பல்கலைக்கழகங்களிலிருந்து 2000 பேர் வெளியேறுகின்றனர்
irumbuthirai
August 05, 2019
இலங்கையின் அதிகூடிய போட்டித்தன்மை கொண்ட பரீட்சையாக கருதப்படும் உயர் தர பரீட்சைக்குத் தோற்றி பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படுவது சாதனைதான். பல்வேறு ஆசை, கனவு, இலட்சியத்தை சுமந்து பலரின் தியாகம் அர்ப்பணிப்புக்கு மத்தியில் அங்கு செல்கின்றனர். ஆனால்,
பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ளப்படும் மனிதாவிமானமற்ற பகிடிவகை மற்றும் பாலியல் தொந்தரவின் காரணமான பதிவுகளை மேற்கொண்ட மாணவ மாணவிகள் சுமார் 2,000 பேர் வருடந்தோறும் பல்கலைக்கழக கட்டமைப்பில் இருந்து வெளியேறுகின்றனர்.
பல்கலைக்கழகங்களில் முதலாம் ஆண்டு பரீட்சைக்கு தோற்றாதோர் தொடர்பான அறிக்கையை பெற்றுக்கொண்ட பின்னர் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நகர திட்டமிடல் நீர் விநியோகம் மற்றும் உயர் கல்வி அமைச்சின் செயலாளர் பியந்த மாயாதுண்ண தெரிவிக்கையில் பல்கலைக்கழகங்களுக்கு சுமார் 30 ஆயிரம் மாணவர்கள் உள்வாங்கப்படுகின்றனர். ஆனால் முதல் கல்வி ஆண்டில் இவர்களுள் சுமார் 7 சதவீதமானோர் அதாவது 2,000 போர் பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியேறுவதாக அவர் தெரிவித்தார்.
உயர் கல்வி அமைச்சு மற்றும் பல்லைக்கழக மானிய ஆணைக்குழு இந்த புள்ளி விபர ஆவணத்தை மொத்த பல்கலைக்கழக கட்டமைப்பில் இருந்து பெற்றுக்கொண்டுள்ளது.
பல்கலைக்கழகங்களிலிருந்து 2000 பேர் வெளியேறுகின்றனர்
Reviewed by irumbuthirai
on
August 05, 2019
Rating: