல்லப் போவது தெள்ளத் தெளிவு..தோல்வியின் பரிமாணத்தைக் கொஞ்சமாவது குறைத்து குறைந்தது 85 ஆசனங்களையாவது யூ.என்.பி தனித்துப் பெற விரும்பினால் ரணில் உடனே பதவி விலக வேண்டும்...

ரணிலின் தலைமையில் தேர்தலை எதிர்கொள்வது ஜனநாயகத்திற்கு அடிக்கும் கடைசி ஆணி...130 ஆசனங்களுக்கு மேல் பெற்று மகிந்த - சிரிசேனா தரப்பு வெற்றி பெற்றால் மிச்சம் உள்ள ஆட்களை யூ என்.பி இல் இருந்து வாங்கி மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்று அரசியல் யாப்பை மீண்டும் மாற்றும்.அது நிச்சயம்.அப்போது நடக்கப் போகும் மகிந்த - சிரிசேனா உரசல்கள் வேறு சேப்டர்....

சஜித் பிரேமதாஸ பற்றிய சரியான விம்பம் ஒன்று எமக்கில்லை..அவர் தேசிய பிரச்சினைகள் பற்றி எந்த நிலைப்பாட்டில் இருக்கிறார் என்று தெரியவில்லை..ஆனால் சிங்கள வாக்குகளை அள்ள யூ.என்.பி இற்கு சஜித்தை தலைவராக்குவதைத் தவிர வேறு வழியில்லை..இல்லாவிட்டால் படுமோசமான தோல்வி யூ.என்.பி இற்குக் காத்து இருக்கிறது....

Zafar Ahamed
சஜித் பிரதமர் ஆகலாமா!!?? சஜித் பிரதமர் ஆகலாமா!!?? Reviewed by Tamil One on November 18, 2018 Rating: 5

சிறுநீர் கழிப்பது பற்றி தெரியாத சில உண்மைகள்

November 18, 2018
நம் உடலில் தேவையானவற்றை ஊட்டச்சத்தாக, கொழுப்பாக பிரித்து எடுத்த பிறகு, வேண்டாதவைகள் உடலிருந்து சிறுநீராகவும் மலமாலவும் வெளியேற்றுகிறது.

மலம், மற்றும் சிறுநீர் உடலுக்கு வேண்டாதவை என்ற போதலும், ஒருவரது உடல் நலம் எப்படி இருக்கிறது?

அவரது ஆரோக்கியம் சீர்குலைந்து வருகிறதா?

ஒருவரது உடலில் என்ன நோய் தொற்று அல்லது நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளது என்பதை மலம் மற்றும் சிறுநீரில் ஏற்படும் மாற்றங்களை வைத்து கண்டறிய முடியும்!

நீங்கள் சிறுநீரை அடக்குபவரா? அப்ப கட்டாயம் இத படிங்க…

ஒருநாளுக்கு ஒருவர்
7 முறை வரை சிறுநீர் கழிப்பது சாதாரணமாகும். இதை காட்டிலும், மிக குறைவாக அல்லது அதிகமாக சிறுநீர் கழிப்பது உங்கள் ஆரோக்கியத்தில் ஏதோ மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதன் அறிகுறி.

நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்றால் குறைந்தபட்சம் 7 நொடிகளாவது சிறுநீர் கழிப்பீர்கள். மிக அவசரமாக சிறுநீர் கழிப்பது போன்ற உணர்வு இருந்தும் 2 நொடிகள் மட்டும் சிறுநீர் கழிக்கிறீர்கள் என்றால் நீங்கள் ஏதோ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என அர்த்தம்.

உங்கள் சிறுநீரின் நிறத்தை வைத்தே உங்கள் உடல்நிலையை பற்றி அறிந்துக் கொள்ள முடியும்.,

வெள்ளை (சுத்தமாக) – நீர்ச்சத்து அதிகமாக இருக்கிறது.

வெளிறிய மஞ்சள் – போதுமான அளவு நீர்ச்சத்து

மஞ்சள் – உடலில் நீரச்சத்து குறைந்து வருகிறது.

பிரவுன் – கல்லீரல் தொற்று / பழைய இரத்தம்.

சிவப்பு / பின்க் – தூய இரத்தம் சிறுநீரில் கலந்துவருகிறது / சிறுநீரக கோளாறு / புற்றுநோய்.

நீலம், பச்சை – தவறான மருந்துகள்
உட்கொள்ளுதல்

300-500மி.லி. அளவிலான சிறுநீரை அடக்கி வைத்துக் கொள்ள இயலும்

ரோமர்கள் அவர்களது சிறுநீரை கொப்பளிக்கும் பழக்கம் கொண்டிருந்தனர். சிறுநீரில் இருக்கும் அமோனியா பற்களை வெள்ளையாக வைத்துக் கொள்ள உதவும் என அவர்கள் எண்ணினார்.

உங்கள் சிறுநீரின் நிறத்தை வைத்தே உங்கள்
உடல்நிலையை பற்றி அறிந்துக் கொள்ள முடியும்.,

வெள்ளை (சுத்தமாக) – நீர்ச்சத்து அதிகமாக இருக்கிறது.

வெளிறிய மஞ்சள் – போதுமான அளவு நீர்ச்சத்து

மஞ்சள் – உடலில் நீரச்சத்து குறைந்து வருகிறது.

பிரவுன் – கல்லீரல் தொற்று / பழைய இரத்தம்.

சிவப்பு / பின்க் – தூய இரத்தம் சிறுநீரில்
கலந்துவருகிறது / சிறுநீரக கோளாறு /
புற்றுநோய்.

