19 மாணவர்களுக்கு விளக்கமறியல்

August 07, 2019
Image result for jail

ருஹூனு பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டில் கற்கும் மாணவர் ஒருவருக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை மேற்கொண்டு மோசமான பகிடிவதையை மேற்கொண்ட பல்கலைக்கழகத்தின் மாணவர் அமைப்பின் தலைவர் உட்பட 19 பேர் எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் பல்கலைக்கழகத்தில் கற்ற முதலாம் வருட மாணவரான தர்ஷ உதயங்க என்ற மாணவர் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை அண்மையில் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
மாத்தறை தலைமை பொலிஸ் நிலையத்தில் ஆஜரானதன் பின்னர் இவர்கள் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்கள். 
(அ.த.தி)

19 மாணவர்களுக்கு விளக்கமறியல் 19 மாணவர்களுக்கு விளக்கமறியல் Reviewed by irumbuthirai on August 07, 2019 Rating: 5

ரொக்கட் மாணவன் ஜனாதிபதியுடன் சந்திப்பு

August 07, 2019
Image result for rocket student gihan kavinda

ரொக்கட் ஒன்றினை உருவாக்கிய கம்பஹா பண்டாரநாயக வித்தியாலய மாணவன் கிஹான் காவிந்த ஹெட்டியாரச்சி நேற்று(06)  ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்தார்.
கம்பஹா பண்டாரநாயக வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவுடன் இணைந்ததாக இடம்பெற்ற கண்காட்சியில் இந்த ரொக்கட்டை ஜனாதிபதி பார்வையிட்டதுடன், இம்மாணவனின் திறமைகளை பாராட்டிய ஜனாதிபதி அதன் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காக முதல் கட்டமாக 10 லட்சம் ரூபாவினை கடந்த ஒக்டோபர் மாதம் வழங்கினார். 

தற்போது ரொக்கட்டின் முன்னேற்ற நிலைமை பற்றியும் எதிர்கால திட்டம் பற்றியும் ஜனாதிபதி அவர்களுக்கு விளக்கப்பட்டதுடன், தேவையான உதவிகளை தொடர்ந்தும் வழங்குவதாக ஜனாதிபதி உறுதியளித்தார். ரொக்கட்டை விண்ணில் செலுத்துவதற்கு தேவையான உதவியை வழங்குமாறு ஜனாதிபதி விமானப்படை தொழிநுட்ப அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியிருந்தார். இந்த நிகழ்வில் விமானப் படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கல டயஸ், எயார் வைஸ் மார்ஷல் எம்.டீ. ரத்நாயக ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ரொக்கட் மாணவன் ஜனாதிபதியுடன் சந்திப்பு ரொக்கட் மாணவன் ஜனாதிபதியுடன் சந்திப்பு Reviewed by irumbuthirai on August 07, 2019 Rating: 5

தெரிவு செய்யப்பட்ட அதிபர்களுக்கு சர்வதேச தரத்திலான பயிற்சி

August 07, 2019
Image result for akila viraj

கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தின் ஆலோசனைக்கு அமைவாக நாட்டின் பாடசாலை கட்டமைப்பில் முதல் முறையாக பாடசாலை தலைமைத்துவம் மற்றும் முகாமைத்துவத்திற்கு தேசிய திறனாற்றல் கட்டமைப்பொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக அதிபர் சேவையில் தரம் 111 அதிபர்கள் 1,000 பேருக்கு இவ்வருடத்தில் பயிற்சி வழங்கப்டவுள்ளது.
பாடசாலை தலைமைத்துவத்திற்காக அதிபர்களுக்கு சர்வதேச தரத்திலன பயிற்சியை பெற்றுக்கொடுத்து இலங்கை அதிபர் வரலாற்றில் புரட்சியை ஏற்படுத்துவதற்கு கல்வி அமைச்சு நடைவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இலங்கை அதிபர் சேவைக்கு அமைவாக தரம் 111 தொடக்கம் தரம் 1 வரையில் பதவி உயர்விற்கு தேவையானவற்றை பூர்த்தி செய்வதற்கான செயலாற்றல் அபிவிருத்தி கற்கை நெறிக்கான அதிபர்களுக்காக மாதாந்த சேவை நிலைய பயிற்சி நெறி தற்பொழுது நடைபெறுகின்றது.

சில பாடசாலைகளில் நிலவும் நிதி மேசடி நிர்வாக பிரச்சினை பாடசாலைகளில் மாணவர்கள் எதிர்கொள்ளும் திடீர் விபத்துக்கள் உள்ளிட்டி அடிக்கடி முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தெரிவு செய்யப்பட்ட 1,000 அதிபர்களை மதிப்பிடும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த பயிற்சிக்கான அனுமதி கிடைக்கும்.
மதிப்பீட்டு அடிப்படையில் கல்வி அபிவிருத்தி கட்டமைப்பின் கீழ் 41 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்து இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது எனறு கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

9 மாவட்டங்களில் தரம் 111 இல் 3,823 அதிபர்களுக்கு 2021 ஆம் ஆண்டிற்கு முன்னர் இந்த பயிற்சி சான்றிதழ் வழங்கப்பட இருப்பதாக கல்வி அமைச்சின் மனிதவள அபிவிருத்திக் கிளை தெரிவித்துள்ளது.
(அ.த.தி)
தெரிவு செய்யப்பட்ட அதிபர்களுக்கு சர்வதேச தரத்திலான பயிற்சி தெரிவு செய்யப்பட்ட அதிபர்களுக்கு சர்வதேச தரத்திலான பயிற்சி Reviewed by irumbuthirai on August 07, 2019 Rating: 5

வணிகப் புள்ளிவிவரவியல், வணிகக் கல்வி, கணக்கீடு புதிய பாடத்திட்ட மாதிரி வினாத்தாள்கள்: பரீட்சைத் திணைக்கள வெளியீடு:

August 07, 2019
Image result for examination department

இலங்கையின் சிரேஷ்ட இடைநிலைக் கல்வியின் இறுதிச் சான்றிதழ்ப்படுத்தும் பரீட்சையாக க.பொ.த (உ.தர)ப் பரீட்சை உள்ளது. இது முக்கியமாக சான்றிதழ்ப்படுத்தும் பரீட்சையாக நடைபெற்ற போதும் பல்கலைக்கழகங்கள், வேறு உயர்கல்வி நிறுவனங்கள்,கல்வியியல் கல்லூரிகள் என்பவற்றிற்குத் தகைமைத் தெரிவு செய்வதற்கும் இப்பரீட்சையின் பெறுபேறு அடிப்படையாகக் கொள்ளப்படுவதால் இது ஒரு தேர்வுப் பரீட்சையாகவும் கருதப்படுகிறது. இது போன்றே நடுத்தர மட்டத்தில் தொழிலைப் பெறுவதற்கும் இப்பரீட்சைப் பெறுபேறுகள் அடிப்படைத் தகைமையாகக் கருதப்படுகின்றன.
2014 ஆம் ஆண்டு வரை க.பொ.த (உ.தர)ப் பரீட்சை தரம் 12, 13 என்பவற்றின் பாடத்திட்டத்தினை அடிப்டையாகக் கொண்டு உயிரியல், பௌதிகவியல், வர்த்தகம், கலை என நான்கு பாடத்துறைகள் இடம் பெற்றதுடன் 2015 ஆம் ஆண்டு தொடக்கம் தொழினுட்பவியல் பாடத் துறையின் கீழும் பரீட்சை நடைபெற்றது.
இதற்கமைய உயிரியல், பௌதிகவியல், வர்த்தகம், கலை, பொறியியல் தொழினுட்பவியல், உயிர்முறைமைகள் தொழினுட்பவியல் எனும் பாடத்துறைகளிலும் பரீட்சைகள் நடைபெறும்.
அந்த வகையில் 2019 முதல் நடைபெறும் புதிய பாடத்திட்டத்தின்படியான பரீட்சைக்கான மாதிரி வினாத்தாள்களையும் அது தொடர்பான விரிவான விளக்கங்களையும் பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

வணிகப் புள்ளிவிவரவியல்
வணிகக் கல்வி

கணக்கீடு
போன்ற பாடங்கள் தொடர்பான வினாத்தாள்களையும் ஏனைய விபரங்களையும் பெற்றுக்கொள்ள கீழுள்ள லிங்கை அழுத்தவும்.

A.L Model papers- New syllabus

வணிகப் புள்ளிவிவரவியல், வணிகக் கல்வி, கணக்கீடு புதிய பாடத்திட்ட மாதிரி வினாத்தாள்கள்: பரீட்சைத் திணைக்கள வெளியீடு: வணிகப் புள்ளிவிவரவியல், வணிகக் கல்வி, கணக்கீடு புதிய பாடத்திட்ட மாதிரி வினாத்தாள்கள்: பரீட்சைத் திணைக்கள வெளியீடு: Reviewed by irumbuthirai on August 07, 2019 Rating: 5

புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பிடும் பணி

August 06, 2019
Image result for examination department
இம்மாதம் 4ஆம் திகதி நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பிடும் பணி ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி வரையில் இடம்பெறும் என்று பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத் பூஜுத்த தெரிவித்தார்.
39 பாடசாலைகளில் 436 மதிப்பீட்டு சபையின்கீழ் நடைபெறவுள்ள இந்த மதிப்பீட்டு நடவடிக்கைகளில் 6,976 ஆசிரியர்கள் ஈடுபடவுள்ளனர். இதற்காக தெரிவுசெய்யப்பட்டுள்ள பாடசாலை விபரங்களையும் பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது.
(அ.த.தி)
புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பிடும் பணி புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பிடும் பணி Reviewed by irumbuthirai on August 06, 2019 Rating: 5

க.பொ.த (உ.தர) புதிய பாடத்திட்ட மாதிரி வினாத்தாள்கள்: பரீட்சைத் திணைக்கள வெளியீடு

August 06, 2019
Image result for examination department
இலங்கையின் சிரேஷ்ட இடைநிலைக் கல்வியின் இறுதிச் சான்றிதழ்ப்படுத்தும் பரீட்சையாக க.பொ.த (உ.தர)ப் பரீட்சை உள்ளது. இது முக்கியமாக சான்றிதழ்ப்படுத்தும் பரீட்சையாக நடைபெற்ற போதும் பல்கலைக்கழகங்கள், வேறு உயர்கல்வி நிறுவனங்கள்,கல்வியியல் கல்லூரிகள் என்பவற்றிற்குத் தகைமைத் தெரிவு செய்வதற்கும் இப்பரீட்சையின் பெறுபேறு அடிப்படையாகக் கொள்ளப்படுவதால் இது ஒரு தேர்வுப் பரீட்சையாகவும் கருதப்படுகிறது. இது போன்றே நடுத்தர மட்டத்தில் தொழிலைப் பெறுவதற்கும் இப்பரீட்சைப் பெறுபேறுகள் அடிப்படைத் தகைமையாகக் கருதப்படுகின்றன.
2014 ஆம் ஆண்டு வரை க.பொ.த (உ.தர)ப் பரீட்சை தரம் 12, 13 என்பவற்றின் பாடத்திட்டத்தினை அடிப்டையாகக் கொண்டு உயிரியல், பௌதிகவியல், வர்த்தகம், கலை என நான்கு பாடத்துறைகள் இடம் பெற்றதுடன் 2015 ஆம் ஆண்டு தொடக்கம் தொழினுட்பவியல் பாடத் துறையின் கீழும் பரீட்சை நடைபெற்றது.
இதற்கமைய உயிரியல், பௌதிகவியல், வர்த்தகம், கலை, பொறியியல் தொழினுட்பவியல், உயிர்முறைமைகள் தொழினுட்பவியல் எனும் பாடத்துறைகளிலும் பரீட்சைகள் நடைபெறும்.
அந்த வகையில் 2019 முதல் நடைபெறும் புதிய பாடத்திட்டத்தின்படியான பரீட்சைக்கான மாதிரி வினாத்தாள்களையும் அது தொடர்பான விரிவான விளக்கங்களையும் பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

பொருளியல்
புவியியல்
அரசியல் விஞ்ஞானம்
அளவையியலும் விஞ்ஞான முறையும்
வரலாறு
மனைப் பொருளியல்

தொடர்பாடலும் ஊடகக் கற்கையும்
போன்ற பாடங்கள் தொடர்பான வினாத்தாள்களையும் ஏனைய விபரங்களையும் பெற்றுக்கொள்ள கீழுள்ள லிங்கை அழுத்தவும்.

model papers- a.l. new syllabus

க.பொ.த (உ.தர) புதிய பாடத்திட்ட மாதிரி வினாத்தாள்கள்: பரீட்சைத் திணைக்கள வெளியீடு க.பொ.த (உ.தர) புதிய பாடத்திட்ட மாதிரி வினாத்தாள்கள்: பரீட்சைத் திணைக்கள வெளியீடு Reviewed by irumbuthirai on August 06, 2019 Rating: 5

பரீட்சைத் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட மாதிரி வினாத்தாள்கள்: உ. தர புதிய பாடத்திட்டம்

August 06, 2019
Image result for examination department

இலங்கையின் சிரேஷ்ட இடைநிலைக் கல்வியின் இறுதிச் சான்றிதழ்ப்படுத்தும் பரீட்சையாக க.பொ.த (உ.தர)ப் பரீட்சை உள்ளது. இது முக்கியமாக சான்றிதழ்ப்படுத்தும் பரீட்சையாக நடைபெற்ற போதும் பல்கலைக்கழகங்கள், வேறு உயர்கல்வி நிறுவனங்கள்,கல்வியியல் கல்லூரிகள் என்பவற்றிற்குத் தகைமைத் தெரிவு செய்வதற்கும் இப்பரீட்சையின் பெறுபேறு அடிப்படையாகக் கொள்ளப்படுவதால் இது ஒரு தேர்வுப் பரீட்சையாகவும் கருதப்படுகிறது. இது போன்றே நடுத்தர மட்டத்தில் தொழிலைப் பெறுவதற்கும் இப்பரீட்சைப் பெறுபேறுகள் அடிப்படைத் தகைமையாகக் கருதப்படுகின்றன.
2014 ஆம் ஆண்டு வரை க.பொ.த (உ.தர)ப் பரீட்சை தரம் 12, 13 என்பவற்றின் பாடத்திட்டத்தினை அடிப்டையாகக் கொண்டு உயிரியல், பௌதிகவியல், வர்த்தகம், கலை என நான்கு பாடத்துறைகள் இடம் பெற்றதுடன் 2015 ஆம் ஆண்டு தொடக்கம் தொழினுட்பவியல் பாடத் துறையின் கீழும் பரீட்சை நடைபெற்றது. 
இதற்கமைய உயிரியல், பௌதிகவியல், வர்த்தகம், கலை, பொறியியல் தொழினுட்பவியல், உயிர்முறைமைகள் தொழினுட்பவியல் எனும் பாடத்துறைகளிலும் பரீட்சைகள் நடைபெறும்.
அந்த வகையில் 2019 முதல் நடைபெறும் புதிய பாடத்திட்டத்தின்படியான பரீட்சைக்கான மாதிரி வினாத்தாள்களையும் அது தொடர்பான விரிவான விளக்கங்களையும் பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
பௌதீகவியல் 
இரசாயணவியல்
கணிதம்
விவசாய விஞ்ஞானம்
உயிரியல்
இணைந்த கணிதம்
உயர் கணிதம் 
போன்ற பாடங்கள் தொடர்பான வினாத்தாள்களையும் ஏனைய விபரங்களையும் பெற்றுக்கொள்ள கீழுள்ள லிங்கை அழுத்தவும்.

பரீட்சைத் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட மாதிரி வினாத்தாள்கள்: உ. தர புதிய பாடத்திட்டம் பரீட்சைத் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட மாதிரி வினாத்தாள்கள்: உ. தர புதிய பாடத்திட்டம் Reviewed by irumbuthirai on August 06, 2019 Rating: 5

க.பொ.த. (உ.தர) பொது சாதாரண பரீட்சை (Common General Test) வினாத்தாளில் செய்யப்பட்ட மாற்றங்கள் (முழு விபரம் இணைப்பு)

August 05, 2019
Image result for examination department

2019 இலும் அதற்கு பின்னரும் இடம்பெறும் க.பொ.த (உ.த) பொது சாதாரண பரீட்சை வினாத்தாளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 
வினாத்தாள் கட்டமைப்பு, நேரம், வினாக்களின் எண்ணிக்கை என்பவற்றில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே 60 வினாக்கள் தற்போது 50 வினாக்களாக மாற்றப்பட்டுள்ளது. இரண்டரை மணித்தியால வினாத்தாள் தற்போது இரண்டு மணித்தியாலமாக மாற்றப்பட்டுள்ளது.

பொது விடையங்கள் தொடர்பான அறிவு (நடைமுறை விவகாரங்கள்) 10 வினாக்கள்.

நியாயிக்கும் திறன்கள் 10 வினாக்கள்.

பிரச்சினை தீர்க்கும் திறன்கள் 15 வினாக்கள்.

கிரகித்தலும் தொடர்பாடல் திறன்களும் 15 வினாக்கள் என மொத்தம் 50 வினாக்களாகும்.

ஒரு வினாவுக்கு 02 புள்ளிகளாகும்.

பரீட்சை திணைக்களத்தினால் இது தொடர்பாக வெளியிடப்பட்ட மாதிரி வினாப்பத்திரத்தை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.

க.பொ.த. (உ.தர) பொது சாதாரண பரீட்சை (Common General Test) வினாத்தாளில் செய்யப்பட்ட மாற்றங்கள் (முழு விபரம் இணைப்பு) க.பொ.த. (உ.தர) பொது சாதாரண பரீட்சை (Common General Test) வினாத்தாளில் செய்யப்பட்ட மாற்றங்கள் (முழு விபரம் இணைப்பு) Reviewed by irumbuthirai on August 05, 2019 Rating: 5

பல்கலைக்கழகங்களிலிருந்து 2000 பேர் வெளியேறுகின்றனர்

August 05, 2019
Image result for ugc sri lanka

இலங்கையின் அதிகூடிய போட்டித்தன்மை கொண்ட பரீட்சையாக கருதப்படும் உயர் தர பரீட்சைக்குத் தோற்றி பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படுவது சாதனைதான். பல்வேறு ஆசை, கனவு, இலட்சியத்தை சுமந்து பலரின் தியாகம் அர்ப்பணிப்புக்கு மத்தியில் அங்கு செல்கின்றனர். ஆனால்,

 பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ளப்படும் மனிதாவிமானமற்ற பகிடிவகை மற்றும் பாலியல் தொந்தரவின் காரணமான பதிவுகளை மேற்கொண்ட மாணவ மாணவிகள் சுமார் 2,000 பேர் வருடந்தோறும் பல்கலைக்கழக கட்டமைப்பில் இருந்து வெளியேறுகின்றனர். 

பல்கலைக்கழகங்களில் முதலாம் ஆண்டு பரீட்சைக்கு தோற்றாதோர் தொடர்பான அறிக்கையை பெற்றுக்கொண்ட பின்னர் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக நகர திட்டமிடல் நீர் விநியோகம் மற்றும் உயர் கல்வி அமைச்சின் செயலாளர் பியந்த மாயாதுண்ண தெரிவிக்கையில் பல்கலைக்கழகங்களுக்கு சுமார் 30 ஆயிரம் மாணவர்கள் உள்வாங்கப்படுகின்றனர். ஆனால் முதல் கல்வி ஆண்டில் இவர்களுள் சுமார் 7 சதவீதமானோர் அதாவது 2,000 போர் பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியேறுவதாக அவர் தெரிவித்தார்.
உயர் கல்வி அமைச்சு மற்றும் பல்லைக்கழக மானிய ஆணைக்குழு இந்த புள்ளி விபர ஆவணத்தை மொத்த பல்கலைக்கழக கட்டமைப்பில் இருந்து பெற்றுக்கொண்டுள்ளது.

பல்கலைக்கழகங்களிலிருந்து 2000 பேர் வெளியேறுகின்றனர் பல்கலைக்கழகங்களிலிருந்து 2000 பேர் வெளியேறுகின்றனர் Reviewed by irumbuthirai on August 05, 2019 Rating: 5
Powered by Blogger.