புலமை பரீட்சை தொடர்பான புதிய அறிக்கை

January 08, 2019

இன்று பத்தரமுல்ல இசுறுபாயவில் அமைந்துள்ள கல்வி அமைச்சில் நடைபெற்ற புலமை பரிசில் பரீட்சை தொடர்பான ஆய்வுக்குழு கூட்டத்தில் கலந்துரையாடும் போது கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கூறுகையில் புலமைப்பரிசில் பரீட்ட்சையின் மூலம் சிறுவர்களுக்கு ஏற்படும் உளவியல் தாக்கங்கள் தொடர்பாக விசேட கவனம் செலுத்த வேண்டும்.. மற்றும் இப் பரீட்சை தொடர்பாக காத்திரமான தீர்மானமொன்று எடுக்க உள்ளதாக கூறினார்..



மேலும் குறைந்த வருமான பெறும் குடும்பத்தில் வசிக்கும் சிறுவர்களுக்குசிறார்புலமை பரிசில் வழங்கல் மற்றும் புதிய பாடசாலைகளுக்கு அனுமதி வழங்கல் ஆகிய விடயங்களில் உரிய கவனம் செலுத்தி தீர்மானம் எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.


புலமை பரீட்சை தொடர்பான புதிய அறிக்கை புலமை பரீட்சை தொடர்பான புதிய அறிக்கை Reviewed by Irumbu Thirai News on January 08, 2019 Rating: 5

தனி மாவட்டமாக கள்ளக்குறிச்சி

January 08, 2019


இன்று சட்டசபையில் தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கீழ்வருமாறு அறிவித்துள்ளார்..

விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்கப்படும்.


தனி மாவட்டமாக கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக கள்ளக்குறிச்சி Reviewed by Irumbu Thirai News on January 08, 2019 Rating: 5

உலக வங்கி தலைவரின் திடீர் இராஜினாமா அறிவித்தல்

January 08, 2019
தற்போதய உலக வங்கியின் தலைவர் ஜிம் யோங் கிம் தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.

அவரின் கடமைக் காலம் முடிவடைய இன்னும் 3 வருடங்கள் உள்ள நிலையில் பதவி விலகியுள்ளார்.. இவர் கடந்த 6 வருட காலமாக இப் பதவியில் இருந்துள்ளார் என குறிப்பிடத்தக்கது.. 
எதிர்வரும் மாதம்  பதவியிலிருந்து விலகுவதாக நேற்று தினம்  அறிவித்துள்ளார்.



இதனடிப்படையில் 59 வயதான ஜிம் யோங் கிம் பதவி விலகியதன் பின்னர், உலக வங்கியின் தற்போதைய பிரதம நிறைவேற்று அதிகாரியான கிரிஸ்டாலினா ஜோர்ஜிவா உலக வங்கியின் இடைக்காலத் தலைவராகக் கடமையாற்றவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது
உலக வங்கி தலைவரின் திடீர் இராஜினாமா அறிவித்தல் உலக வங்கி தலைவரின் திடீர் இராஜினாமா அறிவித்தல் Reviewed by Irumbu Thirai News on January 08, 2019 Rating: 5

குறைந்த கார்பன் கொண்ட உணவுகள்

January 07, 2019
 ஆறு வகையான சத்துக்கள் உண்டு
1. புரதம்  ( Protein ) 
2. காபோவைதரேட்டு ( Carbohydrate )  
3. கொழுப்பு ( Lipid ) 
4. உயிர்ச்சத்து ( Vitamins ) 
5. கனிமம் ( Mineral ) 
6. நீர் ( Water ) 



ஒரு ஆணுக்கு 2500 கலோரியும் பெண்ணுக்கு 2000 கலோரியும் அவர்களது உடம்பினை சீராக வைத்து இருப்பதற்கு சராசரியாக நாளாந்தம் தேவைப்படுகிறது. இதில் அண்ணளவாக 60 வீதம் ,  30 வீதம் , 10 வீதம் முறையாக காபோவைதரேற்று ,கொழுப்பு , புரதம் இருத்தல் வேண்டும்
1 g புரதத்தில் 4 கலோரிகளும் 1 g காபோவைதரேற்றில் 4 கலோரிகளும் 1 g கொழுப்பில் 9 கலோரி சத்துக்களும் காணப்படும்

