குறைந்த கார்பன் கொண்ட உணவுகள்

January 07, 2019
 ஆறு வகையான சத்துக்கள் உண்டு
1. புரதம்  ( Protein ) 
2. காபோவைதரேட்டு ( Carbohydrate )  
3. கொழுப்பு ( Lipid ) 
4. உயிர்ச்சத்து ( Vitamins ) 
5. கனிமம் ( Mineral ) 
6. நீர் ( Water ) 



ஒரு ஆணுக்கு 2500 கலோரியும் பெண்ணுக்கு 2000 கலோரியும் அவர்களது உடம்பினை சீராக வைத்து இருப்பதற்கு சராசரியாக நாளாந்தம் தேவைப்படுகிறது. இதில் அண்ணளவாக 60 வீதம் ,  30 வீதம் , 10 வீதம் முறையாக காபோவைதரேற்று ,கொழுப்பு , புரதம் இருத்தல் வேண்டும்
1 g புரதத்தில் 4 கலோரிகளும் 1 g காபோவைதரேற்றில் 4 கலோரிகளும் 1 g கொழுப்பில் 9 கலோரி சத்துக்களும் காணப்படும்

இவற்றில் காபோவைதரேட்டுக்கள் ( காபோ ) அற்ற அல்லது மிகவும் குறைந்த உணவுப் பழக்க வழக்கங்களை கடைப்பிடிப்பதே Ketogenic Diet ஆகும்

இதில் ஒரு நாளைக்கு 20 g ( 80 கலோரிகள் ) அல்லது அதை விட குறைவான காபோ அளவு மட்டும் கொண்ட உணவுகளையே உட்கொள்ள வேண்டும்


கீட்டோ உணவு முறையில் 
75 வீதம் கொழுப்புக்களினாலும் 
5 வீதம் காபோவைதரேற்றுக்களினாலும் 
20 வீதம் புரதங்களினாலும் நாளாந்த கலோரி தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்

இந்த முறையினால் உடம்பில் குளுக்கோஸ் அளவு மிகவும் குறைவதால் உடம்பின் சத்துத் தேவைகள் உடம்பில் தேங்கி இருக்கும் கொழுப்புக்கள் 
உடைவதன் மூலம் பெறப்படும்

கீட்டோ உணவு முறையின் பயன்கள் . . . 

1. பசியைக் குறைக்கும்

காபோ உணவுகள் குறைவாக சாப்பிட்டால்  இன்ஸுலின் குறைவாக சுரக்கப்படும் . இன்சுலின் குறைவதால் உடலில் பசி ஏற்படுவது குறையும். மற்றும் புரத உணவுகள் அதிகமாக எடுப்பதனால் விரைவில் நிரப்பமும் ஏற்படும்

2. எடையைக் குறைக்கும் -                                                     

காபோ உணுவுகள் நிறுத்தப்படுவதால் உடலுக்குத் தேவையான சக்திகள் உடலில் தேங்கி இருக்கும் கொழுப்புக்கள் உடைவதன் மூலம் பெறப்படும். இதன் மூலம் உடல் நிறை குறையும் . உடலில் உள்ள கொழுப்புக்களும் குறையும்

3. சீனியை குறைக்கும் -                                               

காபோ உணவுகள்தான் சீனியை அதிகரிக்கும் உணவுகள் என்பதால் அவற்றை நிறுத்தப்படுவதால் உடலில் உள்ள சீனி அளவும் குறையும் . இதன் மூலம் சீனி வருத்தம் உடையவர்களுக்கு தேவைப்படும் மருந்துகளின் அளவு 50 வீதத்துக்கும் மேலாக  குறைவடையும் . சில வேளைகளில் மருந்து பாவிக்க தேவையற்ற நிலையும் ஏற்படலாம்


( ஆனால் Type 1 சீனி வருத்தம் உடையவர்களுக்கு உகந்தது அல்ல - கீட்டோ அசிடோசிஸ் ஏற்படும்

4. கொழுப்பை குறைக்கும் -             
                          
உடலில் தேங்கி இருக்கும் கொழுப்புகளில் தோலின் கீழ் உள்ள கொழுப்புகளுடன் சேர்த்து வயிற்றுக்குள் உள்ள உறுப்புகளைச் சுற்றி இருக்கும் கொழுப்புகளும் குறைவடையும் . உதாரணமாக Fatty Liver எனப்படும் ஈரலைச் சுற்றியுள்ள கொழுப்புக்கள் குறைவடையும்

5. இரத்த அழுத்தத்தை குறைக்கும் -      

 சரியான விளக்கம் இல்லாவிட்டாலும் இந் நடைமுறைகளை மேற் கொண்டவர்களின் இரத்த அழுத்தம் குறைவடைந்ததையும்  ஆய்வுகளின் முடிவுகளில் காணப்பட்டது