நீலம், பச்சை – தவறான மருந்துகள் உட்கொள்ளுதல் / உணவில் அதிகப்படியான சாயம் கலப்பு

சிறுநீர் கழிக்கும் போது இனிப்பு வாசனை வருகிறது எனில், உங்களுக்கு நீரிழிவு / சர்க்கரை நோய் ஏற்பட்டுள்ளது என்பதன் அறிகுறி.

சிறுநீர் மிகவும் துர்நாற்றம் வீசுகிறது எனில், சிறுநீரகத்தின் வழியாக க்ளூகோஸ் மற்றும் புரதம் அதிகப்படியாக வெளியேறுகிறது என்று அர்த்தம்.

மருத்துவர்கள் ஒளிகுர்யா (oliguria) எனும் ஓர் நிலை இருக்கிறது. இது, நீங்கள் போதுமான அளவு சிறுநீர் கழிப்பது இல்லை என்பதை வெளிக்காட்டுகிறது என்கின்றனர்.

நாம் கழிக்கும் சிறுநீரில் சோடியம், பொட்டாசியம் மற்றும் க்ளோரைட் போன்ற 3000 வகையிலான கூறுகள் இருக்கின்றன.

டூனா, காரமான உணவுகள், காபி போன்ற உணவுகளை அதிகமாக உட்கொள்வதால் உங்கள் சிறுநீரின் நாற்றத்தில் மாற்றம் உண்டாக்கும்.

காட்டில் அல்லது ஆட்கள் இல்லாத இடத்தில் தொலைந்து போனாலோ, கையில் நீர் இல்லாத சமையத்தில் சிறுநீரை அருந்தலாம் என சிலர் கூறுவதுண்டு. ஆனால், இது தவறு. சிறுநீரில் இருக்கும் அதிகப்படியான உப்பு, உடலில் நீர் வறட்சி உண்டாக காரணியாக அமையும்.

Parauresis எனப்படுவது சிறுநீர் கழிக்க வெட்கப்படும் நிலை ஆகும். அருகில் யாரேனும் இருந்தால் சிலர் சிறுநீர் கழிக்க சங்கோஜப்படுவார்கள்.

நீச்சல் குளத்தில் குளிக்கும் போது கண்கள் சிவப்பது குளோரின் காரணத்தால் அல்ல. நீச்சல் குளத்தில் அதிகமாக சிறுநீர் கலப்பு ஏற்பட்டிருப்பதால்.

குழந்தைகள் கருப்பையில் இருக்கும் போதே சிறுநீர்ன்ய்கழிக்க துவங்கிவிடுவார்கள்.
சிறுநீர் கழிப்பது பற்றி தெரியாத சில உண்மைகள் சிறுநீர் கழிப்பது பற்றி தெரியாத சில உண்மைகள் Reviewed by Tamil One on November 18, 2018 Rating: 5

சர்வ கட்சி சந்திப்பு!! - தற்போதைய நிலை

November 18, 2018


இன்று மாலை அனைத்து கட்சி கூட்டத்திற்கு கலந்து கொள்ள மாட்டேன் என்று சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
 இதே வேளை JVP கட்சி ஜனாதிபதியின் அழைப்புக்கு எதிரா கடிதமொன்றை அனுப்பி உள்ளது..
இன்று மாலை 5மணிக்கு அனைத்து கட்சி கூட்டத்திற்கு எந்த கட்சியினர் செல்லப் போகிறார்கள் என்று பொருந்து இருந்து தான் பார்க்க வேண்டும்..
ஜனாதிபதியின் இந்த முடிவு பாராளுமன்றத்தில் இடம் பெறுகின்ற கலவரத்துக்கு ஒரு முற்று புள்ளியாக கூட இருக்கலாம்..
சர்வ கட்சி சந்திப்பு!! - தற்போதைய நிலை சர்வ கட்சி சந்திப்பு!! - தற்போதைய நிலை Reviewed by Tamil One on November 18, 2018 Rating: 5

தொடரை இழந்த இலங்கை

November 18, 2018

மீண்டும் ஒரு முறை தொடரை இழந்த இலங்கை.
இலங்கை ரசிகர்கள் மீண்டும் ஏமாற்றத்தினை தழுவினர்...
தொடரை இழந்த இலங்கை தொடரை இழந்த இலங்கை Reviewed by Tamil One on November 18, 2018 Rating: 5

புதிய பிரதமருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

November 18, 2018
பிரதமர் கௌரவ மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களின் 72 ஆவது பிறந்த தினம்  இன்றாகும் (18-11-2018).

புதிய பிரதமருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். புதிய பிரதமருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். Reviewed by Tamil One on November 18, 2018 Rating: 5

ஜனாதிபதி மைத்றியின் அதிரடி அறிக்கை

November 18, 2018
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளின் பங்குபற்றலுடன் சர்வ கட்சி சந்திப்பொன்று 2018.11.18 பி.. 5.00 மணிக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இதில் அரசியல் கட்சிகளினதும் தலைவர்களும் கலந்து கொள்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கும் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.




கடந்த சில நாட்களாக பாராளுமன்றத்தில் நடந்த அரசியல் அமைதியின்மை மற்றும் குழப்ப நிலையை முடிவுக்கு கொண்டுவந்து.

 பாராளுமன்ற நடவடிக்கைகளை சீராக முன்னெடுப்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இடையில் உடன்பாட்டினை ஏற்படுத்தும் நோக்குடன் ஜனாதிபதியினால் இந்த சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
ஜனாதிபதி மைத்றியின் அதிரடி அறிக்கை ஜனாதிபதி மைத்றியின் அதிரடி அறிக்கை Reviewed by Tamil One on November 18, 2018 Rating: 5
Powered by Blogger.