இவற்றில் காபோவைதரேட்டுக்கள் ( காபோ ) அற்ற அல்லது மிகவும் குறைந்த உணவுப் பழக்க வழக்கங்களை கடைப்பிடிப்பதே Ketogenic Diet ஆகும்

இதில் ஒரு நாளைக்கு 20 g ( 80 கலோரிகள் ) அல்லது அதை விட குறைவான காபோ அளவு மட்டும் கொண்ட உணவுகளையே உட்கொள்ள வேண்டும்


கீட்டோ உணவு முறையில் 
75 வீதம் கொழுப்புக்களினாலும் 
5 வீதம் காபோவைதரேற்றுக்களினாலும் 
20 வீதம் புரதங்களினாலும் நாளாந்த கலோரி தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்

இந்த முறையினால் உடம்பில் குளுக்கோஸ் அளவு மிகவும் குறைவதால் உடம்பின் சத்துத் தேவைகள் உடம்பில் தேங்கி இருக்கும் கொழுப்புக்கள் 
உடைவதன் மூலம் பெறப்படும்

கீட்டோ உணவு முறையின் பயன்கள் . . . 

1. பசியைக் குறைக்கும்

காபோ உணவுகள் குறைவாக சாப்பிட்டால்  இன்ஸுலின் குறைவாக சுரக்கப்படும் . இன்சுலின் குறைவதால் உடலில் பசி ஏற்படுவது குறையும். மற்றும் புரத உணவுகள் அதிகமாக எடுப்பதனால் விரைவில் நிரப்பமும் ஏற்படும்

2. எடையைக் குறைக்கும் -                                                     

காபோ உணுவுகள் நிறுத்தப்படுவதால் உடலுக்குத் தேவையான சக்திகள் உடலில் தேங்கி இருக்கும் கொழுப்புக்கள் உடைவதன் மூலம் பெறப்படும். இதன் மூலம் உடல் நிறை குறையும் . உடலில் உள்ள கொழுப்புக்களும் குறையும்

3. சீனியை குறைக்கும் -                                               

காபோ உணவுகள்தான் சீனியை அதிகரிக்கும் உணவுகள் என்பதால் அவற்றை நிறுத்தப்படுவதால் உடலில் உள்ள சீனி அளவும் குறையும் . இதன் மூலம் சீனி வருத்தம் உடையவர்களுக்கு தேவைப்படும் மருந்துகளின் அளவு 50 வீதத்துக்கும் மேலாக  குறைவடையும் . சில வேளைகளில் மருந்து பாவிக்க தேவையற்ற நிலையும் ஏற்படலாம்


( ஆனால் Type 1 சீனி வருத்தம் உடையவர்களுக்கு உகந்தது அல்ல - கீட்டோ அசிடோசிஸ் ஏற்படும்

4. கொழுப்பை குறைக்கும் -             
                          
உடலில் தேங்கி இருக்கும் கொழுப்புகளில் தோலின் கீழ் உள்ள கொழுப்புகளுடன் சேர்த்து வயிற்றுக்குள் உள்ள உறுப்புகளைச் சுற்றி இருக்கும் கொழுப்புகளும் குறைவடையும் . உதாரணமாக Fatty Liver எனப்படும் ஈரலைச் சுற்றியுள்ள கொழுப்புக்கள் குறைவடையும்

5. இரத்த அழுத்தத்தை குறைக்கும் -      

 சரியான விளக்கம் இல்லாவிட்டாலும் இந் நடைமுறைகளை மேற் கொண்டவர்களின் இரத்த அழுத்தம் குறைவடைந்ததையும்  ஆய்வுகளின் முடிவுகளில் காணப்பட்டது

6. இதய நோய்களுக்கான வாய்ப்பை குறைக்கும்

7. வலிப்பு வரும் வீதம் குறையும்

8. நரம்புத் தளர்ச்சி வருத்தத்துக்கு நல்லது

9. பல கடரடிகளுள்ள சூலக வருத்தம் 

10. முகப்பருவை குறைக்க உதவும் 

உங்களது உடலின் பருமன் அதிகரித்து விட்டதா?? அப் பருமனை குறைக்க நினைப்பவரா? உடம்பை சீராக வைத்திருக்க நினைப்பவர்களா? மற்றும் உங்களுக்கு சீனி வருத்தம் இருக்கிறதா?? 
கீழே சில காபோவைதரேற்றுக்கள் அற்ற அல்லது மிகவும் குறைந்த உணவுகளில் சிலவற்றை கூறியுள்ளேன்

இவற்றை மட்டும் உண்பதால் மேற்கூறப்பட்டவர்கள் பலனடையலாம்

இறைச்சி வகைகள்              மரக்கறி வகைகள்
1. மாட்டிறைச்சி                  1. கீரை வகைகள்
2. ஆட்டிறைச்சி                  2. முள்ளங்கி
3. கோழி இறைச்சி             3. காளான்
4. பன்றி இறைச்சி.             4.  கோவா
                                            5.  கோலிபிளவர்
கடலுணவுகள்                     6.  வெள்ளரிக்காய்
1. மீன்.                                 7.  தேசிக்காய்

2. நண்டு.                             8. போஞ்சி
3. இறால்.                            9. இஞ்சி
4. கணவாய்.                        10. புரக்கோலி
                                            11. தக்காளி
எண்ணெய் வகைகள்.         12. ஒலிவ்
1. தேங்காய் எண்ணெய்.     13. கத்தரி
2. மரக்கறி எண்ணெய்.       14. வேர்க்கோசு
3. மீன் எண்ணெய்.              15. சீமைச் சுரக்காய்
4. ஒலிவ் எண்ணெய்            16. சிவரிக் கீரை
                                             17. வெண்டிக்காய்
பழவகைகள்                         18. பாகற்காய்
1. அவகாடோ.                      19. முருங்கை
2. தண்ணீர்பூசணி.               20. இலைக் கோசு 
3. பெரி வகைகள்.                21. பச்சை மிளகாய்
4. சப்பாத்திக் கள்ளி.            22. வெங்காயம்

மது வகைகள்
1. ஜின்.                                      முட்டை
2. ரம்.                                        பட்டர்
3. சுவையூட்டப்படாத விஸ்கி
4. டகீலா
5. ஸ்கொட்ச்

சுவையூட்டிகள்.                       இனிப்புகள் 
1. உப்பு.                                 1. சுக்ரலோஸ்
2. வினாகிரி.                          2. ஸ்டீவியா
3. கருவாப்பட்டை.                3. சக்கரைன்
4.  ஏலக்காய்.                        4. எஸ்பார்டேம்
5. கடுகு
6. மஞ்சள்
தவிர்க்க வேண்டிய கோபோவைதரேட்டுக்கள் கொண்ட உணவுகள்
1. சோறு , அரிசி மா உணவுகள் 
    புட்டு , இடியப்பம் , தோசை
2. குளிர் பானங்கள் 
3. இனிப்பு வகைகள்
     சாக்லேட் , கேக் , அநேகமான இனிப்புகள் 
4. வாழைப் பழம் 
5. கோதுமை , கோதுமை உணவுகள்
     பாண் , ரொட்டி , பண் வகைகள்
6. கிழங்கு வகைகள் 



Dr CIM. Hassan Soofi
Sri Lanka 🇱🇰

அனைவருக்கும் பகிரவும்

குறைந்த கார்பன் கொண்ட உணவுகள்    குறைந்த கார்பன் கொண்ட  உணவுகள் Reviewed by Irumbu Thirai News on January 07, 2019 Rating: 5

தேமல் நோயினை எவ்வாறு குணப்படுத்தலாம்

January 07, 2019

தோல் நோய்கள் அதிகமாக ஏற்படுவது வெப்பமண்டல பகுதிகளில் வாழ்ந்து வருவோர்களுக்கு  தான்அவ் வகை நோய்களில்  ஒன்று தான் இந்த தேமல். இது ஒரு வகை பூஞ்சணத் ( Fungus ) தொற்றக் கூடியது
இத் தேமல் ஆனது  கழுத்து, கை, கால், மார்பு, முதுகு, முகம் ஆகிய இடங்களில் வெள்ளை நிறத்தில் பொட்டுகள் ஏற்படும்.

தேமல் பெரியவர் முதல் சிறியவர் வரை எல்லாருக்கும் ஏற்படும் ஆபாயம் காணப்படும்.. ஆனால்  இளம்பருவத்தினருக்கே அதிகாம தேமல் வருகிறது. இத் தேமல் வெள்ளையாக இருந்தாலும் சில கருந் தேமல்களும் உண்டு .
கட்டுப்படுத்துவதற்கு இலகுவாக இருந்தாலும் மீண்டும் வர வாய்ப்பும் உண்டு

இந்த பிரச்சனை அதிகமாக வியர்பவர்களுக்கும், ஸ்டெராய்டு மாத்திரைகளை பல நாட்களாக எடுத்து வருபவர்களுக்கும், நோயெதிர்ப்பு சக்தி, வைட்டமின் பி12 குறைவாக இருப்பவர்களுக்கும், சர்க்கரை வியாதி 
உள்ளவர்களுக்கும் அடிக்கடி வரும்.


தேமல் வருத்தம் வந்தால் குணமாவதற்கு பயன்படுத்தும் மருந்துகள் சில கீழ் வருமாறு

1 . Ketoconazole cream 
2 . Ketoconazole shampoo 
3 . Clotrimazole cream 
4 . Selenium sulfide shampoo
5 . Fluconazole tablet 

நம் உடலில் பல இடங்களில் தேமல் வருகின்றது ஆனால் பிரதானமாக முதுகில் தேமல் இருக்கின்றவர்கள் மேற்கூறிய shampoo ஒன்றை  கையில் சிறிதளவு எடுத்து அதனுடன் சிறிதளவு நீர் சேர்த்து நன்கு கசக்கி கலந்துவிட்டு தேமல் இருக்கும் இடங்கள் முழுதும் தடவி விட்டு , குறைந்தது 5-10 நிமிடங்கள் காத்திருந்து அதன் பின் குளிக்கவ்ய்ம்



இவ்வாறு 10 - 14 நாள்  தினமும் ஒரு முறை செய்து வந்தால போது பயன் அடைவீர்கள் . Shampooயினை முகத்தில் பாவிப்பதை தவிர்த்துக் கொள்வது மிக நல்லது . விரைவாக குணமடைவதற்காக அதிகமாக எடுத்து பாவிக்கவும் கூடாது . சிறிதளவு எடுத்து நீரில் கலந்து மெல்லிய படை போல் பூசினால் போதும்
சில இடங்களில் மட்டும் அல்லது முகத்தில் இருப்பவர்கள் மேற்கூறிய Cream வகைகளில் ஏதாவது ஒன்றை பாவிக்கலாம் . தொடர்ந்து 4 வாரங்கள் இரு வேளை பாவிக்க வேண்டும்

வாரத்துக்கு ஒரு முறைப்படி இரண்டு வாரம் Fluconazole மாத்திரை 300 mg பாவிப்பதினால் பலன் கிடைக்கும்..
பங்கசுக் கிருமிகளை மேற்கூறிய காலம் வரை இந்த மருந்து வகைகளை பாவிப்பதன் மூலம் தொற்று நீக்கப்பட்டாலும்  தோல் நிறம் பழைய நிலைக்கு மாறுவதற்கு சில வாரங்கள் முதல் மாதங்கள் எடுக்கலாம் . நெடுநாட்களாக தோல் நிறம் பழைய நிலைக்கு திரும்பாதவிடத்து வாரம் ஒருமுறை பாவித்து வருவது மீள் தொற்றிலிருந்து பாதுகாக்கும்



மேற்கூறிய காலங்கள் பாவித்தும் பலன் அளிக்கவில்லை என்றால் மருத்துவர் ஒருவரை நாடுங்கள் ஏனெனில் வேறு சில தோல் நோய்களும் தேமல் போல் தோற்றமளிக்க முடியும்

Dr.CIM.Hassan Soofi - Sri Lanka 🇱🇰

அனைவருக்கும் பகிரவும்

தேமல் நோயினை எவ்வாறு குணப்படுத்தலாம் தேமல் நோயினை எவ்வாறு குணப்படுத்தலாம் Reviewed by Irumbu Thirai News on January 07, 2019 Rating: 5
Powered by Blogger.