6. இதய நோய்களுக்கான வாய்ப்பை குறைக்கும்

7. வலிப்பு வரும் வீதம் குறையும்

8. நரம்புத் தளர்ச்சி வருத்தத்துக்கு நல்லது

9. பல கடரடிகளுள்ள சூலக வருத்தம் 

10. முகப்பருவை குறைக்க உதவும் 

உங்களது உடலின் பருமன் அதிகரித்து விட்டதா?? அப் பருமனை குறைக்க நினைப்பவரா? உடம்பை சீராக வைத்திருக்க நினைப்பவர்களா? மற்றும் உங்களுக்கு சீனி வருத்தம் இருக்கிறதா?? 
கீழே சில காபோவைதரேற்றுக்கள் அற்ற அல்லது மிகவும் குறைந்த உணவுகளில் சிலவற்றை கூறியுள்ளேன்

இவற்றை மட்டும் உண்பதால் மேற்கூறப்பட்டவர்கள் பலனடையலாம்

இறைச்சி வகைகள்              மரக்கறி வகைகள்
1. மாட்டிறைச்சி                  1. கீரை வகைகள்
2. ஆட்டிறைச்சி                  2. முள்ளங்கி
3. கோழி இறைச்சி             3. காளான்
4. பன்றி இறைச்சி.             4.  கோவா
                                            5.  கோலிபிளவர்
கடலுணவுகள்                     6.  வெள்ளரிக்காய்
1. மீன்.                                 7.  தேசிக்காய்

2. நண்டு.                             8. போஞ்சி
3. இறால்.                            9. இஞ்சி
4. கணவாய்.                        10. புரக்கோலி
                                            11. தக்காளி
எண்ணெய் வகைகள்.         12. ஒலிவ்
1. தேங்காய் எண்ணெய்.     13. கத்தரி
2. மரக்கறி எண்ணெய்.       14. வேர்க்கோசு
3. மீன் எண்ணெய்.              15. சீமைச் சுரக்காய்
4. ஒலிவ் எண்ணெய்            16. சிவரிக் கீரை
                                             17. வெண்டிக்காய்
பழவகைகள்                         18. பாகற்காய்
1. அவகாடோ.                      19. முருங்கை
2. தண்ணீர்பூசணி.               20. இலைக் கோசு 
3. பெரி வகைகள்.                21. பச்சை மிளகாய்
4. சப்பாத்திக் கள்ளி.            22. வெங்காயம்

மது வகைகள்
1. ஜின்.                                      முட்டை
2. ரம்.                                        பட்டர்
3. சுவையூட்டப்படாத விஸ்கி
4. டகீலா
5. ஸ்கொட்ச்

சுவையூட்டிகள்.                       இனிப்புகள் 
1. உப்பு.                                 1. சுக்ரலோஸ்
2. வினாகிரி.                          2. ஸ்டீவியா
3. கருவாப்பட்டை.                3. சக்கரைன்
4.  ஏலக்காய்.                        4. எஸ்பார்டேம்
5. கடுகு
6. மஞ்சள்
தவிர்க்க வேண்டிய கோபோவைதரேட்டுக்கள் கொண்ட உணவுகள்
1. சோறு , அரிசி மா உணவுகள் 
    புட்டு , இடியப்பம் , தோசை
2. குளிர் பானங்கள் 
3. இனிப்பு வகைகள்
     சாக்லேட் , கேக் , அநேகமான இனிப்புகள் 
4. வாழைப் பழம் 
5. கோதுமை , கோதுமை உணவுகள்
     பாண் , ரொட்டி , பண் வகைகள்
6. கிழங்கு வகைகள் 



Dr CIM. Hassan Soofi
Sri Lanka 🇱🇰

அனைவருக்கும் பகிரவும்

குறைந்த கார்பன் கொண்ட உணவுகள்    குறைந்த கார்பன் கொண்ட  உணவுகள் Reviewed by Irumbu Thirai News on January 07, 2019 Rating: 5

தேமல் நோயினை எவ்வாறு குணப்படுத்தலாம்

January 07, 2019

தோல் நோய்கள் அதிகமாக ஏற்படுவது வெப்பமண்டல பகுதிகளில் வாழ்ந்து வருவோர்களுக்கு  தான்அவ் வகை நோய்களில்  ஒன்று தான் இந்த தேமல். இது ஒரு வகை பூஞ்சணத் ( Fungus ) தொற்றக் கூடியது
இத் தேமல் ஆனது  கழுத்து, கை, கால், மார்பு, முதுகு, முகம் ஆகிய இடங்களில் வெள்ளை நிறத்தில் பொட்டுகள் ஏற்படும்.

தேமல் பெரியவர் முதல் சிறியவர் வரை எல்லாருக்கும் ஏற்படும் ஆபாயம் காணப்படும்.. ஆனால்  இளம்பருவத்தினருக்கே அதிகாம தேமல் வருகிறது. இத் தேமல் வெள்ளையாக இருந்தாலும் சில கருந் தேமல்களும் உண்டு .
கட்டுப்படுத்துவதற்கு இலகுவாக இருந்தாலும் மீண்டும் வர வாய்ப்பும் உண்டு

இந்த பிரச்சனை அதிகமாக வியர்பவர்களுக்கும், ஸ்டெராய்டு மாத்திரைகளை பல நாட்களாக எடுத்து வருபவர்களுக்கும், நோயெதிர்ப்பு சக்தி, வைட்டமின் பி12 குறைவாக இருப்பவர்களுக்கும், சர்க்கரை வியாதி 
உள்ளவர்களுக்கும் அடிக்கடி வரும்.


தேமல் வருத்தம் வந்தால் குணமாவதற்கு பயன்படுத்தும் மருந்துகள் சில கீழ் வருமாறு

1 . Ketoconazole cream 
2 . Ketoconazole shampoo 
3 . Clotrimazole cream 
4 . Selenium sulfide shampoo
5 . Fluconazole tablet 

நம் உடலில் பல இடங்களில் தேமல் வருகின்றது ஆனால் பிரதானமாக முதுகில் தேமல் இருக்கின்றவர்கள் மேற்கூறிய shampoo ஒன்றை  கையில் சிறிதளவு எடுத்து அதனுடன் சிறிதளவு நீர் சேர்த்து நன்கு கசக்கி கலந்துவிட்டு தேமல் இருக்கும் இடங்கள் முழுதும் தடவி விட்டு , குறைந்தது 5-10 நிமிடங்கள் காத்திருந்து அதன் பின் குளிக்கவ்ய்ம்



இவ்வாறு 10 - 14 நாள்  தினமும் ஒரு முறை செய்து வந்தால போது பயன் அடைவீர்கள் . Shampooயினை முகத்தில் பாவிப்பதை தவிர்த்துக் கொள்வது மிக நல்லது . விரைவாக குணமடைவதற்காக அதிகமாக எடுத்து பாவிக்கவும் கூடாது . சிறிதளவு எடுத்து நீரில் கலந்து மெல்லிய படை போல் பூசினால் போதும்
சில இடங்களில் மட்டும் அல்லது முகத்தில் இருப்பவர்கள் மேற்கூறிய Cream வகைகளில் ஏதாவது ஒன்றை பாவிக்கலாம் . தொடர்ந்து 4 வாரங்கள் இரு வேளை பாவிக்க வேண்டும்

வாரத்துக்கு ஒரு முறைப்படி இரண்டு வாரம் Fluconazole மாத்திரை 300 mg பாவிப்பதினால் பலன் கிடைக்கும்..
பங்கசுக் கிருமிகளை மேற்கூறிய காலம் வரை இந்த மருந்து வகைகளை பாவிப்பதன் மூலம் தொற்று நீக்கப்பட்டாலும்  தோல் நிறம் பழைய நிலைக்கு மாறுவதற்கு சில வாரங்கள் முதல் மாதங்கள் எடுக்கலாம் . நெடுநாட்களாக தோல் நிறம் பழைய நிலைக்கு திரும்பாதவிடத்து வாரம் ஒருமுறை பாவித்து வருவது மீள் தொற்றிலிருந்து பாதுகாக்கும்



மேற்கூறிய காலங்கள் பாவித்தும் பலன் அளிக்கவில்லை என்றால் மருத்துவர் ஒருவரை நாடுங்கள் ஏனெனில் வேறு சில தோல் நோய்களும் தேமல் போல் தோற்றமளிக்க முடியும்

Dr.CIM.Hassan Soofi - Sri Lanka 🇱🇰

அனைவருக்கும் பகிரவும்

தேமல் நோயினை எவ்வாறு குணப்படுத்தலாம் தேமல் நோயினை எவ்வாறு குணப்படுத்தலாம் Reviewed by Irumbu Thirai News on January 07, 2019 Rating: 5

படர்தாமரை / வட்டக்கடியின் அறிகுறியும் நிவாரணமும்

January 07, 2019
ட்டக்கடி என பொதுவாக சொல்லப்படும்,
பங்கசுக்களின்  தொற்றுக்களால் ஏற்படக்கூடிய ஒரு வகையான தோல் பிரச்சனை தான் படர்தாமரை. இது மற்றவர்களுக்கு எளிதில் பரவக்கூடிய ஒரு தொற்றுநோயாகும். இதனை ஆரம்பத்திலேயே சரி செய்வது அவசியமாகும். இப் படர்தாமரை நமது உடலின் தலை , கால் , அக்குள் , இடுப்பு ( அரை ) மட்டுமல்லாது எந்த பகுதியில் வேண்டுமானாலும் வர கூடிய சாத்தியம் இருக்குன்றது. சருமத்திலுள்ள படர்தாமரை ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு நேரடியாகவோ மற்றும் மறைமுகமாகவோ பரவும் அபாயம் கொண்டது.
இதன் அறிகுறிகளாக அரிப்புடையதாக வட்ட வடிவில் சிவந்து காணப்படும்

இது யாரை இலகுவில் தாக்குமா
  • ஆடைகளை பகிர்ந்து அணிபவர்கள்
  • நோயெதிர்ப்பு குறைந்தவர்கள் 
  • அதிக வியர்ப்பவர்கள்
  • towel பகிர்ந்து கொள்பவர்கள்




ஏற்படாமல் என்ன செய்ய வேண்டும்??
1 . தினமும் இரு முறை தொற்று நீக்கி சவர்க்காரம் 
     கொண்டு குளிக்கவும்  
2 . ஒரு முறை கழற்றிய ஆடைகளை மீண்டும்        
     கழுவாமல் அணிய வேண்டாம் 
3 . மிகவும் சுத்தம் பேண வேண்டும் 
4. மற்றும் உங்கள் ஆடைகளை , துடைக்கும் 
     துணியை , படுக்கையை பகிர வேண்டாம்
5.  Western toilet use பண்ணுபவர்கள் , தொடைகளில் இருக்கும் சிரங்குகளில் அவதானமாக இருக்க வேண்டும் ஏனெனில் வீட்டில் உள்ள மற்றவர்களுக்கும் பரவ அதிக வாய்ப்புண்டு . இதை தவிர்க்க toilet பாவித்த பின் இருக்கைகளை நன்கு நீரால் கழுவி விடவேண்டும்.

எவ் வகை Creamயினை பயன்படுத்தலாம்
1 . Miconazole cream
2 . Clotrimazole cream
3 . Terbinafine cream 


எவ்வகை Tabletயினை பயன்படுத்தலாம் 
1 . Griseofulvin 500 mg இரவு சாப்பாட்டின் பின்
     குறைந்தது 2 வாரங்களுக்கு 
2 . Fluconazole 150 mg வாரத்துக்கு ஒரு      


     முறைப்படி 4 வாரங்களுக்கு 
மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும் ஒரு creamயும் இரு Tabletயினையும் பாவித்தால போதும் குணமாகும்
இவ்வகையான cream தேமல் நோய்க்கும் பாவிக்க முடியும்அதோடு வைத்தியரிடம் சுகாதார ஆலாசனைகளையும் பேண வேண்டும்

Dr. CIM. Hassan Soofi - Sri lanka 🇱🇰


அனைவருக்கும்

படர்தாமரை / வட்டக்கடியின் அறிகுறியும் நிவாரணமும் படர்தாமரை / வட்டக்கடியின் அறிகுறியும் நிவாரணமும் Reviewed by Irumbu Thirai News on January 07, 2019 Rating: 5

உதடு வெடிப்பிலிருந்து பாதுகாப்பு பெற

January 06, 2019

அனைவருக்கும்  பகிரவும்
உதடு வெடிப்பிலிருந்து பாதுகாப்பு பெற உதடு வெடிப்பிலிருந்து பாதுகாப்பு பெற Reviewed by Irumbu Thirai News on January 06, 2019 Rating: 5

குளிர் காலத்தில் குழந்தைகளை எவ்வாறு பராமரிப்பது ???

January 06, 2019

அனைவருக்கும் பகிரவும்
குளிர் காலத்தில் குழந்தைகளை எவ்வாறு பராமரிப்பது ??? குளிர் காலத்தில் குழந்தைகளை எவ்வாறு பராமரிப்பது ??? Reviewed by Irumbu Thirai News on January 06, 2019 Rating: 5

முடி உதிர்வதை எவ்வாறு தடுக்கலாம்

January 06, 2019

அனைவருக்கும் பகிரவும்

முடி உதிர்வதை எவ்வாறு தடுக்கலாம் முடி உதிர்வதை எவ்வாறு தடுக்கலாம் Reviewed by Irumbu Thirai News on January 06, 2019 Rating: 5
Powered by Blogger.