படர்தாமரை / வட்டக்கடியின் அறிகுறியும் நிவாரணமும்
Irumbu Thirai News
January 07, 2019
வட்டக்கடி என பொதுவாக சொல்லப்படும்,
பங்கசுக்களின் தொற்றுக்களால் ஏற்படக்கூடிய ஒரு வகையான தோல் பிரச்சனை தான் படர்தாமரை. இது மற்றவர்களுக்கு எளிதில் பரவக்கூடிய ஒரு தொற்றுநோயாகும். இதனை ஆரம்பத்திலேயே சரி செய்வது அவசியமாகும். இப் படர்தாமரை நமது உடலின் தலை , கால் , அக்குள் , இடுப்பு ( அரை ) மட்டுமல்லாது எந்த பகுதியில் வேண்டுமானாலும் வர கூடிய சாத்தியம் இருக்குன்றது. சருமத்திலுள்ள படர்தாமரை ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு நேரடியாகவோ மற்றும் மறைமுகமாகவோ பரவும் அபாயம் கொண்டது.
இதன் அறிகுறிகளாக அரிப்புடையதாக வட்ட வடிவில் சிவந்து காணப்படும் .
இது யாரை இலகுவில் தாக்குமா
- ஆடைகளை பகிர்ந்து அணிபவர்கள்
- நோயெதிர்ப்பு குறைந்தவர்கள்
- அதிக வியர்ப்பவர்கள்
- towelஐ பகிர்ந்து கொள்பவர்கள்.
ஏற்படாமல் என்ன செய்ய வேண்டும்??
1 . தினமும் இரு முறை தொற்று நீக்கி சவர்க்காரம்
கொண்டு குளிக்கவும்
2 . ஒரு முறை கழற்றிய ஆடைகளை மீண்டும்
கழுவாமல் அணிய வேண்டாம்
3 . மிகவும் சுத்தம் பேண வேண்டும்
4. மற்றும் உங்கள் ஆடைகளை , துடைக்கும்
துணியை , படுக்கையை பகிர வேண்டாம் .
5. Western toilet use பண்ணுபவர்கள் , தொடைகளில் இருக்கும் சிரங்குகளில் அவதானமாக இருக்க வேண்டும் ஏனெனில் வீட்டில் உள்ள மற்றவர்களுக்கும் பரவ அதிக வாய்ப்புண்டு . இதை தவிர்க்க toilet பாவித்த பின் இருக்கைகளை நன்கு நீரால் கழுவி விடவேண்டும்.
எவ் வகை Creamயினை பயன்படுத்தலாம்
1 . Miconazole cream
2 . Clotrimazole cream
3 . Terbinafine cream
எவ்வகை Tabletயினை பயன்படுத்தலாம்
1 . Griseofulvin 500 mg இரவு சாப்பாட்டின் பின்
குறைந்தது 2 வாரங்களுக்கு
2 . Fluconazole 150 mg வாரத்துக்கு ஒரு
முறைப்படி 4 வாரங்களுக்கு
மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும் ஒரு creamயும் இரு Tabletயினையும் பாவித்தால போதும் குணமாகும்.
இவ்வகையான cream தேமல் நோய்க்கும் பாவிக்க முடியும் . அதோடு வைத்தியரிடம் சுகாதார ஆலாசனைகளையும் பேண வேண்டும் .
Dr. CIM. Hassan Soofi - Sri lanka 🇱🇰
அனைவருக்கும்
படர்தாமரை / வட்டக்கடியின் அறிகுறியும் நிவாரணமும்
Reviewed by Irumbu Thirai News
on
January 07, 2019
Rating: