1st and 2nd Efficiency Bar Examination and Second Language Test for the Officers of the Sri Lanka Foreign Service – 2017 (2018)

August 15, 2019


இலங்கை வெளிநாட்டு சேவையிலுள்ள உத்தியோகத்தர்களுக்கான 1ஆம் மற்றும் 2ஆம் வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சை மற்றும் 2ஆம் மொழிப் பரீட்சை. 
மேற்படி பரீட்சையின் கடந்த கால வினாப்பத்திரத்தை தமிழில் பெற இங்கே கிளிக் செய்க. 

1st and 2nd Efficiency Bar Examination and Second Language Test for the Officers of the Sri Lanka Foreign Service – 2017 (2018)
for English medium paper click the link below.

English medium
1st and 2nd Efficiency Bar Examination and Second Language Test for the Officers of the Sri Lanka Foreign Service – 2017 (2018) 1st and 2nd Efficiency Bar Examination and Second Language Test for the Officers of the Sri Lanka Foreign Service – 2017 (2018) Reviewed by irumbuthirai on August 15, 2019 Rating: 5

Past Paper: Second Efficiency Bar Examination for Officers in Class II, Grade II of the Sri Lanka Surveyors’ Service (SLSS) - 2018

August 15, 2019


இலங்கை நில அளவையாளர் சேவையின் வகுப்பு 11 தரம் 11 இலுள்ள அலுவலர்களுக்கான இரண்டாவது வினைத்திறன்காண் தடைப் பரீட்சை - 2018 மேற்படி வினாப்பத்திரத்தைப் தமிழில் பெற இங்கே கிளிக் செய்க.

Past paper for Second Efficiency Bar Examination for Officers in Class II, Grade II of the Sri Lanka Surveyors’ Service (SLSS) - 2018 
for english medium paper click the link below

English medium
Past Paper: Second Efficiency Bar Examination for Officers in Class II, Grade II of the Sri Lanka Surveyors’ Service (SLSS) - 2018 Past Paper: Second Efficiency Bar Examination for Officers in Class II, Grade II of the Sri Lanka Surveyors’ Service (SLSS) - 2018 Reviewed by irumbuthirai on August 15, 2019 Rating: 5

பாகிஸ்தானால் கையளிக்கப்பட்ட அபிநந்தன் தொடர்பில் இந்தியாவின் முடிவு

August 14, 2019


காஷ்மீருக்கும் பரபரப்புக்கும் நெருங்கிய தொடர்பு. வரலாறு நெடுகிலும் பல்வேறு சம்பவங்கள் இதை உணர்த்துகின்றன. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் சுமார் 40 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்துக்குப் பிறகு, பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதன்போது விங் கமாண்டர் அபிநந்தன் சென்ற மிக் 21 ரக போர் விமானத்தை, பாகிஸ்தானின் எஃப்.16 விமானம் சுட்டு வீழ்த்தியது. இதைத்தொடர்ந்து, பாராசூட் மூலம் தப்பித்த அபிநந்தன், பாகிஸ்தானின் எல்லைக்குள் விழுந்து அந்நாட்டின் பிடியில் சிக்கிக் கொண்டார். மார்ச் 1ம் தேதி பாகிஸ்தான் அவரை நிபந்தனையின்றி விடுவித்தது. இதனால் அபிநந்தன் இந்தியாவில் மிகவும் பிரபலமாகியமை குறிப்பிடத்தக்கது.
தற்போது விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமனுக்கு ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது "வீர் சக்ரா விருது" வழங்கி கௌரவிக்க இந்திய அரசு முடிவெடுத்துள்ளது. இந்த  விருது, வீர தீர செயல்களுக்காக வழங்கப்படும் மூன்றாவது உயரிய விருதாகும்.
சென்னையை சேர்ந்த இவரது தந்தையும் இந்திய விமானப்படையில் ஏர் மார்ஷலாக பணி புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்; பீபீசி.
பாகிஸ்தானால் கையளிக்கப்பட்ட அபிநந்தன் தொடர்பில் இந்தியாவின் முடிவு பாகிஸ்தானால் கையளிக்கப்பட்ட அபிநந்தன் தொடர்பில் இந்தியாவின் முடிவு Reviewed by irumbuthirai on August 14, 2019 Rating: 5

பரீட்சைத் திணைக்கள வெளியீடு: க.பொ.த (உ.தர) புதிய பாடத்திட்ட மாதிரி வினாத்தாள்கள்:

August 14, 2019


இலங்கையின் சிரேஷ்ட இடைநிலைக் கல்வியின் இறுதிச் சான்றிதழ்ப்படுத்தும் பரீட்சையாக க.பொ.த (உ.தர)ப் பரீட்சை உள்ளது. இது முக்கியமாக சான்றிதழ்ப்படுத்தும் பரீட்சையாக நடைபெற்ற போதும் பல்கலைக்கழகங்கள், வேறு உயர்கல்வி நிறுவனங்கள்,கல்வியியல் கல்லூரிகள் என்பவற்றிற்குத் தகைமைத் தெரிவு செய்வதற்கும் இப்பரீட்சையின் பெறுபேறு அடிப்படையாகக் கொள்ளப்படுவதால் இது ஒரு தேர்வுப் பரீட்சையாகவும் கருதப்படுகிறது. இது போன்றே நடுத்தர மட்டத்தில் தொழிலைப் பெறுவதற்கும் இப்பரீட்சைப் பெறுபேறுகள் அடிப்படைத் தகைமையாகக் கருதப்படுகின்றன. 

2014 ஆம் ஆண்டு வரை க.பொ.த (உ.தர)ப் பரீட்சை தரம் 12, 13 என்பவற்றின் பாடத்திட்டத்தினை அடிப்டையாகக் கொண்டு உயிரியல், பௌதிகவியல், வர்த்தகம், கலை என நான்கு பாடத்துறைகள் இடம் பெற்றதுடன் 2015 ஆம் ஆண்டு தொடக்கம் தொழினுட்பவியல் பாடத் துறையின் கீழும் பரீட்சை நடைபெற்றது. இதற்கமைய உயிரியல், பௌதிகவியல், வர்த்தகம், கலை, பொறியியல் தொழினுட்பவியல், உயிர்முறைமைகள் தொழினுட்பவியல் எனும் பாடத்துறைகளிலும் பரீட்சைகள் நடைபெறும். அந்த வகையில் 2019 முதல் நடைபெறும் புதிய பாடத்திட்டத்தின்படியான பரீட்சைக்கான மாதிரி வினாத்தாள்களையும் அது தொடர்பான விரிவான விளக்கங்களையும் பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ளது. 

இந்து சமயம் 
இந்து நாகரிகம் 
இஸ்லாம் 
இஸ்லாமிய நாகரிகம் 
கிறிஸ்தவம் 
கிறிஸ்தவ நாகரிகம் 
கிரேக்க உரோம நாகரிகம் 
போன்ற பாடங்கள் தொடர்பான வினாத்தாள்களையும் ஏனைய விபரங்களையும் பெற்றுக்கொள்ள கீழுள்ள லிங்கை அழுத்தவும்.

A.L New syllabus model papers
பரீட்சைத் திணைக்கள வெளியீடு: க.பொ.த (உ.தர) புதிய பாடத்திட்ட மாதிரி வினாத்தாள்கள்: பரீட்சைத் திணைக்கள வெளியீடு: க.பொ.த (உ.தர) புதிய பாடத்திட்ட மாதிரி வினாத்தாள்கள்: Reviewed by irumbuthirai on August 14, 2019 Rating: 5

Results: National Mathematics & Science Olympiad - 2019

August 14, 2019

National Mathematics & Science Olympiad - 2019 results. 1st place to Anuradhapura central college
please click here to find the results

Results
Results: National Mathematics & Science Olympiad - 2019 Results: National Mathematics & Science Olympiad - 2019 Reviewed by irumbuthirai on August 14, 2019 Rating: 5

தேசிய பாடசாலைகளுக்கான அதிபர் நியமனம்: வெற்றிடங்களும் அதற்குரிய அதிபர் தரங்களும்:

August 14, 2019

தேசிய பாடசாலைகளுக்கான அதிபர்களை நியமிக்கும் செயற்பாட இடம்பெறும் இந்த வேளையில் வெற்றிடம் நிலவும் பாடசாலைகளும் அதற்குரிய அதிபர் கொண்டிருக்க வேண்டிய தகைமைகளையும் இங்கு தருகிறோம்.

இலங்கை கல்வி நிர்வாக சேவை (தரம் 1) தேவைப்படும்  தேசிய பாடசாலைகள் 40ம், இலங்கை கல்வி நிர்வாக சேவை (தரம் 11-111) தேவைப்படும் தேசிய பாடசாலைகள் 62ம், இலங்கை அதிபர் சேவை (தரம் 1 ) தேவைப்படும் தேசிய பாடசாலைகள் 176ம் வெற்றிடமாகவுள்ளன.
அந்தவகையில் இலங்கை கல்வி நிர்வாக சேவை (தரம் 1) தகைமை கொண்ட அதிபர்கள் தேவைப்படும் தேசிய பாடசாலை அட்டவணையை பெற இங்கே கிளிக் செய்க.


இலங்கை கல்வி நிர்வாக சேவை (தரம் 11- 111) தகைமை கொண்ட அதிபர்கள் தேவைப்படும் தேசிய பாடசாலை அட்டவணையை பெற இங்கே கிளிக் செய்க.


இலங்கை அதிபர் சேவை (தரம் 1) தகைமை கொண்ட அதிபர்கள் தேவைப்படும் தேசிய பாடசாலை அட்டவணையை பெற இங்கே கிளிக் செய்க.

SLPS-1 vacancy national school list

தேசிய பாடசாலைகளுக்கான அதிபர் நியமனம்: வெற்றிடங்களும் அதற்குரிய அதிபர் தரங்களும்: தேசிய பாடசாலைகளுக்கான அதிபர் நியமனம்: வெற்றிடங்களும் அதற்குரிய அதிபர் தரங்களும்: Reviewed by irumbuthirai on August 14, 2019 Rating: 5

மீண்டும் டெலிக் ஆசிரிய சேவை

August 11, 2019

1960ஆம் ஆண்டு முதல் 90வரை அமெரிக்காவின் தன்னார்வ ஆங்கில ஆசிரியர்களின் சேவை வழங்கப்பட்டு டெலிக் ஆசிரிய பயிற்சி வேலைத்திட்டம் நடைமுறையில் இருந்தது. இந்நிலையில் 2020 ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா தன்னார்வ ஆசிரியர்களின் சேவையை மீண்டும் வழங்க விருப்பம் கொண்டுள்ளது. 

இதன்படி கஷ்டப் பிரதேச பாடசாலை மாணவர்கள் ஆங்கில மொழியில் சரளமாக பேசுவதற்கான திறன் வளர்ச்சிக்காக அமெரிக்க தன்னார்வ ஆசிரியர்களின் சேவையை பெற்றுக்கொள்ள கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

முதலாம் கட்டமாக 30 ஆசிரியர்களுடன் ஆரம்பித்து 150 வரையான ஆசிரியர்களை கொண்ட குழுவின் ஊடாக வசதிகள் குறைந்த பிரதேச மாணவர்களுக்கு சேவை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆங்கில மொழியை இலகுவாக கையாளக் கூடிய தொழிலாளர் படையணியை உருவாக்கி நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்தும் நோக்கில் கஷ்டப் பிரதேச பாடசாலை மாணவர்களின் ஆங்கில மொழியில் பேசும் திறமையை வளர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. 

இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கையின் பிரகாரம் அமெரிக்காவின் அமைதி படையணியின் தன்னார்வ ஆசிரியர்களின் சேவையை பெற்றுக் கொள்வதற்காக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மற்றும் அமெரிக்க தூதுவர் அலெய்னா பீ டெப்லிஸ்ட் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இம்மாதம் 8ஆம் திகதிகல்வி அமைச்சில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
மீண்டும் டெலிக் ஆசிரிய சேவை மீண்டும் டெலிக் ஆசிரிய சேவை Reviewed by irumbuthirai on August 11, 2019 Rating: 5

காஷ்மீரிலோ பரபரப்பு ஆனால் இதற்கோ கடும் போட்டி.

August 10, 2019

பிரச்சினைகளும் போராட்டங்களும் முடிவில்லாத உலகமாக இது மாறிவிட்டது. ஆனால் அந்த பிரச்சினைகளுக்கு மத்தியிலும் சந்தர்ப்பங்களைத் தேடுபவர்கள் இல்லாமல் இல்லை. ஒரு பக்கம் பரபரப்பு. இன்னொரு பக்கம் போட்டி.
காஷ்மீரிலே அண்மைக்காலமாக இடம்பெறும் பிரச்சினைகளை மையப்படுத்தி வருமானமீட்டுவதற்கான போட்டியே இது. ஆம் இந்த காஷ்மீர் பிரச்சினையை சினிமாவாக்க கடும் போட்டி நிலவுகிறது.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்து வழங்கி வந்த சட்டப்பிரிவு 370 ஐ இந்திய அரசு இரத்துச் செய்து விட்டது. இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் பல குரல்கள் இந்தியாவில் மட்டுமல்ல உலகளவிலும் எழுப்பப்படுகின்றன.
நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து சினிமா எடுக்க இந்தி தயாரிப்பாளர்கள் கடும் போட்டி போடுகின்றனர். இந்த சம்பவத்தை மையமாக வைத்து படமாக எடுக்கும் வகையில் தாரா 370, ஆர்டிகிள் 370, காஷ்மீர் ஹமாரா ஹை,  ஆர்டிகிள் 35ஏ உள்ளிட்ட 50 தலைப்புகளை இந்தி தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் இதுவரை பதிவு செய்துள்ளனர். இந்த தலைப்புகளை பதிவு செய்ய கடும் போட்டி நிலவியிருக்கிறது.

விக்கிகவுஷல் நடித்த  தி சர்ஜிக்கல் ஸ்டிரைக் படம் சூப்பர் ஹிட்டானது.  இது யுரி தாக்குதல் சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. அந்த படத்தின் வெற்றியை பார்த்துவிட்டு பாலிவுட் தயாரிப்பாளர்கள் சர்ஜிக்கல் ஸ்டிரைக் 2.0, புல்வாமா: தி டெட்லி அட்டாக்,  உள்ளிட்ட தலைப்புகளை பதிவு செய்தனர். பாலிவுட் படங்கள் பலவற்றின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் காஷ்மீர் குறித்த தலைப்புகளை பதிவு செய்ய கடும் போட்டி நிலவியிருக்கிறது. ஒரு பக்கம் பரபரப்பு. இன்னொரு பக்கம் வருமானத்திற்கான போட்டி.
(மூலம்: கிசுகிசு)
காஷ்மீரிலோ பரபரப்பு ஆனால் இதற்கோ கடும் போட்டி. காஷ்மீரிலோ பரபரப்பு ஆனால் இதற்கோ கடும் போட்டி. Reviewed by irumbuthirai on August 10, 2019 Rating: 5

கணித பாடத்தை விருப்பத்திற்குரியதாக மாற்றும் விஷேட திட்டம் இதுதான்..!

August 10, 2019

கணித பாடம் என்பது அன்று தொட்டு இன்று வரை கசப்பான பாடமாகவே பெரும்பாலான மாணவர்களின் மத்தியில் பதிந்த விடையமாகும். அந்த வகையில் தரம் ஒன்று முதல் 11 வரை கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் கணித பாடத்தை விரும்பமான பாடமாக மாற்றியமைக்கும் விசேட நிகழ்ச்சித்திட்டம் ஒன்றை கல்வியமைச்சின் கணித பிரிவு தொடங்கியுள்ளது.

கணிதம் தொடர்பான எண்ணக்கருக்களை அன்றாட வாழ்க்கையில் பிரயோகப்படுத்துவதன் மூலம் மாணவர்களுக்கு இலகுவாக புரிந்து கொள்ளக்கூடிய வகையில் செயற்பாட்டு ரீதியாக கணிதத்தை தெளிவுபடுத்துவது இதன் நோக்கமாக காணப்படுகிறது.

ஆக்கத்திறன், சிக்கல்களை தீர்க்கும் வல்லமை, தொடர்பாடல் திறன், தர்க்க ரீதியான சிந்தனை போன்ற திறமைகள் மாணவர்கள் மத்தியில் விருத்தி செய்யப்படும். இதற்கிணைவாக கற்றல் வள உபகரணங்களும் பயிற்சிப் புத்தகங்களும் தயார்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பில் 150 பாடசாலைகளை சேர்ந்த அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)
கணித பாடத்தை விருப்பத்திற்குரியதாக மாற்றும் விஷேட திட்டம் இதுதான்..! கணித பாடத்தை விருப்பத்திற்குரியதாக மாற்றும் விஷேட திட்டம் இதுதான்..! Reviewed by irumbuthirai on August 10, 2019 Rating: 5

9-8-2019 அன்று வெளியிடப்பட்ட அரச வர்த்தமானி (முழு விபரம் இணைப்பு)

August 10, 2019

Image result for government gazette
அரச பதவி வெற்றிடங்கள் மற்றும் இன்னும் பல விடையங்கள் உள்ளடங்கலாக 9-8-2019 அன்று வெளியிடப்பட்ட அரச வர்த்தமானியின் முழு வடிவத்தைப் பார்வையிட இங்கே கிளிக் செய்க.


gazette-tamil
9-8-2019 அன்று வெளியிடப்பட்ட அரச வர்த்தமானி (முழு விபரம் இணைப்பு) 9-8-2019 அன்று வெளியிடப்பட்ட அரச வர்த்தமானி (முழு விபரம் இணைப்பு) Reviewed by irumbuthirai on August 10, 2019 Rating: 5

3200 பேரே நியமனத்தில் இணைந்தனர்

August 09, 2019
Image result for government jobs
2018 மே 25ஆம் திகதி அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைய பல கட்டங்களாக பட்டதாரிகளுக்கு பயிற்சியளித்து முதற்கட்டமாக 2018 ஆகஸ்ட் மாதத்தில் 5000 பேரை பயிற்சியில் இணைக்க நடவடிக்கையெடுக்கப்பட்டது. அவர்களில் 3200 பேர் வரையில் தொழில்வாய்ப்புகளை பெற்றுக்கொள்வதற்காக வந்தனர் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருணா எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த பிரதமர் ,முதல் கட்டத்தில் ஐயாயிரம் பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கப்பட்டது. எனினும் அவர்களில் மூவாயிரத்து 200 பேர் மாத்திரம் நியமனங்களை பொறுப்பேற்றதாக கூறினார்.


3200 பேரே நியமனத்தில் இணைந்தனர் 3200 பேரே நியமனத்தில் இணைந்தனர் Reviewed by irumbuthirai on August 09, 2019 Rating: 5

வெளிநாட்டு பணியாளர்களுக்கு உள்ளுர் கட்டணத்தில் அழைப்புக்கள்

August 09, 2019
வெளிநாட்டு பணியாளர்களுக்கு உள்ளுர் கட்டணத்தில் தொலைபேசி அழைப்புக்கள்
வெளிநாடு செல்வோரின் நன்மை கருதி ஸ்ரீலங்கா டெலிகொம் மற்றும் மொபிற்றல் நிறுவனத்தடன் இணைந்து உள்ளுர் கட்டணத்தில் வெளிநாட்டு அழைப்புக்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.
இந்த திட்டம் தொடர்பில்தொலைத் தொடர்பு வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ  நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
(அ.த.தி)
வெளிநாட்டு பணியாளர்களுக்கு உள்ளுர் கட்டணத்தில் அழைப்புக்கள் வெளிநாட்டு பணியாளர்களுக்கு உள்ளுர் கட்டணத்தில் அழைப்புக்கள் Reviewed by irumbuthirai on August 09, 2019 Rating: 5

பட்டம் பெற்ற ஆண்டிற்கே நியமனம்

August 08, 2019

Image result for government jobs

ஒக்டோபர் மாதத்தில் எமது வேலைவாய்ப்புகளில் மந்த நிலை ஏற்பட்டது.. பின்னர் எம்மால் அரசாங்கத்தைப் பெற்றுக்கொண்ட பின்னர் 16 000 பேருக்கு நியமன கடிதங்களை வழங்குவதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டது. அவர்கள் பட்டம் பெற்று வெளியேறிய வருடங்களை அடிப்படையாக கொண்டே நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் நியமனம் வழங்கும் விடயத்தில் எந்தவிதமான பாரட்சமும் காட்டவில்லை, 2018 மே 25ஆம் திகதி அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைய பல கட்டங்களாக பட்டதாரிகளுக்கு பயிற்சியளித்து முதற்கட்டமாக 2018 ஆகஸ்ட் மாதத்தில் 5000 பேரை பயிற்சியில் இணைக்க நடவடிக்கையெடுக்கப்பட்டது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
வெளிவாரிப் பட்டதாரிகளில் பெரும்பாலானவர்கள் ஏற்கனவே தொழிலொன்றில் இருந்துகொண்டே பட்டத்தைப் பெறுவதுடன் அதன் பின்னர் வேலைவாய்ப்புக்களை எதிர்பார்க்கின்றனர். வேலைவாய்ப்புக் கிடைக்கும்போது அது குறித்து திருப்தியடைவதில்லை. பட்டம் பெற்ற ஆண்டை அடிப்படையாகக் கொண்டே நாம் வேலைவாய்ப்புக்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.  


பட்டம் பெற்ற ஆண்டிற்கே நியமனம் பட்டம் பெற்ற ஆண்டிற்கே நியமனம் Reviewed by irumbuthirai on August 08, 2019 Rating: 5
Powered by Blogger.