19 மாணவர்களுக்கு விளக்கமறியல்
irumbuthirai
August 07, 2019
ருஹூனு பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டில் கற்கும் மாணவர் ஒருவருக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை மேற்கொண்டு மோசமான பகிடிவதையை மேற்கொண்ட பல்கலைக்கழகத்தின் மாணவர் அமைப்பின் தலைவர் உட்பட 19 பேர் எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தப் பல்கலைக்கழகத்தில் கற்ற முதலாம் வருட மாணவரான தர்ஷ உதயங்க என்ற மாணவர் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை அண்மையில் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
மாத்தறை தலைமை பொலிஸ் நிலையத்தில் ஆஜரானதன் பின்னர் இவர்கள் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்கள்.
(அ.த.தி)
19 மாணவர்களுக்கு விளக்கமறியல்
Reviewed by irumbuthirai
on
August 07, 2019
Rating: